Category: முக்கிய செய்தி
-
பிரபல இசைக்கலைஞர் டோலி பார்ட்டன் காலமானார்
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் தனது 80வது வயதில் காலமானார். குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு குறித்த செய்தியை சகோதரியின் மகனான பிரையன் சீவர் சமூக வலைத்தளம் வாயிலாகக் குடும்பத்தினர் சார்பில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏழரை தசாப்தகாலமாக (70 ஆண்டுகள்) இசைப் பயணம். 10 கிராமி விருதுகளை வென்று சாதனை. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகள் விற்பனையாகியுள்ளன. பாடல்களை எழுதுவதை…
-
அமெரிக்க-கனடா வர்த்தகப் போருக்கு மத்தியில் ‘லேக் ஒன்டாரியோ’வை ‘லேக் அமெரிக்கா’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிசீலனை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், “லேக் ஒன்டாரியோ” (Lake Ontario) ஏரியின் பெயரை “லேக் அமெரிக்கா” (Lake America) என மாற்ற தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒன்டாரியோவுடன் இனி அதிக வர்த்தகம் செய்யப் போவதில்லை என்பதால் இந்த பெயர் மாற்றம் குறித்து பரிசீலிப்பதாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்க நிர்வாகத்தின் சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை…
-
தெற்கு சுமத்ரா காடுகளில் காட்டுத்தீ
இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா, மேற்கு மற்றும் மத்திய காலிமந்தான் ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. தெற்கு சுமத்ராவில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட தீப் புள்ளிகள் (hotspots) கண்டறியப்பட்டுள்ளன. சுமத்ராவின் தலைநகரான பாலம்பாங்கில் (Palembang) அடர்ந்த புகைமூட்டம் காரணமாக பார்வைத் திறன் (visibility) பெருமளவு குறைந்துள்ளது. பகல் நேரத்திலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை வேண்டி பாலம்பாங் ஆளுநர் அலுவலக வளாகத்தில் சுமார் 3,000 மக்கள் ஒன்று கூடி ‘சலாத்…
-
கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்
ஓமன் அருகே அரபிக்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார்? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து 9 நாட்டிகல் மைல் தொலைவில் ஹோர்முஸ் நீரிணை அருகே இன்று அதிகாலை கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கப்பல் சென்றுள்ளது. அந்த கப்பலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த…
-
அடுத்த மாதம் புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல்
அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள் (Apple) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெமரி சிப்களின் (Memory Chip) விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்கும் வகையில் புதிய விலை நிர்ணயத்தை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் (Google) உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன்…
-
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இராஜினாமா விவகாரம்!
தமிழக சட்டசபையில் இன்று (25) இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தெரிவிக்கையில், 6 தொகுதியில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம்? கூறுவர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “இராஜினாமா செய்யப்பட்ட 6 தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அந்த தொகுதி மக்களின் குறைகள் கேட்கவும், தேவைகளை நிவர்த்தி செய்யவும்…
-
நெதன்யாகு மகனுக்கு குறி.. பயத்தில் இஸ்ரேல் பிரதமர்..? ரகசிய திட்டம் தீட்டிய ஈரான்!
அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு இன்றுவரை விடை கொடுக்கவில்லை. எனினும், அவற்றுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தனது மகன்களில் ஒருவருக்கு ஈரான் குறிவைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது அரசியல் உலகை அதிரவைத்துள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “இது ஒரு நம்பமுடியாத சம்பவம். ஈரான் என் மகன்களில் ஒருவரைக் குறிவைத்தது. ஈரான் அவரைக் கொலை செய்ய முயன்றது” என அதில்…
-
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவரது பயணத்தின் போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு விடயம் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய…
-
அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை! ரத்து செய்யப்பட்டுள்ள இராணுவ பயிற்சி
அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென் கொரியக் கடற்படை தெரிவித்துள்ளது. ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கக் கடற்படை, படைப்பிரிவு அளவிலான இந்த கூட்டுப் பயிற்சிக்குத் தங்களின் படைகள் பங்கு கொள்வதில் சிக்கல் நிலவுவதாக ஜூன் மாதமே தென் கொரியக் கடற்படைக்கு முறைப்படித் தெரிவித்துவிட்டதாக சர்வதேச வட்டாரங்கள்…
-
கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி விதிப்பேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!
அண்டை நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன்படி, கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை…