Category: முக்கிய செய்தி
-
நாட்டின் பல பகுதிகளில் வறட்சி: 81,000க்கும் அதிகமானோர் குடிநீரின்றி தவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில்…
-
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவமாறு, தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. “சல்லேவுக்கான நீதி – கலந்துரையாடல் மன்றம்” என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள், இந்த வலியுறுத்தலை விடுத்தனர். தொடர்ந்து தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் வைத்திருக்கப்படும் சுரேஷ் சல்லேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதிபதி…
-
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சஇ உதய கம்மன்பிலஇ சுகீஸ்வர பண்டாரஇ திலித் ஜயவீரஇ அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராகவே இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு…
-
தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மின்னலுடன் கூடிய புயல்
தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மின்னலுடன் கூடிய புயல் காரணமாக வான்கூவர் விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 9 மணி முதல் ஞாயிறு அதிகாலை 3 மணி வரை மின்னல் அபாயம் காரணமாக விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்கிய விமானங்கள் முனையங்களை (gates) அடைவதும் தடைபட்டன. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் விமான நிலைய முனையங்களின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தெரியவந்தது. நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து நகர்ந்து வந்த குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக வான்கூவர்…
-
பிரித்தானியாவில் தவறான பாதையில் சென்ற கார் பொலிஸ் வாகனம் மீது மோதி 07 பேர் உயிரிழப்பு
வடகிழக்கு பிரித்தானியாவின் சவுத் பேங்க் பகுதியில் சனிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 07 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3:39 மணியளவில், பிரதான வீதியொன்றில் தவறான பாதையில் அதிவேகமாக சென்ற ‘வோக்ஸ்வேகன் பாஸாட்’ ரகக் கார் ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் காரில் பலமாக மோதியதில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. கிளீவ்லேண்ட் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் பணி முடிந்து வீடு திரும்பவிருந்த…
-
மீண்டும் மீண்டும் ஜப்பானை தாக்கிய இயற்கை பேரிடர்.
உலகில் அதிக அளவு இயற்கை பேரிடர்களை சந்திக்கும் நாடு என்றால் அது ஜப்பான்தான். பசிபிக் பெருங்கடலின் பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் (Ring of Fire) ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அதிகளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகின்றன. அதாவது, ஜப்பானில் ஆண்டுதோறும் சராசரியாக 1,500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போல உலகில் உள்ள தீவிரமான எரிமலைகளில் 10% ஜப்பானில்தான் அமைந்துள்ளன. இது போதாது என ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பசிபிக் பெருங்கடலில் உருவாகும்…
-
கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்.. 22 மாலுமிகள் மாயம்.. தேடுதல் பணியில் இந்தியக் கப்பற்படை!!
இந்தியாவில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் வங்கக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், கப்பலில் இருந்த 24 பேரில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 22 மாலுமிகளைத் தேடும் பணியில் 2வது நாளாக இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்த பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.வி. ஓஷன் வின்னர் (MV…
-
வலி.வடக்கில் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம் – சுமந்திரன், சாணக்கியன் நேரில் பங்கேற்பு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பலாலிச் சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று வரும் காணி விடுவிப்புப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர். இதற்கமைய, இன்றைய போராட்டத்திலும் எம்.ஏ.சுமந்திரன்…
-
தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் பாலஸ்தீனியர்களின் வீடுகள் முற்றுகை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள குஸ்ரா (Qusra) கிராமத்தில், தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பாலஸ்தீனியர்களின் வீடுகளைச் சூழ்ந்து முற்றுகையிட்டு, அங்கிருப்பவர்களுக்கான நீர் மற்றும் மின்சார விநியோகத்தைத் துண்டித்துள்ளனர். ஓஹியோவைச் சேர்ந்த பாலஸ்தீனிய-அமெரிக்க தொழிலதிபரான லூயி ரிடி (Loui Ridi), தனது குடும்பச் சொத்தைப் பாதுகாக்கவும், சர்வதேச கவனத்தை ஈர்க்கவும் குஸ்ராவிற்கு நேரில் சென்று தனது வீட்டின் கூரையில் அமெரிக்கக் கொடியை ஏற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சொத்துக்களை அழிப்பது மற்றும் மக்களை அச்சுறுத்துவது போன்ற குடியேற்றவாசிகளின்…
-
கனடாவில் நரிகள் முகாமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் காலணிகளைத் திருடி வருகின்றன.
கனடாவின் சாஸ்காட்செவன் மாநிலத்தில் உள்ள கிரேட் ப்ளூ ஹெரன் மாகாண பூங்காவில் (Great Blue Heron Provincial Park) நரிகள் முகாமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் காலணிகளைத் திருடி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த திருட்டில் ஐந்து நரிகள் கொண்ட குழு ஒன்று சேர்ந்து இயங்குகிறது. இதில் ஒரு நரி வேவு பார்க்க, மற்றொரு நரி கூடாரங்களில் இருந்து காலணிகளைத் திருடிச் செல்கிறது. க்ராக்ஸ் (Crocs), ஃபிலிப்-ஃப்ளாப்ஸ், ரன்னிங் ஷூக்கள், பிர்கன்ஸ்டாக்ஸ் மற்றும் அடிடாஸ் சாம்பாஸ் உள்ளிட்ட…