Category: முக்கிய செய்தி

  • குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், மெட்டா நிறுவனம் அமெரிக்காவின் பல மாகாணங்களுடன் பல பில்லியன் டொலர் மதிப்பிலான சமரச உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, இளம் வயதினரின் சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த மெட்டா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இளம் வயதினருக்கான தினசரி பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் இரவு நேரங்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான தடைகள்…

  • 17 வயது மாணவி, முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை!

    அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த 17 வயதான ஜாடா செல்லர்ஸ் (Jada Sellers) என்ற பிளஸ் டூ பள்ளி மாணவி, அவரது முன்னாள் காதலன் கிறிஸ்டியன் ஹெர்சி (Christian Hursey, 18) என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜாடா செல்லர்ஸ் மில்ஃபோர்ட் மில் அகாடமியில் பயின்று வந்த ஒரு சிறந்த மாணவி. இவர் சமூக வலைதளங்களில் (Tik Tok / Social Media) 2.4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்டிருந்த ஒரு பிரபல இளம் படைப்பாளி ஆவார். ஆகஸ்ட்…

  • விஸ்கான்சினில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கசிவு

    அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள சாட்சன் (Saxon) பகுதியில் இயற்கை எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்று எதிர்பாராதவிதமாக உருண்டு சென்று, இயற்கை எரிவாயுக் குழாயின் மீது மோதியதால் இந்த கசிவு ஏற்பட்டது. வெடிப்பு அபாயத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்த மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பெரும் விபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் மின்சார விநியோகம் தற்காலிகமாக…

  • ரஷ்யாவின் ‘அமேசான்’ வைல்ட்பெர்ரிஸ் மீது ட்ரோன் தாக்குதல்

    ரஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான வைல்ட்பெர்ரிஸ் (Wildberries), உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு மீண்டும் இலக்காகியுள்ளது. ரஷ்யாவின் தம்போவ் (Tambov) பிராந்தியத்தில் அமைந்துள்ள வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்தின் முக்கிய லாஜிஸ்டிக்ஸ் (விநியோக) மையம் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் மேற்கொண்டு வரும் இந்தத் தொடர் தாக்குதல்களில், இதுவரை வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 கிடங்குகள் (Warehouses) இலக்கு வைக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மிகப்பெரிய மின்-வணிக (e-commerce) தளமாக விளங்கும் வைல்ட்பெர்ரிஸ் நிறுவனம், அந்நாட்டின் விநியோகக் கட்டமைப்பில் முக்கியப் பங்கு…

  • ஹார்முஸில் புதிய தற்காலிக பாதை குறித்து ஈரானும் ஓமானும் உடன்பாடு

    ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையே தெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையில் 7 மைல் (11.3 கி.மீ) அகலமுள்ள புதிய தற்காலிக கப்பல் பாதையை உருவாக்க இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் வர்த்தகக் கப்பல்கள் ஈரானின் பிராந்திய கடல் எல்லை வழியாகச் செல்லும். வெளியேறும் பாதையின் ஒரு பகுதியும் ஈரானிய எல்லை வழியாகச் சென்று, பின்னர் ஓமானியக் கடற்பகுதியுடன் இணையும். இந்த தற்காலிக ஏற்பாடு வணிக மற்றும் வர்த்தகக் கப்பல்களுக்கு…

  • சர்வதேச நாய்கள் தினம் இன்று

    இன்று சர்வதேச நாய்கள் தினம் ஆகும். நாய்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் 400 பில்லியன் நாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் நாய்களுக்கு மனிதர்களை விட நான்கு மடங்கு சிறந்த பார்வையும் கேட்கும் திறனும் உள்ளன. உலகிலேயே மிகவும் புத்திசாலியான நாய் எகிப்திய சலூக்கி இனத்தைச் சேர்ந்த ‘இனா’ ஆகும்.

  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!

    கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் வைத்து குறித்த மூன்று தமிழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காணாமல் போன மாடுகளைத் தேடியே குறித்த மூவரும் வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிவித்துள்ளனர். மான்…

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆலோசகர் பதவியை ஏற்பதற்காக, அணியின் பங்குகளில் கணிசமான பங்கை வழங்குமாறு முன்னாள் இந்திய அணியின் தலைவர் தோனி கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎஸ்கே அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்கத் தயாராக உள்ள தோனி, ஆரம்பத்தில் அணியின் 25 சதவீத பங்குகளைக் கோரியுள்ளார். இதனையடுத்து, அது குறித்து பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தோனி கேட்ட சதவீதத்தை வழங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்த நிலையில், இறுதியில்…

  • 47 ஆண்டுகளுக்குப் பிறகு.. அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு.. ஆச்சர்யத்தில் சிரியா!

    1979-ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று சிரியாவை, தனது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. சிரியாவின் அப்போதைய அதிபர் ஹாஃபிஸ் அல்-அசாத் (Hafez al-Assad) தலைமையிலான அரசு, சர்வதேசப் பயங்கரவாதச் செயல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்ததே இதற்குக் காரணமாகப் பார்க்கப்பட்டது. இதையடுத்து, அந்நாடு பொருளாதாரத் தடைகளையும் சந்தித்தது. இந்த நிலையில், சிரியாவில் உள்நாட்டுப் போர் 14 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு…

  • பிரபல இசைக்கலைஞர் டோலி பார்ட்டன் காலமானார்

    உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி இசைக்கலைஞரான டோலி பார்ட்டன்  தனது 80வது வயதில் காலமானார். குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு குறித்த செய்தியை சகோதரியின் மகனான பிரையன் சீவர் சமூக வலைத்தளம் வாயிலாகக் குடும்பத்தினர் சார்பில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏழரை தசாப்தகாலமாக (70 ஆண்டுகள்) இசைப் பயணம். 10 கிராமி விருதுகளை வென்று சாதனை. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகள் விற்பனையாகியுள்ளன. பாடல்களை எழுதுவதை…