Category: முக்கிய செய்தி

  • 100 ஆண்டுகளில் இல்லாத மழை.. தத்தளிக்கும் கனடா.. தொடரும் மீட்புப் பணி!!

    கனடாவில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பிற்பகல் டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோ பகுதிகளில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் தாக்கியது. சில மணி நேரங்களிலேயே இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. அந்நாட்டில், ஆகஸ்ட் மாதத்தின் சராசரி மழையளவே சுமார் 78 மில்லி மீட்டர் என்ற நிலையில், டொராண்டோவில் ஒரே இரவில் 150 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. கனமழையுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றும் வீசியதால், நகரின்…

  • ஈரான் போர் அமெரிக்க ராணுவத்தை அழித்தது எப்படி?

    அமெரிக்காவின் போருக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் பென்டகனை (pentagon) விட்டு வெளியேறி வருகின்றனர்; தற்போதைய ஈரான் போர் அமெரிக்காவின் ஆயுத இருப்பைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் பதவிக்காலத்தில் இதுவரை 21 மூத்த ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது தாங்களாகவே பதவி விலகியுள்ளனர். அமெரிக்காவின் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் முதல் கடற்படை செயல்பாட்டுத் தலைவர், விமானப்படைத் தலைவர், தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் பாதுகாப்பு உளவுத்துறை…

  • பிறப்புறுப்பைத் திருடும் திருடர்கள்

    “பிறப்புறுப்பைத் திருடும் திருடர்கள்?” இந்த வார்த்தையைக் கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறி, ’திருடர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட மக்களை அடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம். சமூக ஊடகங்கள் எந்த அளவுக்கு உண்மையான தகவல்களைப் பரப்புகின்றனவோ, அதே அளவுக்கு பொய்யான தகவல்களையும் பரப்புகின்றன. இவ்வாறு பரவிய ஒரு பொய்யான வதந்தியால் 80-க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு,…

  • சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 300 பேர்

    கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி சீனாவுக்கு சொந்தமான திபெத் பகுதியில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று தனது கடின தன்மையை இழந்து உடைந்தது. தொடர்ந்து அந்த நீர் நிலச்சரிவால் ஒரே இடத்தில் தேங்கி பின்னர் மொத்தமாக ஒரே நேரத்தில் வெளியேறியது. இதன் காரணமாக சுனாமி வேகத்தில் வந்த வெள்ள நீர், போதேகோஷி (Bhote Koshi) மற்றும் திரிசூலி ஆற்றின் வழியாக நேபாளத்துக்குள் பாய்ந்தது. பல மீட்டர் தூரம் உயரத்துக்கு வந்த இந்தப் பெருவெள்ளம் காரணமாக நேபாளத்தில் பெரும்…

  • மம்தா பானர்ஜி வீட்டில் சோகம்.. மருமகள் சடலமாக மீட்பு!!

    முன்னாள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான நிஹார் முகர்ஜியின் மகள்  பிரிஷ்டி முகர்ஜி, அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு வயது 28. பிரிஷ்டி முகர்ஜி ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அவர் முறைகேடாக நியமனம் பெற்றார் என நீதிமன்றம் அவரது ஆசிரியர் நியமனத்தை சமீபத்தில் ரத்து செய்தது. இதனால், அவர் தொடர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது கணவருடன்…

  • அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்

    ராமர் கோயில் நிர்வாகப் பொறுப்புக்கு 5,585 பேர் விண்ணப்பித்த நிலையில், அதில் படிப்படியாக பலர் நீக்கப்பட்டு இறுதியாக ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இத்தேர்வுக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.கே.சதுர்வேதி மற்றும் அணு விஞ்ஞானி சுரேஷ் ஹவாரே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டம், பட்பர் ராணி பகுதியின் போபத்புரா கிராமத்தில் பிறந்த இவர், 1986ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் போர் விமானியாகச் சேர்ந்தார். அத்துறையில்…

  • இலங்கை மனித உரிமை அறிக்கை செப். 7-இல் தாக்கல்

    ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை 63 ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் செப்டெம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா…

  • நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்!

    நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார்…

  • உலகப் புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகிக்கு ரூ.11,000 கோடி கடன்

    பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி​யின் ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) என்ற நிதி மேலாண்மை புத்​தகம் 1997-ல் வெளி​யானது. இது​வரை 4.4 கோடிக்​கும் அதி​க​மான பிரதிகள் விற்​பனை​யாகி உள்​ளன. இதன் மூலம் பெரும் புகழும் செல்​வ​மும் ஈட்​டிய 79 வயதான கியோ​சாகிக்கு சுமார் 1.2 பில்​லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 ஆயிரம் கோடி) கடன் இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. தனது ரியல் எஸ்​டேட் வர்த்​தகம் முழு​வதுமே சுமார் 1.2 பில்​லியன் டாலர் கடனின்…

  • ஒட்டாவா நெடுஞ்சாலை 417-ல் நடந்த விபத்தில் ஒருவர் பலி

    ஒட்டாவாவில் உள்ள நெடுஞ்சாலை 417-ன் (Highway 417) கிழக்கு திசைப் பாதையில், பார்க்லே அவென்யூ (Parkdale Avenue) அருகே புதன்கிழமை இரவு 8:15 மணியளவில் நடந்த விபத்தில் பாதசாரி ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார். ஓன்டாரியோ மாகாணக் காவல்துறை (OPP) மற்றும் துணை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது. இந்த விபத்தில் உள்ளூர் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான (OC…