Category: முக்கிய செய்தி

  • பேரழிவின் விளிம்பில் பனிப் பாறைகள்..

    கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தில் பனிப்பாறையில் ஏற்பட்ட வெடிப்பு பெரும் வெள்ளமாக உருவெடுத்து நேபாளத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பனி பாறையில் ஏற்பட்ட வெடிப்புக்கு எல் நினோ, உலக வெப்பமயமாதல் போன்றவை காரணமாக கூறப்பட்டாலும், இதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான Regional Environmental Change என்ற அறிவியல் ஆராய்ச்சி இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. இமயமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில்,…

  • சீன பிரஜை படுகொலை : மேலும் ஒருவர் கைது

    கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 23, 2026 அன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (செப்டம்பர் 04) கொழும்பு துறைமுக நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது 54 வயதுடைய சீனப்…

  • மாறாயிலுப்பை, புதுக்குளம் வயல்காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்

    வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட மாறாயிலுப்பை மற்றும் புதுக்குளம் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். மாறாயிலுப்பை கமக்கார அமைப்புப் பிரிவிலுள்ள புதுக்குளத்தின் கீழ் 14 விவசாயிகளுக்குச் சொந்தமான 52 ஏக்கர் பூர்வீக வயல்காணிகள் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை இழந்த நிலையில், தற்போது அவற்றை காண்பிக்குமாறு கோருவது நியாயமற்றது…

  • 2027-ல் 50 ஆண்டில் இல்லாத பேராபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை.!

    பசிபிக் பெருங்கடலில் வழக்கத்தை விட வெப்பம் 2 டிகிரி செல்ஸியஸ் அளவு அதிகரிக்கும் நிகழ்வே ‘எல் நினோ’ என அழைக்கப்படுகிறது. அப்படி எல் நினோ உருவானால் அது உலகம் முழுவதிலும் பெரும் வானிலை மாற்றங்களையும், பேரழிவுகளையும் ஏற்படுத்தும். இந்த ஆண்டு ‘எல் நினோ’ உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில், கணிப்புக்கு மாறாக பசிபிக் பெருங்கடலில் வெப்பம் கடுமையாக அதிகரித்ததால் ‘சூப்பர் எல் நினோ’ (Supersized El Niño) உருவானதாக அறிவிக்கப்பட்டது. அதாவது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு…

  • சூப்பர் எல் நினோ காரணமாக பசிபிக் கடலில் அடுத்தடுத்து 3 சூறாவளிகள் உருவாக உள்ளது.

    பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்திற்கு மாறாக நீர் வெப்பம் அடைவதை தான் எல் நினோ என்று அழைக்கிறார்கள். எல் நினோ உருவாகி இருப்பதால், உலக அளவில் இயல்பான மழைப்பொழிவு முறையில், மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படுகிறது. வறட்சி, மழைப்பொழிவு ஆகிய இரண்டும் ஒருசேர அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வறட்சியும், தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் கடுமையான மழைப்பொழிவையும், எல்.நினோ ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஏற்கனவே உள்ள எல்.நினோ சூப்பர் எல்.நினோவாக மாறியதால், கடலின்…

  • நாமல் எம்.பி. கைது – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடு முழுவதும் சென்று…

  • வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார் நாமல் எம்.பி.

    இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

  • உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகள் குறைப்பு

    உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மயூர நெத்திகுமார, இன்று (04) நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வருவதாகத் தெரிவித்தார். அதன்படி, ஒரு லீற்றர் நெப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 175 ரூபாய் வரை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலையையும் 248 ரூபாயிலிருந்து 210 ரூபாய் வரை 38 ரூபாயினால் குறைக்க பெற்றோலியக்  கூட்டுத்தாபனம்…

  • நேபாள வெள்ளப்பெருக்கு: கனேடிய குடிமகன் பாதுகாப்புடன் மீட்பு

    நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட கனேடிய குடிமகன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாகக் கனேடிய உலக விவகாரத் துறை (Global Affairs Canada) உறுதிப்படுத்தியுள்ளது. நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் வசிக்கும் அல்லது பயணம் மேற்கொண்ட மேலும் 29 கனேடியர்கள் மற்றும் நிரந்தர வசிப்பிட உரிமையாளர்களின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுடன் அதிகாரிகள் தொடர்புகொள்ள முயன்று வருவதால் இந்த எண்ணிக்கை மாறக்கூடும். கடுமையான சூழ்நிலைகள்…

  • பெண்ணுக்கு பாலியல் தொல்லை? காவல் சாமியாக வந்த நாய்

    கோவை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், பெட்டிக்கடை ஒன்றிற்கு தீ வைத்துவிட்டதாக, காவல்நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்று தங்களது விசாரணையை தொடங்கினர். விசாரணையின் முதற்படியாக, பெட்டிக் கடை அமைந்திருந்த இடத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை கைப்பற்றிய காவல்துறையினர், அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெட்டிக்கடைக்கு யார் தீ வைத்தார்கள் என்பதை காட்டிலும், மிகப்பெரிய சம்பவம்…