Category: முக்கிய செய்தி
-
எபோலா தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000யை கடந்துள்ளது. அரசு தரவுகளின்படி, கடந்த மே மாதம் மத்தியில் பரவத் தொடங்கிய இத்தொற்றால் இதுவரை 6,186 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 3,007 பேர் உயிரிழந்தனர். கொங்கோவில் தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ, தடுப்பூசியோ ஏதுமில்லை. இருப்பினும், எபோலாவுக்கு சிகிச்சையளிக்க உதவும் எர்வெபோ தடுப்பூசி, இந்தத் தீநுண்மிக்கு எதிராகவும் ஓரளவு பாதுகாப்பை அளிக்கக்கூடும்…
-
வியட்நாமின் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு – 11 பேருக்கு மரண தண்டனை
வியட்நாமில் இடம்பெற்ற பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 11 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மொத்தம் 227 பேர் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில், ஏனையவர்களுக்கு 18 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில், பிரான்சிலிருந்து வியட்நாமுக்கு போதைப்பொருட்களை கடத்த ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் வலையமைப்பின் முக்கிய நபரான ஹா டான் நாம் என்பவரும் அடங்குகிறார். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த…
-
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை – மார்கோ ரூபியோ எச்சரிக்கை
ஈரானுக்கு உதவும் வகையில் செயற்படும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை கடந்த புதன்கிழமை (02) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தாம்…
-
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் செய்த சாதனை
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது. 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர…
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி: இந்திய – இலங்கை இடையே விசேட கலந்துரையாடல்
இந்திய அரசின் ஆதரவுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்திய – இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் தலைமையில் இன்று (03) முற்பகல் அமைச்சு வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் மைத்திரி குல்கர்னி உட்பட பிரதிநிதிகள் குழுவினர் இதில் கலந்துகொண்டனர். பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின்…
-
இந்திய கப்பல் ஏற்றுமதிக்கு பிரதான இலக்காகும் இலங்கை
இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் தொழில்துறை தொடர்புகள் பலப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு வௌியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் கப்பல் ஏற்றுமதி சுமார் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 6 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உள்ள…
-
ஐ.நாவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்க இடையே 6 மாதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஈரானின் குசிஸ்தான், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான், ஹோர்மொஸ்கான் மற்றும் கெர்மான் ஆகிய மாகாணங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், சேவை மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஈரானின் ஹோர்மொஸ்கான் மாகாணத்தின் சிரிக்கு மாவட்டத்தில் உள்ள கூஹெஸ்டாக்…
-
ஃபுளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில் ஜூரி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது:
22 வயதான அலானா சிம்ஸ் (Alana Sims) மற்றும் அவரது கருவிலுள்ள குழந்தையைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராப்பர் பில்லி ஆடம்ஸ் III (Billy Adams III – Ace NH) என்பவருக்கு, கருவிலுள்ள குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக 8-4 என்ற வாக்கு வித்தியாசத்தில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஜூரி பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில், தாயான அலானா சிம்ஸின் கொலைக்கு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வாக்களித்துள்ளது. ஜூரியின் இந்தத்…
-
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் காரணமாக அது முன்னர் இருந்ததைவிட “மிகவும் சூடாக” இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை முக்கிய பங்கு…
-
நீர்யானைக்கு பெயர் சூட்ட பொதுமக்களுக்கு வாய்ப்பு!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த குட்டி நைல் நீர்யானைக்கு (Nile Hippopotamus) பெயர் பரிந்துரைக்கும் வாய்ப்பு விலங்கு நல ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த இந்தக் குட்டி நீர்யானைக்குப் பொருத்தமான பெயர்களை இணையவழிப் படிவம் (Online Form) மூலமாகச் சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களுக்கு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், ஒதுக்கப்பட்ட இணையவழிப் படிவத்தின் மூலம் தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து பெயர்களைப் பரிந்துரைக்கலாம். மிருகக்காட்சிசாலையின் இந்தப் புதிய…