Category: முக்கிய செய்தி
-
22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டம்
“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” என்ற முழக்கத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (24) காலை 9.00 மணிக்கு பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் நடைபெறவுள்ளது. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை, நிலவும் சர்ச்சைக்கிரிய சூழலைக் காரணம் காட்டி, இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில்லை…
-
புத்தகம் வாசிப்பவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது.
சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் ஸ்மார்ட் போனில் அதிக நேரங்களை செலவிடுவதால், வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டதாக கருதப்படுகிறது. இதனால் வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுக்க, வாசிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது. சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியம், இதற்காக 5 ஆண்டு கால தேசிய வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதிபெற ஒரு வாசிப்பு அமர்வு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு அமர்வு…
-
ஐ.நா. பொதுச்சபையில் Instagram reels பார்த்துக்கொண்டிருந்த சிரியா ஜனாதிபதி
ஐ.நா. பொதுச்சபையில் சிரியா ஜனாதிபதி Instagram reels பார்த்துக்கொண்டிருந்த வீடியோ வைரலாகிவருகிறது. நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) கூட்டத்தில், சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா (Ahmed al-Sharaa), துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) உரையாற்றும் நேரத்தில் தனது கைப்பேசியில் Instagram-இல் வீடியோக்களை (Reels) ஸ்க்ரோல் செய்த காட்சி கமெராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. பலரும், இது மிகவும் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய (relatable)…
-
மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை!
ஜப்பானில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டு போட்டியில், வடகொரிய வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்றிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சோத்துக்கே வழியில்லை.. கெடுபிடியான நாடு, ராணுவ ஆட்சி.. இப்படியெல்லாம் பேசப்பட்ட நாடுதான் தங்கம் பெற்று அசத்தியிருக்கிறது. வடகொரியா என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, சைட் கிராப் வெட்டப்பட்ட குட்டை மனிதரான கிம் ஜாங் உன்-தான். அதெல்லாம் ஒரு நாடே கிடையாது.. அங்கெல்லாம் மக்கள் எப்படிதான் வாழுறாங்களோ! என்று மொத்த உலகமும் பேசி வருகிறது. ஆனால் அங்கிருந்துதான்…
-
போர்நிறுத்தம் நீடிக்கும் நிலையிலும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்!
காசாவில் போர்நிறுத்தம் அமலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஒரு வாகனம் குறிவைக்கப்பட்டதாக உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மது அபு அல்வான் எனவும், அவர் ஹமாஸ் அமைப்பின் நிதிப் பிரிவின் தலைவராக இருந்ததாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த அடையாளம் மற்றும்…
-
ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு(UKMTO) தெரிவித்துள்ளது. அதன்படி, அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று சரக்குக் கப்பலைத் தாக்கியதில், அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்ததுடன், கட்டுப்பாடின்றி கடலில் மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு…
-
தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது! UNIFIL தெரிவிப்பு
தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது என்று லெபனானுக்கான ஐ.நா.இடைக்காலப் படை (UNIFIL) கூறியுள்ளதுடன், மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அரசியல் உறுதிப்பாடு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இந்தக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. தெற்கு லெபனானின் நக்கூரா நகரில் உள்ள தனது தலைமையகத்தில், UNIFIL நேற்று(21) ஒரு விழாவுடன் இந்த தினத்தைக் கொண்டாடியது. இதன்போது,லெபனானுக்கான ஐ.நா.இடைக்காலப் படை…
-
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா – உக்ரைன் விரைவில் ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை!
நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரைனும் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளுமே போரை நிறுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். “போரில் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. இரு தரப்புமே இந்த நிலை நீடிப்பதை விரும்பவில்லை. எனவே விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன். இது…
-
அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா – ஈரான் ரகசியத் திட்டம்!
அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா–ஈரான் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அரசு தயாரித்ததாகக் கூறப்படும் 44 பக்க ஆவணம் ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த ஆவணத்தின்படி, அமெரிக்கா–ஈரான் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பே, ரஷ்யாவும் ஈரானும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பொருளாதாரம், எரிசக்தி, நிதி மற்றும் அணுசக்தி துறைகளில் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் 2024 செப்டம்பர்…
-
தொல்லை கொடுக்கும் ட்ரம்ப்… பிரான்சுடன் நெருக்கம் காட்டும் கனடா
பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொள்ள கனடாவும் பிரான்சும் முடிவு செய்துள்ளன. ட்ரம்ப் தொடர்ந்து கனடா முதலான பல நாடுகளுக்கு தொல்லை கொடுத்துவரும் நிலையில், கனடா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தனது சமூக ஊடகப்பக்கத்தில் உலக வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார் ட்ரம்ப். கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியிலுள்ள பிரான்சுக்கு சொந்தமான Saint-Pierre மற்றும் Miquelon, மற்றும் சில கடல் கடந்த பிரதேசங்களும்…