Category: முக்கிய செய்தி
-
துருக்கியில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் காயம்
துருக்கியில் பள்ளி ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பேர் காயமடைந்துள்ளார்கள். துருக்கியின் Turgutlu மாவட்டத்திலுள்ள Manisa என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இன்று காலை 8.00 மணியளவில் பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில்,…
-
பிரித்தானிய பிரதமர் நியூயோர்க் பயணம்!
பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டி பர்ன்ஹாம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப் பயணத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் முதன்முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தனது நாட்டின் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் பர்ன்ஹாம், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையைப் பின்பற்றவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள மேலதிக…
-
உக்ரைன் போர்: ‘ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் வடகொரியத் தொழிலாளர்கள்’ – இருநாடுகளுக்கும் என்ன பலன்?
ரஷ்யா, சீனா, வடகொரியா நட்பு நாடுகள் என்பது உலகமே அறிந்தது. இதில் ஒரு நாட்டிற்குப் பிரச்னை என்றால், மற்ற இரு நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் களத்தில் இறங்கி உதவும். அப்படித்தான் ரஷ்யப் போரிலும் சீனாவும், வடகொரியாவும் ரஷ்யாவிற்குத் தொடர்ந்து மறைமுகமாக உதவி வருகின்றன. இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிற்கு வடகொரியா ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம், நேர்காணல் ஒன்றில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய தகவல்…
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு: “நாங்கள் காரணமா? Hitler Strategy இது” – அமெரிக்காவைச் சாடும் ஈரான்
தற்போது உலக அளவில் எகிறியிருக்கும் கச்சா எண்ணெய்யின் விலைக்கும், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிற்கும் ஈரான் போரும், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலும்தாம் காரணம். இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என ஈரான் போரில் இருக்கும் மூன்று நாடுகளுக்குமே பங்குண்டு. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு நீங்கள்தான் காரணம்… நாங்கள்தான் காரணம் என்று அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன.இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை…
-
ட்ரம்ப் போட்ட தடை; வெள்ளை மாளிகை கவரேஜைப் புறக்கணித்த US செய்தி நிறுவனங்கள்
அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை அதிகம் விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களில் முக்கியமானவை – CNN, MS NOW மற்றும் Politico. இதை ட்ரம்ப் விரும்பவில்லை. இதனால், இந்த மூன்று செய்தி நிறுவனங்களையும் ‘போலிச் செய்திகளைப் பரப்புகின்றன’ என்று வெள்ளை மாளிகைக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை செய்தார் ட்ரம்ப். இந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியானது. போலிச் செய்திகளைப் பரப்பினால் (அதாவது ட்ரம்ப்பை விமர்சிக்கும் செய்திகளை வெளியிட்டால்) இன்னும் பல செய்தி நிறுவனங்கள்…
-
`Views அதிகமாகணும்!’ – 9 வயது சிறுவன் செய்த Click… அப்பாவின் ₹1.13 கோடி காலி!
YouTube-ல் வீடியோ போட்டால் views வரணும், subscribers அதிகமாகணும் என்பதுதான் பல Content Creators-ன் ஆசை. ஆனால், அதற்காக ஒரு 9 வயது சிறுவன் செய்த காரியம் தற்போது இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது! அமெரிக்காவைச் சேர்ந்த Mike என்ற சிறுவன் ‘Mighty Mike Plays’ என்ற YouTube சேனலில் Minecraft மற்றும் Roblox கேமிங் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். வீடியோக்களுக்கு போதிய views வராததால் அவர் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது தந்தை Dave முதலில் ஒரு…
-
“டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்” – உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது அமெரிக்கா. இந்தப் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை, தடைகள், சட்டங்கள் எனக் கடுமையாக முயன்று வருகிறார். இந்தச் சமயத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவின் தற்போதைய நிலை என்று தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… “உக்ரைன் உடனான போரின் காரணமாக, துரதிர்ஷ்டவசமாக ரஷ்யா தனது டீசல் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ரஷ்யாவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான டீசல் சுத்திகரிப்பு…
-
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு விடுதலையையும், மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியிலே நேற்று (21) மாலை மெழுகுதிரி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது. தன்னார்வ இளைஞர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 3 ஊடக நிறுவனங்கள் வழக்கு
மூன்று அமெரிக்க ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக CNN, Politico மற்றும் MS NOW ஆகியன தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தடையை அறிவித்திருந்தார். குறித்த நிறுவனங்கள் தனது குழுவைப் பற்றி “கட்டுக்கதைகள் அல்லது போலியான தகவல்களை” எழுதுவதாகக் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இந்நிலையில், சனிக்கிழமை தங்கள் நிருபர்களுக்கு வெள்ளை மாளிகை கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.…
-
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கு – தீர்ப்பு இன்று
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ளது. நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கில் அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள்…