Category: முக்கிய செய்தி

  • லண்டன் சுறாக்களுக்கு நடுவே காதலன் செய்த வேலை.

    காதலியிடம் லவ் புரொபோஸ் செய்ய வேண்டுமானால், இதற்காகவே ஆண்கள் பலரும் அழகான இடத்தைத் தேடுவார்கள்.. சிலர் பீச், மலைப்பகுதி, ஸ்டார் ஓட்டல் என வித்தியாசமான இடங்களைத் தேர்வு செய்து, தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். காதலிக்கு மிகவும் பிடித்தது சுறாக்கள் என்றால், சுறாக்களுக்கு நடுவிலேயே தன்னுடைய விருப்பத்தை கேட்ட நினைத்துள்ளார்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையர், வென்டோவர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வால்ஷ். இவருடைய…

  • ட்ரம்ப் தடை விதித்த 3 ஊடக நிறுவனங்களுக்கான வெள்ளை மாளிகை அணுகலை மீண்டும் வழங்க உத்தரவு

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்திருந்த CNN, MS NOW மற்றும் Politico ஆகிய மூன்று ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகைக்கான அணுகலை மீண்டும் வழங்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்திற்கான மாவட்ட நீதிபதி திமொத்தி கெல்லி பிறப்பித்துள்ள தற்காலிக உத்தரவின்படி, குறித்த மூன்று ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கான ஊடக அனுமதிச்சீட்டுகளை உடனடியாக மீள வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  • இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடம்; அம்பானி 2ஆம் இடம்

    2026ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.9.22 இலட்சம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.8.63 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் குடும்பத்தினர் ரூ.3.39 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். சைரஸ் எஸ். பூனாவாலா, ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, குமார் மங்கலம் பிர்லா, திலீப் ஷாங்வி, அசிம்…

  • உலக நாடுகளுக்கு சீனா கொடுத்த அதிர்ச்சி!

    இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கம்யூனிஸ்ட் நாடான சோவியத் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் வல்லரசுகளாக உருவெடுத்தன. சுமார் 40 ஆண்டுகள் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்த பனிப்போர் 1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது. இதனால் உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா திகழ்ந்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மற்றொரு வல்லரசாக சோவியத்தின் இடத்தில் மற்றொரு கம்யூனிச நாடான சீனா உருவாகியுள்ளது. சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக…

  • ‘ரஷ்யாவிடம் வாங்குவதை நிறுத்த முடியாது..’ இந்தியாவுக்கு சிக்கல்? நிர்மலா சீதாராமன் சொன்ன காரணம்!

    ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் காரணமாக, ரஷ்யா தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்யை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கணிசமான அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்கும்…

  • வரலாற்றில் இல்லாத அளவில் வைரத்தின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

    உலகின் மதிப்பு மிக்க பொருள்களில் ஒன்றாக வைரங்கள் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் மிக குறைந்த அளவில், சில இடங்களில் மட்டுமே இந்த வைரங்கள் கிடைத்து வந்ததால் அதன் விலை சாமானியர்களுக்கு எட்டாத வகையிலேயே இருந்து வந்தது. ஆனால் 1950-களில் அமெரிக்காவில் செயற்கை வைரங்கள் உருவாக்கப்பட்டது ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரங்கள் சந்தையில் விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில் செயற்கை வைரங்களும் இயற்கை வைரங்களுக்கு இணையான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால்…

  • முல்லைத்தீவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை

    முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (24) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை மற்றும் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். இதன்போது மகள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், இருவரும் சிகிச்சை பலனின்றி…

  • ஷார்ஜாவில் கொடூரம்.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட இந்தியரின் உடல்.. மனைவி, மகன் மாயம்!

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக்குப் பிறகு அவரது மனைவியும், மகனும் ஷார்ஜாவை விட்டு வெளியேறி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபூரைச் சேர்ந்தவர் ஆல்வின் பிரகாஷ் குந்தர் (38). இவர் கடந்த 14 ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா விமான நிலையத்தில்…

  • அமெரிக்காவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் – ஐ.நா. உரையில் ஈரான் ஜனாதிபதி

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சுமார் ஏழு மாதகால யுத்தத்தின் மத்தியில் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்றும், எனினும் மோதலுக்கு இராஜதந்திர தீர்வை எட்டத் தயார் என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். ஏதேனுமொரு உடன்பாட்டை எட்டத் தவறினால் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலளித்த பெசெஷ்கியன், தடைகள், அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரானிய மக்களின் எதிர்ப்புறுதி மேலும் அதிகரிக்கும் என்பதை…

  • தீப்பிடித்த சுற்றுலா பஸ்; தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் பலியான சோகம்; ஜன்னல் வழியாகத் தப்பிய பயணிகள்

    சுற்றுலா பஸ் ஒன்று நேற்று இரவு டெல்லி நொய்டாவில் இருந்து கிளம்பி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பஸ் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜெவார் விமான நிலையம் அருகில் இன்று அதிகாலையில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. அந்த நேரத்தில் அனைத்துப் பயணிகளும் உறக்கத்தில் இருந்தனர். இதனால் பயணிகளால் பஸ் தீப்பிடித்தவுடன் தப்பிக்க முடியவில்லை. இதனால் தீயில் கருகி 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல பயணிகள் பஸ்…