Category: முக்கிய செய்தி
-
தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு!
இலங்கை: தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், பொது மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-
பிலியந்தலயில் துப்பாக்கிச்சூடு!
பிலியந்தல, போகுந்தர பகுதியில் இன்று (19 ஜூலை 2026) காலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொரலெஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொரலெஸ்கமுவ, ஓ.பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் புகுந்த நால்வர், அங்கிருந்தவர்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு பிலியந்தலை நோக்கி தப்பியுள்ளனர். சந்தேகநபர்கள் தப்பி ஓடுவது குறித்த தகவல் கிடைத்ததும்,…
-
அமெரிக்க அதிபர் கனடாவிற்கு கடும் எச்சரிக்கை
கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீப் புகை மூட்டம் காரணமாக 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பாதிக்கப்படலாம் என்பதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் (MetLife Stadium) ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறவிருந்த சூழலில், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது இதற்கு முக்கிய காரணமாகும். காட்டுத்தீயில் இருந்து தெற்கு நோக்கி பரவும் புகையின்…
-
கனடாவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று
கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். வெளிநாடுகளில் (குறிப்பாக மெக்ஸிகோ போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில்) இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்படும் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் மூலம் இது பரவுகிறது. முன்னைய காலங்களில் கீரை வகைகள் (Lettuce), கொத்தமல்லி , துளசி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பச்சையாக உண்ணும் உணவுகள் மூலம் இந்த…
-
சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் இன்று திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, மெட்டா (Meta) நிறுவனத்தின் பேஸ்புக் தளத்தின் டெஸ்க்டொப் (Desktop) பதிப்பே இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயனர்கள் உள்நுழைய முயன்றபோது, ‘தளச் சிக்கல் காரணமாக உங்கள் கணக்கு தற்போது கிடைக்கவில்லை. இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து சில நிமிடங்களில் மீண்டும்…
-
ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா
ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் காணாமல் போனதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உறுதி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், இந்த தொடர் எதிர் தாக்குதல்கள் நேற்று இரவு (18) தொடங்கப்பட்டன. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதையும், அமெரிக்கப்…
-
போதைப்பொருள் வலையமைப்பின் மீது காவல்துறையினரின் அதிரடி தாக்குதல்
பிலியந்தலை – போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கையின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தின் போது மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
-
ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம்
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது. உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப் (Chip) பற்றாக்குறையே இந்த விலையேற்றத்திற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு, ஜப்பானைத் தொடர்ந்து விரைவில் பிற நாடுகளிலும் அமுல்படுத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
செம்மணி விவகாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விசாரணைகள்!
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை (22) சம்பவ இடத்தைப் பார்வையிடவுள்ளது. செம்மணியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வில் இதுவரை 423 மனித என்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று, யாழ்ப்பாணம் செம்மணியின் மிகப்பெரிய என்புக்கூட்டுப் புதைகுழியை எதிர்வரும் புதன்கிழமை அன்று பார்வையிடவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோ தலைமையிலான இத்தூதுக்குழுவில், இத்தாலியத் தூதர் டாமியானோ…
-
டெங்கு பாதிப்பு: பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெண்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தற்போது பதிவாகும் டெங்கு மரணங்களில் சுமார் 70 சதவீதமானோர் பெண்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளில் 88 சதவீதமானோர், டெங்கு வைரஸின் இரண்டாம் வகையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.