Category: முக்கிய செய்தி

  • கடற்பரப்புகள் கொந்தளிப்பு – விசேட எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

    இலங்கையில்,ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. அறிவிப்பின்படி, குறித்த கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த…

  • 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணியுடன் ஹாலிவுட் நடிகை ஜெண்டயா

    ஹாலிவுட் நடிகை ஜெண்டயா (The Odyssey)  லண்டனில் நடைபெற்ற தனது ‘தி ஒடிஸி’  திரைப்பட விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தங்கக் காதணிகளை அணிந்து பங்கேற்றது தற்போது உலகளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலப் பொருட்களை, பிரபலங்கள் தங்களின் ஆடை விபரங்களுக்காக  பயன்படுத்துவது கலாச்சாரச் சுரண்டல் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், கடந்த காலங்களில் கிம் கர்தாஷியன் புகழ்பெற்ற…

  • இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!

    அமெரிக்கா தனது கடப்பாடுகளை மீறியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தான் மேற்கொண்டிருந்த அனைத்து கடப்பாடுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் வெளியுறவு பிரதி அமைச்சர் காசெம் கரிபாபாடி இதனை அறிவித்துள்ளதாக ஈரானின் பார்ஸ் (Fars)  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் அமெரிக்கா தனது அனைத்து கடப்பாடுகளையும் மீறி அவற்றைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாக காசெம் கரிபாபாடி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாகவே, இந்த ஒப்பந்தத்தின்…

  • யாழ்ப்பாணம் செம்மணியில் தொடரும் அகழ்வு

    யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆவது நாளான இன்று, மேலும் 6 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன. இதில் சிறார் ஒருவரின் என்புக்கூடும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் 56 நாட்கள் அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 36 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்றைய தின நிலவரப்படி, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்…

  • வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு

    வியட்நாமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, முவோங் தான் (Muong Than) மலைக் கிராமத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். மழையுடனான வானிலைக்கு மத்தியில் காணாமல் போன 4 பேரைத்…

  • ரூ. 4 கோடி கொக்கெய்னை விழுங்கி வந்த வெளிநாட்டுப் பெண் கைது!

    ரூபாய் 4 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி, சக்கர நாற்காலியின் உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஆசிரியை ஒருவர் நேற்று (17) சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தான் ஒரு எச்.ஐ.வி (HIV) தொற்றாளர் என சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள இந்தச் சந்தேக நபர், அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியா மற்றும் கட்டார் ஊடாக இலங்கை வந்துள்ளார். சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கியிருந்த…

  • டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

    வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரட்டபெரியகுளம் வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈரட்டபெரியகுளம் வீதியின் 16ஆம் கட்டை பகுதிக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பணி நிமித்தமான கடமைகளை முடித்துக்கொண்டு வவுனியா ஈரட்டபெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட், டிப்பர் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…

  • குவைத் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

    ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ விமானச் சேவையான ‘குவைத் எயார்வேஸ்’ தங்களது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • விண்ணில் பாய்ந்த இந்தியாவின் விக்ரம்-1 ராக்கெட்

    இந்தியாவின் முதல் தனியார் வணிக ரீதியிலான ஆர்பிட்டல் ராக்கெட்டான ‘விக்ரம்-1’, ஜூலை 18இ 2026 அன்று நண்பகல் 12:05 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட்டை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது. இந்த ஏவுதல் திட்டத்திற்கு ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagaman) என்று பெயரிடப்பட்டிருந்தது. இதன் மூலம், அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு சொந்தமாக தனியார் நிறுவனம்…

  • பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்

    பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Labour Party) புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்க உள்ளார். பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் ஜூலை 17, வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் வரவிருக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) பிரிட்டனின் புதிய பிரதமராக முறைப்படி பதவியேற்கவுள்ளார்.…