Category: முக்கிய செய்தி

  • உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது ஸ்பெயின்

    2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில்  நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்பெயின் அணி தனது கால்பந்து வரலாற்றில் 2-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது (முன்னதாக 2010-ல் வென்றிருந்தது).ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும்…

  • கனடாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

    கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள கிச்சனர் (Kitchener) நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பாக, 33 வயதுடைய வாட்டர்லூவைச் சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை காலை கோர்ட்லண்ட் அவென்யூ மற்றும் ஹேவர்ட் அவென்யூ சந்திப்புக்கு அருகிலுள்ள வீட்டொன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும், பொலிஸார் அங்கு சென்றபோது காயமடைந்த நபர் சம்பவ இடத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள…

  • கனடா அரச பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

    கனடாவின் அரச பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிரும்போது சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்க்க கூடுதல் தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டின் தேசிய உளவுத்துறை கண்காணிப்பு அமைப்பு (NSIRA) அவசர எச்சரிக்கை மற்றும் பரிந்துரைகளை விடுத்துள்ளது. சமீபத்திய பாதுகாப்பு நிலவரங்களின்படி, கனடாவின் பாதுகாப்புத் துறைக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களில், சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்த்தல் ,வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் தவறான நடத்தைகளில் பங்காளியாக இருப்பதைத் தவிர்க்கும் சட்டம் வெளிநாட்டு அமைப்புகளுடன்…

  • இலங்கையில் இதுவரை 20 நீர்வெறுப்பு நோய் மரணங்கள் பதிவு

    இலங்கையில் இதுவரை 20 நீர்வெறுப்பு நோய் மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 4 மரணங்கள் புத்தளம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன குறிப்பிட்டார். ஒரு சமூகமாக நமது சமூகப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியிருந்தால், டெங்கு மரணங்களைப் போன்று நீர்வெறுப்பு நோய் மரணங்களையும் தடுத்திருக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் பிரதானமாக நாய்கள்…

  • எப்போதுதான் எங்களுக்கு நீதி கிடைக்கும்??????செம்மணியில் எலும்புக்கூடுகளாக்கப்பட்டோர்

    செம்மணியில் எம் உறவுகளுக்கு நடந்த அநியாயம்: திகிலூட்டும் மற்றொரு சாட்சி! யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) மூன்றாம் கட்டத்தின் 37 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளின் போது குழியில் கால்கள் மடக்கி அமர்த்தி வைக்கப்பட்ட நிலையில் எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்விலும் இதேபோன்று கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. கொடூரமாகச் சித்திரவதை…

  • டார்கோவின் அணுமின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்

    ஈரானின் அஹ்வாஸ் (Ahvaz) நகருக்கு அருகில் கட்டப்பட்டு வரும் டார்கோவ் (Darkhovin / Darquain) அணுமின் நிலையத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் நாட்டின் அணுசக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுஉலைக்கோ அல்லது கட்டுமானப் பகுதிகளுக்கோ பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும், கதிர்வீச்சு கசிவு போன்ற ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட…

  • ‘நெருப்பு, மின்சாரத்தை விட AI முக்கியமானது’ : சுந்தர் பிச்சை

    நெருப்பு மற்றும் மின்சாரத்தை விடவும், மனிதகுலம் இதுவரை உருவாக்கிய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமே என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் நெருப்பும், மின்சாரமும் ஏற்படுத்திய மாற்றங்களை விட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இன்னும் ஆழமான தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவின் திறன் மற்றும் அதன் எதிர்கால முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலேயே சுந்தர் பிச்சையின்…

  • ஜோர்தானில் அமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

    ஜோர்தானின் அக்கபா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் ‘குறிப்பிட்ட மற்றும் நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்’ இருப்பதாகக் கூறி, தமது நாட்டுப் பிரஜைகளை, அந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அக்கபா வானூர்தி நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த மக்களை ஜோர்தான் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜோர்தானில் உள்ள இராணுவத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஏற்கனவே…

  • இலங்கையில் நாளை முதல் முட்டை விலை உயர்வு!

    நாளை (20) முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல், குளியாப்பிட்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, குறித்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, வெள்ளை முட்டை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 42 ரூபாயாகவும் நடைமுறைக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  • ரயிலில் செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து!

    ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இன்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவலை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.