Category: முக்கிய செய்தி
-
இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 331.67 ரூபாயில் இருந்து 331.50 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 341.08 ரூபாயில் இருந்து 340.90 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்துள்ளது. அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க்…
-
வெள்ளை மாளிகை இரகசியத் தகவல்களை அம்பலப்படுத்திய பபிள்மேப்ஸ் நிறுவனம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில், வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரகசியத் தகவல் கசிந்துள்ளதாக ‘பபிள்மேப்ஸ்’ நிறுவனம் தொரிவித்துள்ளது. இதைப்பயன்படுத்தி போலி மார்க்கெட்’ போன்ற ஒன்லைன் சூதாட்டத் தளங்களில் 3 அநாமதேயக் கணக்குகள் சரியாகப் பந்தயம் கட்டி, $6,00,000-க்கும் அதிகமாக இலாபம் ஈட்டியுள்ளதை ‘பபிள்மேப்ஸ்’ நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டெலிப்ரொம்ப்டர் ஒபரேட்டரான கேப்ரியல் பெரெஸ், ஜனாதிபதியின் உரைகளை முன்கூட்டியே அணுகி தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…
-
கெய்ர் ஸ்டாமர் பதவி விலகினார் – கடிதத்தை மன்னர் சார்ள்ஸ் ஏற்றுக்கொண்டார்!
பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து உத்தியோகபூர்வமாக தமது பதவி விலகல் கடிதத்தை மன்னரிடம் கையளித்து, பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் விலகியுள்ளார். இந்த நிலையில், அவரும் மன்னர் சார்லஸும் கைகுலுக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற உறுப்பினர் கெய்ர் ஸ்டார்மர் இன்று காலை மன்னர் சார்லஸைச் சந்தித்து, பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபு(First Lord of the Treasury) பதவிகளிலிருந்து…
-
கொழும்பு – பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு – பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த தொடருந்து மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிலியந்தலவைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
கயானாவில் கப்பல் விபத்து – 66 பேரை காணவில்லை
தென் அமெரிக்க நாடான கயானாவின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்குச் நேற்று முன் தினம் சென்ற சிறிய ரக கப்பல் ஒன்று நடுக்கடலில் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த சமயத்தில் கப்பலில் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 133 பேர் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் கடலில் மூழ்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகள் உட்பட…
-
இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியப் பாராளுமன்றத்தில் ஆளுமை விருத்தி பயிற்சி
இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகளுக்காக கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இலங்கைத் தூதுக் குழுவிற்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தலைமைதாங்கினார். இந்திய பாராளுமன்றத்தின் நிறுவனக் கட்டமைப்பு, அதன் நிர்வாகச் செயன்முறைகள் மற்றும் பாராளுமன்ற…
-
கொங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா வைரஸினால் உயிரிழப்பு எண்ணிக்கை 930 ஆக உயர்வு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 930 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு கொங்கோவில் மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த தீவிர பரவலின் காரணமாக மொத்தமாக 2,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எபோலா பரவல் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான மிக அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவாகும். கடந்த மே 15 ஆம்…
-
கனவுடன் தொடங்கிய இறுதிப் போட்டி கண்ணீரில் முடிவு
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது வாழ்நாளின் இறுதி கால்பந்து தொடராகக் கருதப்பட்ட இதில், கிண்ணத்தை தக்க வைக்க முடியாமல் போன ஏமாற்றத்துடன்…
-
ஈரானியப் புரட்சிகர காவல்துறை இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்கா, ஈரானியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) இலக்குகள் மீது வான்வழியாக உக்கிரமான பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மற்றும் வட ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தீவிர வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நடத்திய பிந்திய தாக்குதல் ஒன்றில் வட ஈராக்கில் பணியாற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம்…
-
உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது ஸ்பெயின்
2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்பெயின் அணி தனது கால்பந்து வரலாற்றில் 2-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது (முன்னதாக 2010-ல் வென்றிருந்தது).ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும்…