Category: பிரதான செய்தி

  • இலங்கைக்கான GSP வரிச் சலுகைக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய நிபந்தனைகள்

    இலங்கைக்கு வழங்கப்படும் GSP வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன மற்றும் மத சிறுபான்மையினர்,  LGBTQ பிரிவினர் உள்ளிட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் விரிவான பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இணக்கத்துடன் இடம்பெறும் ஒரே பாலின உறவுகளை குற்றமாகக் கருதாத வகையில் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்புப் படையினரால் சிவில்…

  • கனடாவில் காட்டேஜ் சீஸ் பற்றாக்குறை: உற்பத்தியை அதிகரிக்கும் பால் நிறுவனங்கள்

    சமூக வலைதளங்களில் பிரபலமான புரதச்சத்து நிறைந்த உணவுப் பழக்கவழக்கங்களால், காட்டேஜ் சீஸிற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் “தேசிய காட்டேஜ் சீஸ் பற்றாக்குறை” ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோர்டிகா (Nordica) பிராண்ட் காட்டேஜ் சீஸ் தயாரிக்கும் கே லீ ஃபூட்ஸ் (Gay Lea Foods) நிறுவனம், டொராண்டோவில் உள்ள தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய 200 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் 2028-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஸ்டேடிஸ்டிக்ஸ்…

  • ஒரு இலட்சம் சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில்!

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 80,000 முதல் ஒரு இலட்சம் வரையான சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெருமளவிலான துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களிடம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து தெரிவித்த போது, சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி…

  • இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் வீடுகளை முற்றுகையிட்ட கிராமத்தில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற உத்தரவு

    இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் குஸ்ரா கிராமத்தின் எல்லையில் உள்ள பாலஸ்தீனர்களின் வீடுகளை  முற்றுகையிட்டனர். வீடுகளின் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளையும் துண்டித்தனர்.  இஸ்ரேலிய ராணுவத்தினர் கிராமத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பாலஸ்தீன குடியிருப்பாளர்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இஸ்ரேலிய ராணுவம் பல பாலஸ்தீன வீடுகளைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்து, அவற்றை ராணுவத் தளங்களாகப் பயன்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்கத் தூதர் மைக்கேல் ஹக்கபி மற்றும் சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும்…

  • அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை

    அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய 3 மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளன. ஓட்டல் ஊழியரைக் கொலை செய்த என்டனி  டேரல் (66), தனது காதலியை சுட்டுக்கொன்ற கார்லோஸ் (70) மற்றும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஜெரமி வில்லியம்ஸ் (42) ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட…

  • மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம்!

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஒகஸ்ட். 13) கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நேற்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த…

  • இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் முயற்சி – சத்தியலிங்கம் எம்.பி விசனம் !

    மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் வெளிக்கொணர்ந்தார். இன்று (13.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இவ்விடயத்தினை வெளிப்படுத்தினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருட்திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் இது தொல்பொருட்திணைக்களத்திற்குரிய இடமென்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது. அந்த பெயர்ப்பலகையில் ஆலய…

  • இடிந்துவிழுந்த சுரங்கம்.. உள்ளே சிக்கிக்கொண்ட ஊழியர்கள்.. உத்தராகண்ட்டில் அதிர்ச்சி!

    உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இந்திய அரசின் THDC (Tehri Hydro Development Corporation) நிறுவனத்தின் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. அங்கு பாயும் அலகநந்தா நதியின் (Alaknanda River) குறுக்கே மின்சார உற்பத்தியை இலக்காகக் கொண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தp பணிகள் நிறைவு பெற்றதும் 444 மெகாவாட் (MW) மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. கடினமான இமயமலைப் பகுதியைக் குடைந்து சுமார் 13 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்திற்குச் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த…

  • ‘எங்களை அழித்துவிட்டார்கள்’: வீடு இடிக்கப்பட்டதால் வெட்டவெளியில் தங்கும் பாலஸ்தீனக் குடும்பம்

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் (West Bank) ‘என் அல்-ஹில்வா’ (Ein el-Hilweh) பகுதியில், இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருந்தபோதிலும், அடெல் தராக்மே (Adel Daraghmeh) என்பவரது குடும்பத்தின் வீடு இஸ்ரேலிய புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.  வீடு இடிக்கப்பட்டதால், 43 டிகிரி செல்சியஸ் (109°F) கொளுத்தும் வெயிலில், தார்பாய் மற்றும் பழைய போர்வைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிகக் கூடாரத்தின் கீழ் அந்தக் குடும்பத்தினர் தங்கி வருகின்றனர். வீட்டிலிருந்த மருத்துவப் பொருட்கள், மின்சாரத்திற்கான சோலார் பேனல்கள், குடிநீர்…

  • வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கேரோலைன் லீவிட் இம்மாத இறுதியில் பதவியிலிருந்து விலகுகிறார் – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

    வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கேரோலைன் லீவிட் (Karoline Leavitt) இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். எதிர்வரும் இடைத்தேர்தலை முன்னிட்டு, டிரம்பின் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ (MAGA) இயக்கத்திற்கு வழிகாட்டும் வெளியார்வத் தொடர்பாளராகவும், கட்சி சார்ந்த பணியாளராகவும் அவர் செயல்படுவார்.  கடந்த மே மாதம் தனது இரண்டாவது மகளைப் பெற்றெடுத்த 28 வயதான லீவிட், மகப்பேறு விடுமுறைக்குப் பின் சமீபத்தில்தான் பணிக்குத் திரும்பினார். தனது…