Category: பிரதான செய்தி

  • பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

    பிரான்ஸின் புகழ்பெற்ற ‘பிரெஞ்ச் ரிவியேரா’ கடற்கரைப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால், அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் உள்ள கழிவுகளைத் தேடி இக் காட்டுப்பன்றிகள் கடற்கரைகள், முகாம்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகளை நோக்கிப் படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பன்றிகளுக்கு உணவளிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டு, ப்ரெஜஸ் நகரில் 450 யூரோ…

  • நோர்த் பே சூதாட்ட விடுதியில் வன்முறை 44 வயது நபர் கைது!

    கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள நோர்த் பே பகுதியில் அமைந்துள்ள ‘காஸ்கேட்ஸ் கேசினோ’ சூதாட்ட விடுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, ஸ்டர்ஜன் ஃபால்ஸ் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பைன்வுட் பார்க் டிரைவில் உள்ள அந்தச் சூதாட்ட விடுதிக்குள் இரண்டு ஆயுதங்களுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை 12:15 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். “அந்த நபர் சூதாட்டப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களைச்…

  • கனடாவின் நோவா ஸ்கோடியாவில் மனித எச்சங்கள் மீட்பு!

    கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். டெபர்ட் பகுதிக்கு அருகிலுள்ள காடடர்ந்த பகுதியில் மனித எச்சங்கள் இருப்பதாகக் கடந்த ஜூலை 22 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட எச்சங்கள் ஒரு ஆணுடையது என்றும், அவரது மரணத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் அடங்கியிருக்கலாம் என நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், நோவா ஸ்கோடியா மருத்துவ பரிசோதனை…

  • கனடாவில் மகன்களைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!

    கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர், ‘நெயில் கன்’ ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு…

  • பிரித்தானிய பிரதமரின் நிபுணர் ஆலோசகராக தமிழ் வம்சாவளி

    தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம். பிரித்தானிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆன்டி பர்னாம், அமைச்சரவை மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் ஆன்டி பர்னாம். கெளதம் ரங்கராஜன், தமிழ்நாட்டின் கும்பகோணத்தை பூர்விகமாக கொண்ட முன்னாள்…

  • கட்டுக்கடங்காத காட்டுத் தீ ; ஜெர்மனியில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்

    மேற்கு ஜெர்மனியில் பெல்ஜியம் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பரவலை தொடர்ந்து, 2,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த பகுதியிலுள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதிகாலை 4:00 மணியளவில் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மக்கள் அத்தியாவசியப் பொருட்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் அவசியமான மருந்துகளை மட்டும்…

  • சகோதரிகளென தெரியாமல் 30 வருடங்களாக நண்பிகளாக பழகிய அதிசயம்

    30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள். சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை…

  • டிரம்பின் வரிகளைத் தவிர்க்க சீனாவிற்கு உதவும் முக்கிய நாடுகளில் கனடாவும் ஒன்று: அமெரிக்கா குற்றச்சாட்டு

    அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கை அலுவலகம் வெளியிட்ட “தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம்” (The Great Transshipment Scam) என்ற அறிக்கையில், அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பதற்காகச் சீனா மேற்கொள்ளும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலுக்குக் கனடாவும் ஒரு முக்கியக் காரணியாக விளங்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக வரிகளைத் தவிர்க்கும் பொருட்டு, சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களைச் சாதகமான வரி விகிதங்களைக் கொண்ட கனடா, மெக்சிகோ போன்ற மூன்றாம் நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் அனுப்புவதாக அவ்வறிக்கை…

  • வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!

    தென்னிந்திய திரைப்பட நடிகர் விக்ரம், அரிய வகை விலங்கான ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) குரங்குடன் கொஞ்சி விளையாடும் காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தேசிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் லார் கிப்பன் வகை குரங்குடன் விளையாடும் காணொளியை திங்கட்கிழமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இது இணையத்தில் பரவியதை அடுத்து எழுந்த எதிர்ப்பையடுத்து, சில மணி நேரங்களிலேயே அந்த காணொளி அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. இந்த…

  • ‘யாருக்கும் தீங்கு செய்யாத தேவதை’: உயிரிழந்த 4 வயது சிறுமி குறித்து தாய் நெகிழ்ச்சி

    மணிட்டோபாவில் உள்ள லாங் பிளைன் ஃபர்ஸ்ட் நேஷன் (Long Plain First Nation) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 4 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.  உயிரிழந்த சிறுமி குறித்து அவரது தாய் கூறுகையில், “அவள் தனது தங்கைகளுக்குக் கூட ஒருபோதும் தீங்கு செய்யாத ஒரு தேவதை. இந்த மாதத்துடன் அவளுக்கு 5 வயது பூர்த்தியாகி பள்ளிக்குச் செல்ல வேண்டியவள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  இச்சம்பவத்தின் போது சிறுமியின் 1 மற்றும் 2…