Category: பிரதான செய்தி

  • கேம்பிரிட்ஜ் பேராசிரியர் உயிரிழப்பு – ‘தொடர் அவதூறுகளை எதிர்கொண்டார்’ என குடும்பத்தினர் ஆதங்கம்

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளைய கருப்பின பேராசிரியரான ஜேசன் ஆர்டே (Jason Arday – 41), லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கல்விச் சான்றுகள், ஆராய்ச்சிகள் மற்றும் அறக்கட்டளைப் பணிகள் குறித்து முறைகேடு மற்றும் திருட்டு (Plagiarism) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜேசன் ஆர்டேவின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “கேம்பிரிட்ஜ் பேராசிரியராகப் பொறுப்பேற்றது முதல் கடந்த…

  • செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்

    செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 562 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

  • சீன ராக்கெட் ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறியது

    ஆகஸ்ட் 10 அன்று, சீனாவின் ஹைனான் தீவில் உள்ள வென்சாங் (Wenchang) விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட லாங்மார்ச் 7ஏ (Long March 7A) ராக்கெட், கிளம்பிய 85 வினாடிகளில் காற்றில் வெடித்துச் சிதறியது.  உலகளவில் ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஜோங்சிங்-4பி (Zhongxing-4B) என்ற செயற்கைக்கோளை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.  ராக்கெட் ஏவப்பட்டு 3 மணி நேரத்திற்குப் பிறகு, “பயணத்தின் போது கோளாறு ஏற்பட்டது” எனச் சீன அரசு செய்தி…

  • ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு வெளிநாடு செல்லத் தடை

    ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோமஸ்  ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதி ஜுவான் கார்போஸ் பெய்னாடோ (Juan Carlos Peinado) அவரது கடவுச்சீட்டை  ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மாதத்திற்கு இருமுறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மாட்ரிட் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைப் பயன்படுத்திப் பொதுப் பணிகளைப் பெற்றுக் கொடுத்தது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது (Influence Peddling), நிதி முறைகேடு…

  • இத்தாலி காவல்துறையால் மீட்டெடுக்கப்பட்ட திருடப்பட்ட ஓவியங்கள்

    இத்தாலியின் பார்மா  நகருக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் கடந்த மார்ச் மாதம் திருடப்பட்ட பிரெஞ்சு ஓவியர்களான போல் செசான், ஹென்றி மட்டீஸ் மற்றும் பியர்-ஒகஸ்ட் ரேனோயர் ஆகியோரின் மூன்று அரிய ஓவியங்களை இத்தாலிய கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு காவல்துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது.  பார்மா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இந்த ஓவியங்கள் மீட்கப்பட்டன. இத்திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய 9 மோல்டோவா (Moldovan) நாட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மார்ச் 22-23 இரவில் மாமியானோ…

  • கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் உறுதி

    அம்பாறை மாவட்ட கடற்றொழில் துறையில் நிலவும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பதுடன், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார். நேற்று (14) நடைபெற்ற மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு…

  • செங்கோட்டையில் 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பிரதான விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்க செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.…

  • என்ஜின் பாகங்கள் தாக்கி ரியானேர் விமானத்தின் ஜன்னல் உடைந்தது: பயணி வெளியே இழுக்கப்பட்டதாக NTSB தகவல்

    கடந்த மாதம் ரியானேர் (Ryanair) விமானத்தில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக, அதன் பாகங்கள் சிதறி காக்பிட் சன்னலை உடைத்ததில் ஒரு பயணி பகுதி அளவு வெளியே இழுக்கப்பட்ட சம்பவத்தில், என்ஜின் விசிறி பிளேடில் உலோகம் பலவீனமடைந்ததற்கான  சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க வான் பாதுகாப்பு புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) வெளியிட்டுள்ள பூர்வாங்க அறிக்கையில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. ஜூலை 10 அன்று கிரீஸ் நாட்டின் தெசலோனிகியிலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கி மால்டா…

  • 22வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சரத்துகளை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அதே நாளில் நீதித்துறை (திருத்த) சட்டமூலமும் (Judicature Amendment Bill) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் இந்தத் திருத்தத்திற்கு மூன்று நிகாயாக்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச…

  • முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் விஜய்

    இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜொர்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (15) காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், மெரீனா கடற்கரையில் உள்ள…