Category: பிரதான செய்தி

  • அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சி – வெரிட்டே ரிசர்ச் நிறுவனம்

    வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனம் நடாத்திய Gallup பாணியிலான தேசத்தின் மனநிலை (Mood of the Nation) பற்றிய ஒட்டுமொத்த ஜூலை 2026 கருத்துக்கணிப்பில், அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் (Government approval rating) 50% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி 2026 இல் பெறப்பட்ட தேர்தல் வெற்றிக்கு பின்னரான உச்ச நிலையான 65% உடன் ஒப்பிடுகையில் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.கருத்துக்கணிப்பு பங்குதாரராக வான்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd.)…

  • பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை அணிந்து மக்கள் போராட்டம்!

    வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில்  இன்று (16) ஞாயிற்றுக்கிழமை   ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று மாற்றி , பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து, கறுப்பு மேலங்கி அணிந்து, கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரையில் ஊர்வலமாக வந்து , பலாலி சந்திக்கு அருகில் உள்ள இராணுவ முன்னரங்கு முன்பாக கூடி , கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது…

  • பல நூறாண்டுகள் மாறாத மரபு : நல்லூரை வந்தடைந்தது கொடிச்சீலை.

    வட புலத்தின் குடும்ப விழாவாக கொண்டாடப்படும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம், நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்து தொடரும் அந்தப் பாரம்பரியத்தின் முக்கியமான ஒரு நிகழ்வாக, நல்லூரானுக்குரிய கொடிச்சீலை இன்று முற்பகல் ஆலயத்தை வந்தடைந்தது. நல்லூரானுக்குரிய கொடிச்சீலையை பாரம்பரியமாக வழங்கி வரும் செங்குந்தர் மரபினைச் சார்ந்தவர்களால், அந்தப் புனிதக் கொடிச்சீலை சிரசில் சுமந்து கொண்டு வரப்பட்டு, பின்னர் தேரில் வைத்து ஊர்வலமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தது. பாரம்பரியம் மாறாமல், வழிவழியாகப் பேணப்பட்டு வரும்…

  • மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள்!

    திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் (14.08.2026) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது. பிரேசில் நாட்டில் 2003 ஆம் ஆண்டு 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…

  • ஈரான் போர் | நாடு திரும்பும் USS Abraham Lincoln கப்பல்

    ஈரானுடனான மோதலுக்கு மத்தியில், நீண்டகாலமாக மேற்கு ஆசியாவில் பணியாற்றி வரும் அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலுக்கு பதிலாக USS George Washington கப்பலை திருப்பி அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. USS Abraham Lincoln கடந்த நவம்பர் 21ஆம் தேதி சான்டியாகோவில் இருந்து புறப்பட்டது. டிசம்பர் 11ஆம் தேதி குவாமில் (Guam) கடைசி துறைமுக நிறுத்தத்தில் நின்ற பின்னர், தொடர்ந்து கடலில் பணியாற்றி வருகிறது. ஜனவரி 2026-இல் மத்திய கிழக்கை வந்தடைந்தது. ஈரானுடனான…

  • பூமிக்கு அடியில் இருந்து சீறிப்பாய்ந்த தீ.. ஜார்கண்டில் அதிர்ச்சி!!

    ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டம், கோமியா ஒன்றியத்தில் பந்த் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் திறந்த வெளிப்பகுதியில் நேற்று, தரைக்கு அடியில் இருந்து கொதிக்கும் நீர்க்குமிழிகளுடன் திடீரென தீப்பிழம்புகள் வெளியேறத் தொடங்கின. மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும், நிலத்தில் தேங்கியிருந்த நீரில் குமிழ்கள் தோன்றி, தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருந்தது. இதற்கு காரணமாக, இப்பகுதியில் நிலத்தடி மீத்தேன் வாயு அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கோமியா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின்…

  • ஜிம்பாப்வே படகு விபத்தில் 18 குழந்தைகள் உட்பட 72 பேர் உயிரிழப்பு.

    ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் அதிக அளவு பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-க்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், அதில் 18 குழந்தைகளும் அடங்குவர் என்றும்  பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை பலத்த அலையின் காரணமாக இந்தப் படகு கவிழ்ந்தது. அதன்பிறகு மேலும் 26 சடலங்கள் மீட்கப்பட்டு, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பழமையான அந்தப் படகு, கரிபா நகரத்திலிருந்து நாட்டின் வடமேற்கில் உள்ள கிராமப்புற மற்றும் மீன்பிடி சமூகங்களை நோக்கிச்…

  • இலங்கையின் முதலாவது பெண் மார்ஷல் பனங்காட்டு மண்ணில் இருந்து

    விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி  முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ஆண்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த நியமனமானது இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதுடன், இந்த துறையில் சிறப்புமிக்க பதவிகளை நோக்கிச் செல்ல எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்…

  • கல்கிசையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

    கல்கிசை, ஹுலுதாகொட வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  • மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை

    கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி  தெரிவித்தார். இதில், வனத்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.