Category: பிரதான செய்தி
-
யுக்ரைன்- ரஷ்ய போர்: அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள்
யுக்ரைனின் ‘பேட்ரியாட்’ (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தீர்ந்துவிட்டதால், யுக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் மீதான ரஷ்யாவின் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் உயிரிழப்பு சாதனை அளவை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனினும்,யுக்ரைன் தனது நீண்ட தூர ஆளில்லா வானூர்திகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் விநியோக மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தநிலையில் யுக்ரைனின் தொடர்…
-
‘தி சைக்கிள் ஒஃப் லவ்’- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா
ஜாதி அடக்குமுறை மற்றும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி சைக்கிள் ஒஃப் லவ்’ (The Cycle of Love) என்ற புதிய திரைப்படம் குறித்த தகவல்களை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து ஸ்வீடன் நாட்டுக்குத் தன் காதலியைத் தேடி 6,000 மைல்கள் சைக்கிளிலேயே பயணம் செய்த இந்தியக் கலைஞர் பி.கே. மகாநந்தியா (PK Mahanandia) வின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.a இந்தியாவில் அவர் எதிர்கொண்ட ஜாதி…
-
டிரம்ப்பின் உதவியாளர் நடாலி ஹார்ப் பற்றி அனைவரும் பேசுவது ஏன்?
ஜார்ஜியா மாநில ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜான் ஓசாஃப் பிரச்சார நிகழ்வு ஒன்றில் பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 35 வயதான சிறப்பு உதவியாளர் நடாலி ஹார்ப் (Natalie Harp) ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என CBC News செய்தி வெளியிட்டுள்ளது. செனட்டர் ஜான் ஓசாஃப் பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்பை விமர்சித்துப் பேசும்போது, அதிபர் “தனது நடன அரங்கை (ballroom) கட்டவும், கத்தார் அமீரால் பரிசளிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்பற்ற பறக்கும்…
-
சினிமாவில் ஏழு தசாப்தங்கள்.. 400+ படங்கள்.. காலமானார் சௌகார் ஜானகி!
இந்திய திரையுலகில் 40களின் இறுதியில் துவங்கி தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த, கதாநாயகி என்ற அடையாளத்தைத் தாண்டி நடிகை என்ற கலைஞரின் ஆளுமையை நிரூபித்தவர்களில் முக்கியமானவர் சௌகார் ஜானகி (94). பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் நம் மனதில் பதித்தவர், இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து திரைத்துறையில் பயணித்த அவரின் சினிமா பயணமும், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மொழி எல்லைகள் இன்றி ஆற்றிய நடிப்பு…
-
முற்றிலும் முடங்கிய ஈரான்.. ஒருவேளை உணவுக்கே சிக்கல்.. பெரும் ஆபத்தில் பொதுமக்கள்!
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலின் ஆதரவோடு அமெரிக்கா படையெடுத்தது. ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதேநேரம். ஈரான் உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை முடக்கியது. அதோடு, மத்திய கிழக்குப் பகுதியில் இருந்த அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருகட்டத்தில், ஈரானை ராணுவரீதியாக முடக்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஈரானை பொருளாதாரரீதியாக முடக்க பல்வேறு நடவடிக்கைகளை…
-
ஆயுத கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்.. சோமாலியா கடலில் அதிர்ச்சி!
சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் (Mogadishu) உள்ள துருக்கியின் ராணுவப் பயிற்சி மையத்திற்கு, கேமரூன் நாட்டின் கொடி ஏந்திய எம்/வி லுதூஃப் (M/V LUTUF) என்ற கப்பல் கடந்த வாரம் ஆயுதங்களை ஏற்றிச்சென்றது. இந்த நிலையில், அந்த கப்பல் ஆகஸ்ட் 17-ம் சோமாலியாவின் புண்ட்லாந்து மாகாணத்தின் எய்ல் கடற்கரை அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. இந்தசூழலில் தான், கடத்தப்பட்ட லுதூஃப் கப்பல் குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, இந்தக் கப்பலில் மொத்தம் 10…
-
இந்திய கிராமங்களை குறி வைத்து எலான் மஸ்க் அதிரடி திட்டம்
உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் என்ற அதிவேக இணையசேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். செயற்கைகோள்கள் மூலம் இன்டர்நெட்டை இந்நிறுவனம் வழங்குவதால், உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தாலும் இணையசேவையை பெற முடியும். இந்த நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த எலான் மஸ்க் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால், புவிசார் அரசியல், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆபத்தான காலகட்டத்தில், தங்களின் கட்டுப்பாட்டில் அந்த நிறுவனம்…
-
வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை பொலிஸார் கடந்த 19 ஆம் திகதி அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த…
-
அரச நிறுவனங்களில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்
தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாட்களும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார். பாடகி நந்தா மாலினியின் மறைவையடுத்து ஓகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக, இன்று (21),…
-
ஜப்பானில் ரயில் மோதியதில் நால்வர் உயிரிழப்பு
ஜப்பானில் ஷின் – கனுமா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணித்த சுமார் 50 பயணிகள் உட்பட சம்பவ இடத்தில் பணியாற்றிய மேலும் 6 பேர் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். பாதுகாப்பான மற்றும் நேரம் தவறாத போக்குவரத்துக்கு பெயர் பெற்ற ஜப்பானில் இவ்வாறான ரயில் விபத்துகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. சம்பவம் தொடர்பில் ஜப்பான் ரயில்வே நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது.