Category: பிரதான செய்தி
-
மர்மத்தை மூடி மறைக்கும் சீனா? திபெத்தில் இயற்கையின் கோரம்!
இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறை உருகி நோபளத்தின் கோஷி ஆற்றில் பாய்ந்ததால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை டிரோன் கேமராக்களை கொண்டும், மீட்பு படையினர் மூலமாகவும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படியான சூழலில், இந்த விபத்து குறித்து மிகப்பெரிய…
-
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை!
தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், கோயிலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்வதற்கு இன்று (1) முதல் முழுமையான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கைபேசிகள் மூலம் நிழற்படம், காணொளி மற்றும் செல்ஃபி எடுப்பதுடன், சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக நுழைவு வாயில்கள் மற்றும் பாதணி பாதுகாப்பு…
-
முடிவுக்கு வந்த ’மெஸ்ஸி’ சாகப்தம்.. 21 ஆண்டு கால்பந்து பயணத்துக்கு விடைகொடுத்தார் ‘MESSI’.!
மெஸ்ஸி என்னும் மாயாஜால கால்பந்தாட்டக்காரனின் பயணம் ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் இல்லை ஒவ்வொரு சக மனிதனுக்கும் உத்வேகம் கொடுக்கக்கூடிய பயணமாகும்.. உலகப் புகழ்பெற்ற புரட்சியாளர் சேகுவாரா மற்றும் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா பிறந்த அர்ஜென்டினா நாட்டு அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். அந்த அணியில் மாரடோனாவின் பத்தாம் எண் ஜெர்சியை அணிந்து, அவரது வாரிசாகவே கால்பந்து உலகில் களம்கண்ட மெஸ்ஸிக்கு சர்வதேச பயணம் அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை.. ஒரு மிகப்பெரிய லெகஸியை சுமக்க வேண்டிய பாரம்…
-
வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்த சோபியா
நியூயொர்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் சோபியா கெனின் 6-2, 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னதாக, நோவக் ஜோகோவிச் – மரியானோ நவோன் இடையேயான போட்டி நீண்ட நேரம் நீடித்த காரணத்தால் இந்தப்போட்டி நேற்று நள்ளிரவைத் தாண்டியே ஆரம்பமானது. மகளிர் டென்னிஸ் வரலாற்றில் இவ்வளவு தாமதமாக ஆரம்பமான முதல் போட்டி இதுவாகும். இதன்போது 46…
-
ஹோர்முஸ் நீரிணை குறித்த டிரம்பின் அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்சமயம் “மிகவும் நல்ல நிலையில்” உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன் தினமும் சராசரியாக 30 கப்பல்கள் அந்தப் பகுதி வழியாகப் பாதுகாப்பாகப் பயணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், ஈரானின் பொருளாதாரம், இராணுவம் மற்றும் அதன் தலைமைத்துவம் ஆகியவை பெருமளவில் சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், அதன் காரணமாக ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா தவிர்க்கப்போவதில்லை என்றும்,…
-
கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக கையில் பச்சை குத்திய தாய்!
கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். இதன் மூலம் தனது மகன் எந்த சூழ்நிலையிலும் அவன் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியும் என கூறினார். கனாடாவில் வசித்து வரும் ஜெசிகா என்பவர், மூளை வளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகனான ஹண்டர் உடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு உணவருந்த சென்றார். அப்போது ஹண்டர் தனது வார்த்தைகளையும், எண்ணங்களையும்…
-
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மரணம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில்…
-
கென்யா விமான நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு
நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா பன்னாட்டு விமான நிலையத்தில் (JKIA) விமான நிலைய ஊழியர்களின் மெத்தனமான வேலைநிறுத்தம் (Go-slow strike) இரண்டாவது நாளாகத் தொடர்ந்ததால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கென்யா விமானப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் (KAWU) இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் (Kenya Civil Aviation Authority) கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தோல்வி மற்றும் கென்யா விமான நிலைய ஆணையம் (KAA),…
-
யாழில் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர். குறித்த 09 நபர்களையும், எதிரிகளாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு…
-
சீனாவிடம் இருந்து காலநிலை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தரவுகளைப் பெற நேபாளம் மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
பயங்கர வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளம், சீனாவிடம் இருந்து காலநிலை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தரவுகளைப் பெற மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. நேபாள-திபெத் எல்லையில் உள்ள பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, இரு நாட்டு நிபுணர்களும் அதிகாரிகளும் காத்மாண்டுவில் சந்தித்து இதுகுறித்து விவாதித்தனர். பனிப்பாறை மாற்றங்கள் மற்றும் நீரின் மட்டம் குறித்த முன்னெச்சரிக்கைத் தரவுகளை சீனாவிடம் இருந்து போதுமான அளவு பெற முடியவில்லை என்றும், இது போன்ற பேரிடர்களை…