Category: பிரதான செய்தி
-
சீனாவிடம் இருந்து காலநிலை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தரவுகளைப் பெற நேபாளம் மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
பயங்கர வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளம், சீனாவிடம் இருந்து காலநிலை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தரவுகளைப் பெற மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. நேபாள-திபெத் எல்லையில் உள்ள பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, இரு நாட்டு நிபுணர்களும் அதிகாரிகளும் காத்மாண்டுவில் சந்தித்து இதுகுறித்து விவாதித்தனர். பனிப்பாறை மாற்றங்கள் மற்றும் நீரின் மட்டம் குறித்த முன்னெச்சரிக்கைத் தரவுகளை சீனாவிடம் இருந்து போதுமான அளவு பெற முடியவில்லை என்றும், இது போன்ற பேரிடர்களை…
-
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: ஈரான் மறுப்பு
ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையமான Kharg Island மீது தாக்குதல் நடத்தி அது முற்றிலும் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது Truth Social பக்கத்தில் ஒரு காணொளியுடன் பதிவிட்டார். டிரம்ப் பகிர்ந்த அந்தப் பெரிய வெடிப்புகள் அடங்கிய காணொளி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டது என்பதை சுயாதீனப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தின. மேலும், அந்தத் தீவு மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை. ஈரானின் அரசுக்குச் சொந்தமான தேசிய எண்ணெய்…
-
முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் இல்லை – வைகோ
தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை…
-
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – பதிலடி கொடுத்த ஈரான்
ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் இராணுவத் தாக்குதல் இதுவாகும். ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்துவதற்கான ரொக்கெட்டுகளை ஏவ ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தயாராகி வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்குப்…
-
‘முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்’- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கேரள மாநில சட்டசபை தேர்தல் குறித்தும், பையன்னூர் தொகுதியின் தேர்தல் நிலவரம், உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தற்போதைய ஆளும் அரசு மீதான விமர்சனங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பினராயி விஜயன் பேசுகையில், “சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் அரசு தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…
-
தீவிரமடையும் டெங்கு நோய்!
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை மேல் மாகாணத்தில் 50,358 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. தெற்கு மாகாணத்தில் 13,854 நோய்த்தொற்றுகளும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,659 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன. இதேவேளை இந்த ஆண்டு இதுவரை 72 டெங்கு…
-
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி எனும் தொனிப்பொருளுடன் சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றத தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் பலநூற்றுக்கணக்கான தமிழ்…
-
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு குறித்த உண்மையான காட்சிகளைச் சீனா தனது நாட்டில் ஒளிபரப்ப கட்டுப்பாடு
உலகெங்கிலும் உள்ள சமூக வலைதளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வைரலான நிலையில், சீனாவில் அது போன்ற வீடியோக்கள் எங்குமே ஒளிபரப்பப்படவில்லை. சீன அரசுக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் இதுகுறித்து மிகக் குறைந்த தகவல்களையே வெளியிட்டுள்ளன. திபெத் பகுதியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்தாலும், காணாமல் போனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த எந்தவித நேரடித் தகவல்களும் அல்லது பிழைத்தவர்களின் பேட்டிகளும் அங்கு கிடைக்கவில்லை. அதிபர் ஜி ஜின்பிங் அவசரக் கூட்டத்தைக் கூட்டிக்…
-
சுவிட்சர்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தின் வடக்குப் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் கைது செய்வதற்கு தேவையான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராவ் (Aarau) நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, காயமடைந்த 24 முதல் 27 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
-
இந்தியாவில் பிரசவ வலியில் கதறிய பெண் உயிரிழப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலையில், தனது முதல் குழந்தையைப் பிரசவித்த சில மணி நேரங்களிலேயே 25 வயதான கல்பனா மிஸ்ரா என்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது குடும்பத்தினரிடம் அழுது தன்னை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ள நிலையிலேயே இவ்வாறு பிரசவத்திற்கு பின்னர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாகவே குறித்த பெண்ணின் மரணம் தற்போது அப்பகுதி மக்களிடம் பெரும்…