Category: பிரதான செய்தி
-
நேபாளத்தில் சடலங்கள் கிடைக்காததால் வினோதமான முடிவெடுத்த உறவினர்கள்!
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தில் பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் இதுவரை 1,114 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சீனாவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,462 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்ட…
-
அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!
உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து மத்திய வங்கி தனது தங்கக் கையிருப்பில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2026 மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் கனடாவின் ஒட்டாவாவில் வைக்கப்பட்டிருந்த 86 டன் தங்கம் லண்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நெருக்கடி நிலைமைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக நெதர்லாந்து மத்திய வங்கி (DNB) தெரிவித்துள்ளது. உலகளாவிய நம்பிக்கைக்குரிய சொத்தாகக் கருதப்படும் தங்கம்,…
-
குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வீதி விபத்துத் தொடர்பில், பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் ‘கட்டுப்பாடற்ற முறையில் வாகனம் செலுத்தியமை’ தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். மார்ட்டின் கவுண்டி நீதிமன்றத்தில் முன்னிலையான 50 வயதான டைகர் வுட்ஸ், ‘போதையில் வாகனம் செலுத்தியமை’ என்ற ஆரம்பக் குற்றச்சாட்டுக்கு பதிலாகக் குறைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டினைக் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஜூபிட்டர் தீவில் உள்ள வீதியொன்றில் டைகர்…
-
எகிப்தில் பேருந்து விபத்து – 16 பேர் உயிரிழப்பு
எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர். தஹாப்–நுவைபா வீதியில், அல்-சாதா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 20 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த 16 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை,…
-
துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து – 10 மாலுமிகள் மாயம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிச் சென்ற ‘அல்சு’ என்ற கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோதலில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் குறிப்பிடத்தக்க அளவில்…
-
ஆம்பர் அலர்ட் ஐ வயது வரம்பின்றி அனைத்து வகையான கடத்தல்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் : கியூபெக் மாகாணத்தின் மரண விசாரணை அதிகாரி
ஆம்பர் அலர்ட் (Amber Alert) எனப்படும் அவசரகால எச்சரிக்கை முறை தற்போது சிறார்களின் கடத்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வயது வரம்பின்றி அனைத்து வகையான கடத்தல்களுக்கும் இந்த முறையை விரிவுபடுத்த வேண்டும் என்று கியூபெக் மாகாணத்தின் மரண விசாரணை அதிகாரி (Coroner) பரிந்துரைத்துள்ளார். கடந்த 2024 அக்டோபரில், கியூபெக்கின் மான்ட்ரியல் நகரைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி லூசியா அர்குரி (Lucia Arcuri), மனநலம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்ட தனது 59 வயது மகன் ஜியுசெப்பே…
-
நேபாள வெள்ளத்தில் நெஞ்சம் பதறும் கொடூரம்
பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மலைப்பகுதிகளில், வான்வழிப் புகைப்படம் மற்றும் நிலவரைபடம் தயாரிப்பது போன்ற வழக்கமான பணிகளைத் தாண்டி, Drone-கள் தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாகச் செல்ல முடியாத ஆபத்தான நிலப்பரப்பு காரணமாக, நுவாகோட் மாவட்டத்தின் தேவிகாட்-3 பகுதியில் இருந்து இந்த வாரம் மட்டும் 7 உடல்கள், Drone-கள் மூலம் தேவிகாட்-5 பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள காவல்துறை, ராணுவம் மற்றும்…
-
போராட்டங்கள் நடத்தத் தடை.. அது மக்களாட்சிக்கானது.. வித்தியாசமான காரணம் கூறும் தாலிபான்!!
ஆப்கானிஸ்தானில் 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி, தலிபான் நீதித்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஷுர்தா சட்டம்’ (Shurta Law) இயற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா-வால் (Hibatullah Akhundzada) அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சட்டத்தின் 50-வது பிரிவில்,…
-
உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஏஐ
ChatGPT, Gemini, தானியங்கி வாகனங்கள், AI ரோபோக்கள் என செயற்கை நுண்ணறிவு இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால், “Artificial Intelligence” என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது 1955-ம் ஆண்டில்தான். அமெரிக்காவின் டார்ட்மத் கல்லூரியில் (Dartmouth College) நடைபெற்ற கோடைக்கால ஆய்வுத் திட்டத்துக்கான ஒரு முன்மொழிவில், Artificial Intelligence என்ற வார்த்தை முதன்முறையாக இடம்பெற்றது. கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்த்தி (John McCarthy) இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இவரே பின்னாட்களில் செயற்கை நுண்ணறிவின்…
-
வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான துர்கை கோயில்.. அச்சத்தில் மக்கள்!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது. அப்பகுதியில் கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. ஆற்றின் கரையில் அமைந்திருந்த பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கி…