Category: பிரதான செய்தி

  • கனடாவில் பெற்றோரைக் கத்தியால் குத்திய மகன் கைது

    கனடாவின் மொண்ட்ரியால் நகரிலுள்ள செயிண்ட்-லியோனார்ட் பகுதியில், 60 வயதைக் கடந்த பெற்றோரைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவர்களுடைய 26 வயது மகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வியோ பூலேவார்டு மற்றும் ஜீன்-ரிவார்ட் தெரு அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 68 வயதுடைய ஆண் மற்றும் 66 வயதுடைய பெண் ஆகிய இருவரின் உடலின் மேல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் பலத்த கத்திக் குத்து காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட…

  • போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் புதிய சங்க நிர்வாகிகள் சந்திப்பு

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினராக இணைய நடிகர் ரஜினிகாந்த் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் சேரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சங்க நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக…

  • கொலை மிரட்டல் வழக்கில் பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதிக்கு பிணை

    பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், துணை ஜனாதிபதி சாரா டுடர்தேவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் பேசிய சாரா டுடர்தே, தான் கொலை செய்யப்பட்டால் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மார்ட்டின் ருமுல்டெஸ் ஆகியோரை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில்…

  • “துருப்பிடித்த அரசியல்” தமிழகத்திற்கு தேவையில்லை – முதல்வர் விஜய்

    எதிர்க்கட்சிகளைப் போல அரசியல் செய்ய தமக்கு விருப்பமில்லை என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய அவர், சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளில் உள்நோக்கம் இருந்தாலும், அதில் உண்மை உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்கும் என்றார். தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், த.வெ.க. ஆட்சி அமைத்ததிலிருந்து 4 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இளம் வயதினர் குற்றங்களில்…

  • தெஹிவளையில் “கொஸ்மல்லி”யின் மைத்துனர் கொலை

    தெஹிவளை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் “கொஸ்மல்லி” என்பவரின் மைத்துனர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

  • “October 7- Attack” பாணியில்.. இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதல்.? ஈரானின் அதிரடித் திட்டம்?

    இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான சமீபத்திய போருக்கு தொடக்கமாக அமைந்தது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல். அன்று ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் கசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தின. அதே நேரத்தில், ஹமாஸ் போராளிகள் காசா இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்பு தடைகளை உடைத்து, பல இடங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்ததுடன் எல்லைக்கு அருகிலிருந்த கிராமங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ராணுவ…

  • புதின் அச்சம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

    உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022- ஆம் ஆண்டு தாக்குதலைத் தொடங்கிய நிலையில், 4 ஆண்டுகளைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் டொன்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக ஆக்கிரமிப்பது உள்ளிட்ட தனது உச்சபட்ச நோக்கத்தை அடையும் முன்பே உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது, இறுதியில் தனது ஆட்சி கவிழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும் என்று ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புதின் அஞ்சுவதாக ‘தி எகனாமிஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. டொன்பாஸ் (Donbas அல்லது Donbass)…

  • மகனை பார்வையிட ஷிராந்தி வெலிக்கடைக்கு

    விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் இவ்வாறு அங்கு சென்றுள்ளார். அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் சற்றுமுன்னர் சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வழக்கின் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த வௌ்ளிக்கிழமை…

  • ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று

    ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான…

  • கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது

    காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள…