Category: பிரதான செய்தி
-
பிரிக்ஸ் மாநாட்டு விருந்தில் சைவ உணவு
சீன ஜனாதிபதி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் பிரிக்ஸ் மாநாட்டின் இரவு விருந்தை புறக்கணித்தற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது தான் காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்தியாவின் தலைமையிலான 18வது பிரிக்ஸ் மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு…
-
இம்ரான் கானின் முன்னாள் மனைவிக்கு திருமணம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் வாடிக்கொண்டிருக்க, அவரது முன்னாள் மனைவியான ஜெமைமா, கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். கிரிக்கெட் பிரபலமும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி, ஜெமைமா கோல்ட்ஸ்மித். இம்ரான் கான், பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமைமா கோல்ட்ஸ்மித், கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.…
-
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்
கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இங்கு 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள…
-
மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; போலீஸிடமிருந்து தப்பிக்க முயலும்போது விபரீதம்
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ராமானுஜ் கோஸ்வாமி (30) என்பவர் தனது மனைவி ரியா என்பவரைக் கொலை செய்துவிட்டு தலையைத் துண்டித்து பாலிதீன் பேக்கில் வைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் ராமானுஜ் வீட்டைச் சோதனை செய்து ரியாவின் உடலையும், தலையையும் மீட்டனர். பின்னர் ராமானுஜ் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவருக்கு அடுத்தவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 8ம் தேதி…
-
601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட லட்டு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உலர் பழங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பார்வதி தேவி விநாயகருக்கு உணவு ஊட்டுவது போன்ற தத்ரூபமான வடிவத்தில் இந்த லட்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு…
-
‘கில்லி’ கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!
சென்னை நகரில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் சைகை காட்டுவது போன்ற வடிவிலும், ‘கில்லி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கபடி வீரர் தோற்றத்திலும் சில விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேவேளை, திருவல்லிக்கேணி பகுதியில்…
-
புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!
கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற Mrs. Sri Lanka அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றி, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் Mrs. Sri Lanka கரோலின் ஜூரி மற்றும் ஆடை வடிவமைப்பு கலைஞர் சூலா பத்மேந்திரன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரம இந்தத்…
-
ஏ.ஐ. வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் – ஆந்த்ரோபிக் சி.இ.ஓ.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தி, அதன் அபாயங்களை கட்டுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உலகளவில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் பின்னணியில், “தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என்ற தலைப்பில் டாரியோ அமோடி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கைத்…
-
RICS நாடுகளுக்காக புதிய AI திட்டம் – சீன ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு
விரிவாக்கப்பட்ட “Greater BRICS” நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) பல புதிய திட்டங்களை முன்மொழிந்துள்ளார். நியூடெல்லியில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய ஷி ஜின்பிங், அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் பொருளாதாரம், வர்த்தகம், நிதி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன் ஒரு முக்கிய அம்சமாக, BRICS AI Open Source Zone…
-
ஈரான் இராணுவ தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி பேசுகையில், ஈரானிய இராணுவமும் ஈரானிய புரட்சிகர காவல்படையும் (IRGC) இணைந்து எத்தகைய எதிரி நடவடிக்கையையும் முறியடிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். இரு படைகளுக்கும் இடையிலான ஒற்றுமை, நாட்டின் எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து பாதுகாக்கும் “இரும்புக் கேடயமாக” செயல்படுகிறது என…