ஸ்பெயினின் அலிகான்டே நகரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், KillSec குழுவின் நிர்வாகி மற்றும் முக்கிய செயற்பாட்டாளர் என அவர் சந்தேகிக்கப்படுவதாகவும் Europol தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது மேலும் இருவர் பிரித்தானியா மற்றும் ருமேனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன், ஸ்பெயின், க்ரீஸ், ருமேனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் எட்டு இடங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
KillSec குழு, மென்பொருள் மற்றும் கணினி அமைப்புகளில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகள், குறிப்பாக முறையாகப் பாதுகாக்கப்படாத Cloud Storage அமைப்புகளை பயன்படுத்தி நிறுவனங்களின் முக்கியமான தரவுகளை அணுகியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், திருடப்பட்ட தரவுகளை வெளியிடுவதாக அச்சுறுத்தி குறித்த நிறுவனங்களிடம் கப்பம் கோரப்பட்டதாகவும் Europol தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,000 தாக்குதல்களுடன் இந்தக் குழு தொடர்புபட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 500 தாக்குதல்கள் வெற்றிகரமாக இடம்பெற்றிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழுவின் இணையதளம் மற்றும் சேவையகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், குறைந்தது 110 டெராபைட் தரவுகள் மேலதிக அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக Europol தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த குழுவின் மென்பொருள் உருவாக்குநராக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 வயதை எட்டியுள்ளதாகவும், சில குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் காலத்தில் அவர் சிறுவனாக இருந்ததால் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply