Category: உலக செய்திகள்
-
ஜாம்பியாவில் தேர்தல் – தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி
தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஹகைண்டே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான பிரைன் முந்துபிலே 38 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதேவேளை, தேர்தல் அதிகாரிகள் மீதான தாக்குதல் மற்றும் வாக்குச் சீட்டுகள் திருடப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. பின்னர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் மீண்டும்…
-
ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடை – சீனா கடும் கண்டனம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் “பொருளாதார டி-டே” பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian), இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தடைகளை விதிப்பதும் அழுத்தம் கொடுப்பதும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று தெரிவித்தார். மேலும், பொறுப்பான நடவடிக்கைகளை எடுத்து, தூதரக மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட…
-
புதிய பொருளாதாரத் தடை – ட்ரம்பின் வியூகத்தை விமர்சித்த ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை பிரசாரத்தை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித்துள்ளார். “பொருளாதார டி-டே” (Economic D-Day) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்று அவர் விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வாஷிங்டனின் முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மீதான கவனத்தை திசைதிருப்பவே இந்த நகர்வு…
-
பிரபல டிக்டாக்கர், மர்ம நபர்களால் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் மிகவும் பிரபல டிக்டாக்கராக இருந்தவர் ஆயிஷா கிலாமானா (சம்ஸூ பீபி). 28 வயதான இவரை, டிக்டாக்கில் சுமார் 1.3 மில்லியன் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தக்சிலா (Taxila) பகுதியில் தனது சகோதரி மற்றும் சகோதரருடன் காரில் சென்றுகொண்டிருந்தார், ஆயிஷா. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஆயிஷாவின் கழுத்தில் தோட்டா பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச்…
-
மெட்ரோ தொடருந்தில் பாம்புகள் – சீனாவில் பரபரப்பு
சீனாவின் நான்ஜிங் நகரில் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ தொடருந்தில், பயணி ஒருவர் கொண்டு வந்த வாளி கவிழ்ந்ததில் உயிருள்ள பாம்புகள் தொடருந்துக்குள் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளியில் இருந்து வெளியேறிய பாம்புகள் தொடருந்துப் பெட்டி முழுவதும் ஊர்ந்து சென்ற போதிலும், பயணிகள் பதற்றமடையாமல் அமைதியாக இருந்துள்ளனர். சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்குள், சக பயணிகள் இணைந்து பாம்புகளை கைகளால் பிடித்து மீண்டும் வாளிக்குள் போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள…
-
ட்ரம்ப் அறிவிப்பு: ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரத் நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் உதவி வழங்கி, உயிர்நாடியாகச் செயற்படும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் மிகக் கடுமையான பொருளாதார விளைவுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானை முழுமையாகத் தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய தலைவரை சந்திக்கவுள்ளதாக தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் நேரில் சந்திப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு வரும் நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் தனது அடுத்த ஆசியப் பயணத்தின்போது கிம் ஜாங் உன்னை சந்திப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், நவம்பரில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் அதாவது APEC மாநாட்டையொட்டி இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
-
சிங்கப்பூர் குடியரசின் 9-வது ஜனாதிபதி மாண்புமிகு தர்மன் சண்முகரத்தினம் அவர்கள்
அறிவு, பண்பு, சேவைக்கு எடுத்துக்காட்டு நம் தமிழ் இனத்தின் பெருமை 🇸🇬 #PresidentTharman #Singapore #TamilPride 1. பூர்வீகம் & குடும்பம் 🇸🇬 – முழு பெயர்: Tharman Shanmugaratnam – பிறந்த தேதி: 25 பிப்ரவரி 1957 – பிறந்த இடம்: சிங்கப்பூர் – இனம்: இலங்கை தமிழ் வம்சாவளி. அவரின் தந்தைவழி, தாய்வழி மூதாதையர்கள் இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் – மதம்: இந்து 2. பெற்றோர் – தந்தை: பேராசிரியர் K. Shanmugaratnam…
-
ஈரானின் தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்காவின் பல தசாப்த ராணுவ வியூகம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் நடைபெற்ற போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருந்த அனைத்து அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் கொண்டு தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.…
-
ஓமன் மீது குண்டுவீசுவோம்..’ 2வது முறையாக ட்ரம்ப் Open Warning.. உடனே ஈரான் கொடுத்த பதிலடி!
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா-ஈரான் ஆகிய இரண்டுதரப்பின் பக்கமும் சாயாமல் நடுநிலையில் இருந்துவந்த ஓமன், இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல்களால் பல்வேறு தாக்குதல் மற்றும் பாதிப்புகளுக்கும் உள்ளானது. இப்படி இருக்கும் சூழலில் சமீபத்திய ஈரான் அறிவிப்பால் கடுப்பான அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஓமன் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என இரண்டாவது முறையாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்படி ஓமனை குண்டுவீசி தகர்த்துவிடுவோம் என ட்ரம்ப் எச்சரிப்பது இது முதல்முறையல்ல. இதற்கு 2 மாதங்களுக்கு முன்பும் ‘ஹார்முஸ்…