Category: உலக செய்திகள்

  • மெலனியா ட்ரம்ப் திடீர் மாயம்

    ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது, அந்நாட்டு ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் மீது குறிவைத்து, கொலை செய்வோம் என்று ஈரான் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மெலனியா ட்ரம்பை கண்காணித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த ஈரான், உலக சுதந்திரப் போராளிகள் மூலம், அவரைக் கொல்ல முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், மெலனியா ட்ரம்ப்…

  • “AI அம்மா!” – AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்

    செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது அது தனிமனித உணர்வுகள் மற்றும் குடும்ப உறவுகளிலும் புதிய மற்றும் விசித்திரமான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் மிஸ்ரா (Misra) என்ற பெண் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது உலகளவில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில், தனக்கு ஒரு AI குழந்தை இருப்பதாகவும், அதற்கு ‘Lumen’ எனப் பெயரிட்டு வளர்த்து வருவதாகவும்…

  • காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    காஸா நகருக்கு மேற்கே உள்ள துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் (f/Ng) ஒன்றைக் இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில், குழந்தை உட்படக் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக அல் ஜசீரா அரபிக் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலின் தீவிரத்தின் காரணமாக, காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் சிலர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு…

  • ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) ஆட்சிப் பணிக்கான மக்கள் ஆதரவு விகிதம் (Approval rating) அவரது பதவிக் காலத்திலேயே மிகக் குறைந்த அளவான 33 சதவீதமாகச் சரிந்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறும் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்ற கவலையே, டொனால்ட் ட்ரம்பி;ன் செல்வாக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ளமைக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. ரொய்ட்டர்ஸ்ஃஇப்சாஸ் (Reuters/Ipsos) கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நான்கு நாட்களால் நடைபெற்று நேற்று முடிவடைந்த இந்த…

  • சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு

    இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஸ்திரமான வளர்ச்சியைப் பேணியுள்ளதாக சீன தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சீனப் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு தரவுகளை வெளியிட்ட அந்த துறை, இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை, 20 மில்லியன் சீன யுவான் அல்லது அதற்கு மேற்பட்ட வருடாந்த வருமானம் கொண்ட தொழில்துறை நிறுவனங்களின் சேர்க்கப்பட்ட மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன்…

  • மத்திய கிழக்கு உக்ரைனிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!

    ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்பட பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. டினிப்ரோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 16 குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் குழந்தைகளுடன் உள்ள அனைத்து குடும்பங்களும் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் கொன்ஷா தெரிவித்துள்ளார்.…

  • மதுபோதையில் வாகனம் ஓட்டிய வார்னருக்கு அபராதம்

    அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற PSL தொடரில், கராச்சி கிங்ஸ் அணியின் அணித்தலைவராக விளையாடினார். இந்த தொடரின் இடையே கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட அவுஸ்திரேலியாவிற்கு சென்ற டேவிட் வார்னர், சிட்னி புறநகரில் உள்ள மரோவ்பிரா பகுதியில் மது அருந்திவிட்டு கார் ஓட்டியுள்ளார். அங்கு காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் நடத்திய சுவாசப் பரிசோதனையின் போது, வார்னர் சட்ட வரம்பை விட 2…

  • ஹார்மோஸ் நீரிணை இனி அமெரிக்காவின் பகுதி – வரைபடத்தை வெளியிட்ட ட்ரம்ப்

    ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பின்னர், உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் பின்னர், தனது நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது. அதன் பின்னர், அமெரிக்காவும் தனது கப்பல்கள் மூலம் ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிட்டு அதனை கட்டுப்படுத்த நினைத்தது. புரிந்துணர்வு…

  • ஜெர்மன் விமானநிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருந்திய ட்ரோன்

    கிழக்கு ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக்/ஹாலே (Leipzig/Halle) விமானநிலையத்தின் சரக்கு மண்டலத்தில், உக்ரைனிய சரக்கு விமானங்களுக்கு அருகே வெடிபொருள் மற்றும் வெடிதூண்டியுடன் கூடிய ட்ரோன் ஒன்றை ஊழியர் ஒருவர் கண்டெடுத்தார். உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்களை அனுப்பப் பயன்படும் முக்கிய நேட்டோ (NATO) தளமாக இவ்விமானநிலையம் செயல்படுகிறது.  இத்தாக்குதல் தொழில்முறை ரீதியாகத் திட்டமிடப்பட்ட ஒரு “கலப்பின அச்சுறுத்தல்” (Hybrid threat) என ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் உளவு பார்ப்பது, சதித்திட்டங்கள் மற்றும்…

  • இம்ரான் வழக்கில் அதிரடி திருப்பம்!

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரவி வந்த நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சில வழக்கில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலா தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, அவர் மரணமடைந்து விட்டார் என்ற வதந்திகள்…