Category: உலக செய்திகள்

  • ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் கீவ் நகரில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்

    ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் கீவ் நகரில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நகரின் குடியிருப்பு கட்டிடங்கள், சேமிப்புக் கிடங்குகள், ஒரு பள்ளி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. தாக்குதலால் மின்சாரக் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. ரஷ்யா ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை (Ballistic Missiles) உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினரால் தடுக்க முடியவில்லை என்பதை உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா வழங்கிய ‘பேட்ரியாட்’…

  • அமெரிக்காவின் வாஷிங்டன் பெல்லா கடற்கரையில் கொலையாளி திமிங்கிலங்கள் கரைக்கு மிக அருகில் நீந்தி வந்துதுள்ளன

    அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஃபாக்ஸ் தீவின் (Fox Island) பெல்லா  கடற்கரையில் (Bella Bella Beach) விசித்திரமான மற்றும் அபூர்வமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கடற்கரையில் மக்கள் நின்றுகொண்டிருந்தபோது, ஓர் உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்த கொலையாளி திமிங்கிலங்கள் (Orcas) கரைக்கு மிக மிக அருகில் நீந்தி வந்து அவர்களுக்கு ஆச்சரியமளித்தன. கடற்கரை மணல் கரைக்கு சில அடிகளே தூரத்தில் ஆழமற்ற பகுதியில் இந்தக் கொலையாளி திமிங்கலக் கூட்டம் மிக அமைதியாக நீந்திச் சென்றது. அந்தப் பகுதியில்…

  • பங்களாதேஷின் புதிய ஜனாதிபதி தெரிவு

    பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவர் மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் வேட்பாளராக 78 வயதான மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் முன்னிறுத்தப்பட்டார். இந்நிலையில், பங்களாதேஷில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர்…

  • சமூக ஊடக விளம்பரத்துக்காக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணம் செய்து உயிரிழந்த இளைஞர்கள்!

    அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்கில் ஈடுபட்டு வருவதாக அயர்லாந்து காவல்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், டப்ளின் வானூர்தி நிலையத்துக்குப் பயணித்த மற்றுமொரு வாகனத்தின் மீது, தவறான திசையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி இடம்பெற்ற பயங்கர விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்…

  • ‘வட கொரியாவிடம் 120 அணு ஆயுதங்கள்..’ பகீர் கிளப்பிய தென் கொரியா!

    வட கொரியாவுக்கு ‘விரோதமானது’ என்றுகூறி தென்கொரியா உடனான கூட்டு ராணுவ பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதை தொடர்ந்து, 73 ஆண்டுகளாக இருந்துவரும் பழையான கூட்டணியில் விரிசல் விழுந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்கவிருப்பதாக ட்ரம்ப் கூறியிருப்பதும், தென்கொரிய தலைநகர் சியோலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடனான ஒரு திடீர் சந்திப்பின்போது பேசிய ட்ரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் கடிதப் பரிமாற்றம் செய்கிறீர்களா…

  • ”இஸ்ரேல் நாடே இல்லாமல் போகக்கூடும்..” – எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!!

    கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் தொடங்கிய மோதல் தற்போது 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே பல முறை போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேபோல, லெபனானில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல், சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல் என மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளிலும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தச்சூழலில் தான்,…

  • அரச குடும்பமே வேண்டாம்! காதலுக்காக தூக்கி எறிந்த இளவரசர்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவு?

    பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கும் மறைந்த இளவரசி டயானாவுக்கும் பிறந்தவர் இளவரசர் ஹாரி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மேகன் மார்க்கல் என்ற அமெரிக்க நடிகையைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரிட்டன் அரச குடும்பத்தின் வெள்ளையர் அல்லாத முதல் இளவரசி என்ற பெருமையையும் மேகன் மார்க்கல் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு, மேகன் ஒரு நடிகை மற்றும் வெள்ளையர் அல்லாதவர் என்ற காரணங்களைக் காட்டி, அவருக்கு எதிராக அரச குடும்பத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இதனால், இளவரசர் ஹாரி, 2020-ஆம்…

  • வரலாறு காணாத கடன்சுமையில் அமெரிக்கா? கருவூலத்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

    அமெரிக்க கருவூலத் துறை (Treasury Department) சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, அந்நாட்டின் மொத்த தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.3,800 லட்சம் கோடி ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபோது, அந்நாட்டின் தேசியக் கடன் சுமார் 19.95 டிரில்லியன் டாலராக இருந்தது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் கடன் சுமை 40.05 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. அதாவது, ட்ரம்ப் முதன்முறையாக…

  • தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

    தெற்கு லெபனானில் உள்ள பல பகுதிகளில், இஸ்ரேலிய இராணுவம் கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள வாடி அல்-சலூகி (Wadi al-Salouqi), அல்-ஹுஜைர் (al-Hujair) ஆகிய நகரங்கள் மற்றும் கப்ரிகா (Qabrikha), டூலைன் (Touline), ஹுலா (Hula) ஆகிய பள்ளத்தாக்குப் பகுதிகளில் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் தெற்கே உள்ள அல்-மன்சூரி (al-Mansouri) நகரத்திலும் இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்தச்…

  • சிரியா மீதான தாக்குதல் – நெதன்யாகுவை எச்சரித்த இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

    சிரியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலை இஸ்ரேலின் எதிர்க்கட்சியான ‘ஜனநாயகக் கட்சித் தலைவர்’ யாயிர் கோலன் (Yair Golan) கடுமையாக விமர்சித்துள்ளார். இது துருக்கியுடன் தேவையற்ற மோதலை ஏற்படுத்தும் ஆத்திரமூட்டும் மற்றும் ஆபத்தான நடவடிக்கை என்று அவர் எச்சரித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இராணுவ பலம் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படுவதாகவும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரவாத மற்றும் நம்பகத்தன்மையற்ற நபராக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நெதன்யாகு இஸ்ரேல் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கிறார்…