Category: உலக செய்திகள்

  • அமெரிக்கப் பொருளாதாரத் தடை அனைத்து நாடுகளுக்குமான ‘போர்ப் பிரகடனம்’: இரான் கடும் கண்டனம்!

    இரானின் அனைத்து பொருளாதாரத் தடைகளும் அனைத்து நாடுகளுக்குமான “போர்ப் பிரகடனம்” ஆகும் என்று இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான உறுப்பு நாடுகள் மீது அமெரிக்கா தனது அதிகாரம் செலுத்த முயல்வதாக இரான் சாடியுள்ளது. அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் சொந்த எல்லைப் பகுதி போலக் கருதுவதாக அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இரான் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்ய விரும்பினாலும், அவர்கள் இன்னும் சரியான முடிவுக்கு வரத் தயாராக இல்லை…

  • மியான்மர் பௌத்த மடாலயத்தின் மீது ராணுவ வான்வழித் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

    மியான்மரின் மத்திய சாகாயிங் பிராந்தியத்தில் உள்ள மியாங் நகருக்கு அருகில் அமைந்துள்ள பௌத்த மடாலயம் ஒன்றின் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை சுமார் 9:00 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பௌத்த துறவிகளின் தியானப் பயிற்சியில் பங்கேற்பதற்காக மடாலயத்தில் திரண்டிருந்த 50 முதல் 70 வயதுக்குட்பட்ட 11 ஆண்களும் 3 பெண்களும் பலியாகியுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஜனநாயக ஆதரவுப் படையினர் இடிபாடுகளில் இருந்து உயிர்தப்பியவர்களை மீட்க முயன்றபோது,…

  • காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – உக்ரைன் வணிக வளாகத்தில் மீட்புப் படையினரை இலக்கு வைத்த ரஷ்யா: 22 குழந்தைகள் காயம்!

    உக்ரைனின் மத்திய பகுதியிலுள்ள அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரீக் (Kryvyi Rih) நகரிலுள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடத்திய கொடூர ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் 22 குழந்தைகளும் அடங்குவர் என்றும், 29 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார். முதல் ட்ரோன் தாக்குதல் நடந்த அரை மணி நேரத்திற்குப்…

  • சாலையில் தரையிறங்கிய விமானம் – 4 வாகனங்கள் நொறுங்கி ஒருவர் பலி

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் (Prince George) பகுதியில், சாலையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்; பல வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் தங்களின் அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஜேமி பாவ்லுக் (Jaime Pawliuk) கூறுகையில், விமானம் தன்னை நோக்கி அதிவேகமாக வந்ததாகத் தெரிவித்தார்: திடீரென விமானம் என் வாகனத்திற்கு மேல் வந்தது. சாலையோரப் பள்ளத்தில் வண்டியை திருப்ப முயன்றேன், ஆனால் விமானத்தின் இறக்கை எனது…

  • அமெரிக்காவுக்கு பதிலடி: டாலருக்கு டாலர் அளவில் வரி விதிக்க கனடா உறுதி

    அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான கடைசி முயற்சியும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புதிய ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியாததால், கனடா ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய 50 சதவீத சுங்க வரிகள் சனிக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் அமலுக்கு வந்தன.   இதையடுத்து, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சம அளவில் பதிலடி சுங்க வரிகளை கனடாவும் விதிக்கும் என பிரதமர்…

  • உசைன் போல்டையே விஞ்சிய வேகம்.. ஓடிய மனித ரோபோவுக்கு நேர்ந்த சோகம்!

    சீனாவில், உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (World Humanoid Robot Games)நடைபெற இருக்கிறது. 51 வகையான போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில்16 நாடுகளைச் சேர்ந்த 666 குழுக்களுடைய 2,000-க்கும் மேற்பட்ட மனித உருவ ரோபோக்கள் (Humanoid Robots) களமிறங்குகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியைப் பரிசோதிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் மனிதர்களின் அன்றாடப் பணிகளுக்கு ரோபோக்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு, இப்போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதையொட்டி, போட்டிக்கு முன்னோடியாக மனித…

  • 60 மணி நேர இடைவெளியில் ஆயுதங்களை இறக்கிய பாகிஸ்தான்

    எல்லை விவகாரம் தொடர்பாக, இந்தியா – பாகிஸ்தான் உறவு பல ஆண்டுகளாகவே மோசமடைந்துள்ளது. அதிலும், கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்குப் பதில் இந்த உறவு, மேலும் சிக்கலைச் சந்தித்துள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி வெற்றிகண்டது. அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு துருக்கியும் மறைமுகமாக உதவிசெய்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், சீனா மற்றும் துருக்கியில் இருந்து ராணுவக் கனரக வாகனங்கள் மூலம்…

  • ஸ்வீடன் பாடசாலை ஒன்றில் வாள் தாக்குதல்: பலர் காயம்

    ஸ்வீடனில் உள்ள மத்திய பாடசாலை ஒன்றில் வாளுடன் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். ஸ்வீடனின் ஃபாகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல்ஸ்கோலன் பாடசாலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. எனினும், சந்தேக நபர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வன்முறையில் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் நீதித்துறை அமைச்சர் குன்னர் ஸ்டிரோம்மர் ஆகியோர் தங்களது…

  • யுக்ரைன்- ரஷ்ய போர்: அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள்

    யுக்ரைனின் ‘பேட்ரியாட்’ (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தீர்ந்துவிட்டதால், யுக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் மீதான ரஷ்யாவின் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் உயிரிழப்பு சாதனை அளவை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனினும்,யுக்ரைன் தனது நீண்ட தூர ஆளில்லா வானூர்திகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் விநியோக மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தநிலையில் யுக்ரைனின் தொடர்…

  • பாலஸ்தீன எக்சன் அமைப்பினர் பயங்கரவாதிகள் அல்லர்: தீர்ப்பு வெளியானது

    இங்கிலாந்தில் செயற்படும் ‘பாலஸ்தீன எக்சன்’ (Palestine Action) அமைப்பைச் சேர்ந்த ஐந்து செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின்கீழ் தீர்ப்பு வழங்கப்படாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லங்காஷையர் மாகாணத்தில் உள்ள பர்ன்லி (Burnley) நகரில் பார் க்ளேஸ் வங்கி கிளை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி தண்டனை வழங்க முடியாது என்று, பிரெஸ்டன்…