Category: உலக செய்திகள்
-
யுக்ரைன்- ரஷ்ய போர்: அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள்
யுக்ரைனின் ‘பேட்ரியாட்’ (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தீர்ந்துவிட்டதால், யுக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் மீதான ரஷ்யாவின் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் உயிரிழப்பு சாதனை அளவை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனினும்,யுக்ரைன் தனது நீண்ட தூர ஆளில்லா வானூர்திகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் விநியோக மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தநிலையில் யுக்ரைனின் தொடர்…
-
பாலஸ்தீன எக்சன் அமைப்பினர் பயங்கரவாதிகள் அல்லர்: தீர்ப்பு வெளியானது
இங்கிலாந்தில் செயற்படும் ‘பாலஸ்தீன எக்சன்’ (Palestine Action) அமைப்பைச் சேர்ந்த ஐந்து செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின்கீழ் தீர்ப்பு வழங்கப்படாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லங்காஷையர் மாகாணத்தில் உள்ள பர்ன்லி (Burnley) நகரில் பார் க்ளேஸ் வங்கி கிளை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி தண்டனை வழங்க முடியாது என்று, பிரெஸ்டன்…
-
பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து: தொடரிலும் முன்னிலை
சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹெடின்லியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது அப்துல்லா ஷாபிக் 61 ஓட்டங்களை பெற்றார். எனினும் ஏனைய வீரர்கள் எவரும் 30க்கும் அதிக எண்ணிக்கை ஓட்டங்களை பெறவில்லை. ஒலே ரொபின்சன் 5 விக்கட்டுக்களையும், ஜோஸ் டங் 5 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடு;த்தாடிய…
-
‘தி சைக்கிள் ஒஃப் லவ்’- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா
ஜாதி அடக்குமுறை மற்றும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி சைக்கிள் ஒஃப் லவ்’ (The Cycle of Love) என்ற புதிய திரைப்படம் குறித்த தகவல்களை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து ஸ்வீடன் நாட்டுக்குத் தன் காதலியைத் தேடி 6,000 மைல்கள் சைக்கிளிலேயே பயணம் செய்த இந்தியக் கலைஞர் பி.கே. மகாநந்தியா (PK Mahanandia) வின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.a இந்தியாவில் அவர் எதிர்கொண்ட ஜாதி…
-
டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு
தனியுரிமை மீறல் வழக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, இளவரசர் ஹரி உள்ளிட்ட ஏழு முக்கியப் பிரமுகர்கள் ‘டெய்லி மெயில்’ பத்திரிகையின் வெளியீட்டாளரான ஏ.என்.எல் (ANL) நிறுவனத்திற்கு முதற்கட்டமாக 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.என்.எல் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட தனியுரிமை மீறல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தொகை முதற்கட்ட நஷ்டஈடாகச் செலுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
பிராட் பீக் பனிச்சரிவில் காணாமல் போன அமெரிக்க மலையேற்ற வீரரின் உடல் கண்டெடுப்பு
பாகிஸ்தானில் உள்ள பிராட் பீக் சிகரத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த 10 பேர் கொண்ட சர்வதேச மலையேற்றக் குழுவில், காணாமல் போன கடைசி நபரான அமெரிக்க மலையேற்ற வீரர் மல்லோரி கெய்ஸின் (Mallory Geis) உடலை தேடுதல் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். டெக்சாஸ் மாநிலம் சான் அன்டோனியோவைச் சேர்ந்த 39 வயதான மல்லோரி கெய்ஸ், பாகிஸ்தானில் உள்ள 8,000 மீட்டர் உயர சிகரத்தில் ஏற முதன்முதலாக முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. “அனைவராலும் ஆழமாக…
-
டிரம்ப்பின் உதவியாளர் நடாலி ஹார்ப் பற்றி அனைவரும் பேசுவது ஏன்?
ஜார்ஜியா மாநில ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜான் ஓசாஃப் பிரச்சார நிகழ்வு ஒன்றில் பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 35 வயதான சிறப்பு உதவியாளர் நடாலி ஹார்ப் (Natalie Harp) ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என CBC News செய்தி வெளியிட்டுள்ளது. செனட்டர் ஜான் ஓசாஃப் பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்பை விமர்சித்துப் பேசும்போது, அதிபர் “தனது நடன அரங்கை (ballroom) கட்டவும், கத்தார் அமீரால் பரிசளிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்பற்ற பறக்கும்…
-
முற்றிலும் முடங்கிய ஈரான்.. ஒருவேளை உணவுக்கே சிக்கல்.. பெரும் ஆபத்தில் பொதுமக்கள்!
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலின் ஆதரவோடு அமெரிக்கா படையெடுத்தது. ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதேநேரம். ஈரான் உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை முடக்கியது. அதோடு, மத்திய கிழக்குப் பகுதியில் இருந்த அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருகட்டத்தில், ஈரானை ராணுவரீதியாக முடக்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஈரானை பொருளாதாரரீதியாக முடக்க பல்வேறு நடவடிக்கைகளை…
-
அயர்லாந்தின் வரலாற்றுக் கோட்டை.. ரூ.335 கோடிக்கு வாங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்
மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் (mark-zuckerberg) அயர்லாந்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை வாங்கி, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மார்க் ஜுக்கர்பெர்க். இவர், தற்போது அயர்லாந்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகையை வாங்கியிருப்பதுதான் உலகின் பேசுபொருளாகி உள்ளது. அயர்லாந்தின் காவுண்டி வாட்டர்ஃபோர்டு (County Waterford) பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ரன்கல்லி கோட்டை (Strancally Castle) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகையை வாங்கியுள்ளார். தனியார் முதலீட்டு…
-
வானிலை ஆய்வு மையம் தீவிர சூறாவளி எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
ஒரு மிகப்பெரிய சூறாவளி உருவாகி அருகில் உள்ள மரங்களையும், லாரி, பேருந்து, கார் போன்ற வாகனங்களையும், தனக்குள்ளே இழுக்கும். மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், அந்த வீட்டையே உள்ளிழுக்கும் அளவுக்கு அந்த சூறாவளி மிகப்பெரியதாக இருக்கும். இயற்கை சீற்றங்களை மையமாக கொண்டு உருவாகும் ஹாலிவுட் படங்களில் தான் இப்படியான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இது நிஜமாகும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள ஓஷன் சிட்டி மற்றும்…