Category: உலக செய்திகள்

  • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!

    ஜப்பானின் டோக்கியோ தலைநகர் உட்பட கிழக்கு காண்டோ (Kanto) பிராந்தியத்தில் ஜப்பனிய நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு இபராகி (Ibaraki) மாகாணத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளதுடன், இதனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். என்.எச்.கே. (NHK) செய்திச் சேவையின்படி, சைதாமா, சிபா மற்றும்…

  • BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! ‘நமஸ்தே இந்தியா’ என வைரலாகும் விளம்பர காணொளி!

    பிரபல தென்கொரிய K-pop இசைக்குழுவான BTS, கூகுள் ஜெமினி (Google Gemini) விளம்பரத்தில் தோன்றி இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், BTS குழுவினர் நமஸ்தே இந்தியா எப்படி இருக்கிறீர்கள்? உங்களை நாங்கள் மிஸ் செய்கிறோம், இந்தியாவுக்கு வர விரும்புகிறோம்” என ஹிந்தியில் பேசியுள்ளனர். தென்கொரிய இசைக்கலைஞர்கள் இந்திய மொழியில் பேசி அன்பு செலுத்தியுள்ளதால், இந்திய ரசிகர்கள் (ARMY) சமூக வலைதளங்களில் இதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும், BTS குழுவினர் விரைவில் இந்தியாவிற்கு…

  • ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் (Don Pettit), பூமிக்கு மேலே உருவாகும் ஒரு அபூர்வ இயற்கை நிகழ்வைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். அடர்ந்த மேகங்களுக்கு இடையே பிரகாசமாக ஒளிரும் ஊதா நிற (Purple) மின்னலின் வியப்பூட்டும் காட்சியை அவர் விண்வெளியில் இருந்து படம்பிடித்துள்ளார். சாதாரண வானுார்திகள் பறக்கும் உயரத்தையும் தாண்டி, சுமார் 50,000 அடி உயரத்தில் உருவாகும் இத்தகைய புயல் மேகங்களை விண்வெளிச் சுற்றுப்பாதையில் இருந்து மட்டுமே மிகத் தெளிவாகக்…

  • உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!

    காஸா நகரின் ஜீடூன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முகமது அல்-சஹ்வி என்பவர் வீதியோரக் விற்பனைத்தளத்தில் தேனீர் விற்றுக் கொண்டிருந்தபோது கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்தநிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, அவரது 20 வயதான மகன் உமர் அல்-சஹ்வி மயானத்திற்குச் சென்றபோது, அங்கே இடநெருக்கடி காரணமாகப் பல உடலங்கள் மிக நெருக்கமாக அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார். தற்போது காஸாவில் ஒரு புதைகுழியை அமைப்பதற்கு சுமார் 500 முதல் 1,000 டொலர்கள் வரை செலவாகிறது.…

  • முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுக்கொலை

    தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜோலானி டெட், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 38 வயதான ஜோலானி தனது வீட்டிற்கு காரில் சென்றிருந்தபோது, முகமூடி அணிந்த இருவர் அவரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜோலானி டெட் 2007–2008ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.எஃப். பறக்கும் எடைப் பிரிவிலும், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.ஓ. இளம்பருவ…

  • வங்காள விரிகுடாவில் பனாமா சரக்குக் கப்பல் விபத்து

    ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில், பனாமா கொடியுடன் கூடிய என்ற சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒகஸ்ட் 20 அன்று இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பலில் சுமார் 1,700 தொன் இரும்புத் தாது ஏற்றிச் செல்லப்பட்டது. கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 20 பேர் சீனாவையும், 3 பேர் மியான்மரையும், ஒருவர் பங்களாதேஷையும் சேர்ந்தவர்கள். ஒகஸ்ட் 23 இரவு…

  • உசேன் போல்டின் 100 மீட்டர் உலக சாதனையை முறியடித்த சீன ஹியூமனாய்டு ரோபோ!

    பெய்ஜிங்கில் நடைபெறும் உலக ஹியூமனாய்டு ரோபோ போட்டியில், சீனாவைச் சேர்ந்த ‘டியான்ங்காங் அல்ட்ரா’ (Tiangong Ultra) என்ற ஹியூமனாய்டு ரோபோ 100 மீட்டர் இலக்கை 9.39 வினாடிகளில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 2009-இல் படைத்த 9.58 வினாடி உலக சாதனையை விட அதிவேகமானது. ‘பெய்ஜிங் ஹியூமனாய்டு ரோபோ இன்னோவேஷன் சென்டர்’ உருவாக்கிய டியான்ங்காங் அல்ட்ரா, பந்தயத்தின் தொடக்கத்தில் பின்தங்கியிருந்தாலும் இறுதிப் பகுதியில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான…

  • அமெரிக்கப் பொருளாதாரத் தடை அனைத்து நாடுகளுக்குமான ‘போர்ப் பிரகடனம்’: இரான் கடும் கண்டனம்!

    இரானின் அனைத்து பொருளாதாரத் தடைகளும் அனைத்து நாடுகளுக்குமான “போர்ப் பிரகடனம்” ஆகும் என்று இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான உறுப்பு நாடுகள் மீது அமெரிக்கா தனது அதிகாரம் செலுத்த முயல்வதாக இரான் சாடியுள்ளது. அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் சொந்த எல்லைப் பகுதி போலக் கருதுவதாக அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இரான் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்ய விரும்பினாலும், அவர்கள் இன்னும் சரியான முடிவுக்கு வரத் தயாராக இல்லை…

  • மியான்மர் பௌத்த மடாலயத்தின் மீது ராணுவ வான்வழித் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

    மியான்மரின் மத்திய சாகாயிங் பிராந்தியத்தில் உள்ள மியாங் நகருக்கு அருகில் அமைந்துள்ள பௌத்த மடாலயம் ஒன்றின் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை சுமார் 9:00 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பௌத்த துறவிகளின் தியானப் பயிற்சியில் பங்கேற்பதற்காக மடாலயத்தில் திரண்டிருந்த 50 முதல் 70 வயதுக்குட்பட்ட 11 ஆண்களும் 3 பெண்களும் பலியாகியுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஜனநாயக ஆதரவுப் படையினர் இடிபாடுகளில் இருந்து உயிர்தப்பியவர்களை மீட்க முயன்றபோது,…

  • காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – உக்ரைன் வணிக வளாகத்தில் மீட்புப் படையினரை இலக்கு வைத்த ரஷ்யா: 22 குழந்தைகள் காயம்!

    உக்ரைனின் மத்திய பகுதியிலுள்ள அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரீக் (Kryvyi Rih) நகரிலுள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடத்திய கொடூர ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் 22 குழந்தைகளும் அடங்குவர் என்றும், 29 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார். முதல் ட்ரோன் தாக்குதல் நடந்த அரை மணி நேரத்திற்குப்…