Category: இலங்கை செய்திகள்
-
சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது 22ஆவது திருத்தச் சட்டமூலம்..
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (25) நாடாளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது, ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்தை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த 22ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
-
முன்பள்ளி சிறுவர்களின் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் முன்பள்ளி சிறுவர்களில் 64 சதவீதமானோர் நாளொன்றுக்கு 30 நிமிடங்களுக்கு மேலாக கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியைப் பயன்படுத்துவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, ஆய்வில் பங்கேற்ற சிறுவர்களில் சுமார் 32 சதவீதமானோர் நாளொன்றுக்கு 10 முதல் 11 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே உறங்குவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 43 சதவீதமான சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினித் திரைகளைப் பயன்படுத்தியவாறு உணவு உட்கொள்வதாகவும் ஆய்வில்…
-
முல்லைத்தீவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (24) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை மற்றும் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். இதன்போது மகள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், இருவரும் சிகிச்சை பலனின்றி…
-
22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டம்
“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” என்ற முழக்கத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (24) காலை 9.00 மணிக்கு பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் நடைபெறவுள்ளது. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை, நிலவும் சர்ச்சைக்கிரிய சூழலைக் காரணம் காட்டி, இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில்லை…
-
கிளிநொச்சியில் மற்றுமோர் சோழன் உலக சாதனை நிகழ்வு
கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயிலும், பிரஷாந்தினி நர்த்தனாலயத்தின் பரதநாட்டிய மாணவி செல்வி பி.எல். றெஜிஸ் றெஜிஸ்ரிகாவின் சோழன் உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு கிளிநொச்சி, கே.கே மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. றெஜிஸ் றெஜிஸ்ரிகா தனது 9 ஆவது வயதில் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக பரதநாட்டியம் ஆடி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது இவரது 3 ஆவது உலக சாதனையாக அமைந்துள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…
-
அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு கோரி இந்திய தூதுவரிடம் மனோ கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக சவூதி அரசாங்கத்தை அணுகி கோரிக்கை விடுத்த பின்னர், இந்திய அரசாங்கம் தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இன்று இந்தியத் தூதுவரை சந்தித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி தலையீட்டை கோரி இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக…
-
மட்டக்களப்பு மாங்கேணியில் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பு, வாகரை மாங்கேணி பகுதியில் தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் 9ஆம் நாள் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றுள்ளது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வாகரைப் பிரதேச செயற்பாட்டாளர் ர. தயாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் குழுவினரும் இணைந்துகொண்டனர். நிகழ்வில் அருட்தந்தை, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ். சுவேந்திரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ. அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.…
-
279 பேர் உயிரை பறித்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு! 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை! இலங்கை நீதிமன்றம் அதிரடி
இலங்கையில் கடந்த 2019ல் அரங்கேறிய ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்தது. இலங்கை வரலாற்றில் நடந்த மோசமான தீவிரவாத தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 220 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து தொடர் தற்கொலைப் படை தாக்குதல்கள்…
-
யாழில் தியாக தீபம் திலீபன் சதுக்கம் அங்குரார்ப்பணம்
தியாக தீபம் திலீபனின் நினைவுகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘தியாக தீபம் திலீபன் சதுக்கம்’ அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நல்லூர் தியாக தீபம் நினைவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை 7 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. “வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவுகளையும் ஆவணப்படுத்தும் நிகழ்வு” என்ற தொனிப்பொருளில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தலைமுறைகள் கடந்தும் வரலாற்றில் நினைவுகூரப்படும் தியாக தீபம் திலீபனின் நினைவுகளைப் பாதுகாப்பதுடன், அவரது காலப்பகுதியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களையும்…
-
நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! சற்றுமுன் வெளியானது நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, சதித்திட்டம் மற்றும் உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட 24 பிரதிவாதிகளில், 15 பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர். எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டு, விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நிரந்தர மூன்று பேர் கொண்ட அமர்வால் இந்த…