Category: இலங்கை செய்திகள்
-
அனோஜனின் நிலை தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்!
”சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம் வாழ வேண்டிய நிலை தொடருகின்றது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர், சைவ சமயத்தின்…
-
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு விடுதலையையும், மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியிலே நேற்று (21) மாலை மெழுகுதிரி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது. தன்னார்வ இளைஞர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-
யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு புதிய நிதியம்
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகித்து முகாமைத்துவம் செய்வதற்காக 2026 செப்டம்பர் 18 ஆம் திகதி நிதியம் ஒன்று முறையாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த மையத்தின் நிர்வாக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் அதேசமயம் ஸ்திரமான நடவடிக்கைகளுக்கான நிதி சுதந்திரத்தை வழங்கவும் குறித்த நிதியமானது ஓர் இடைக்கால நிர்வாக அமைப்பாக செயற்படும். குறித்த நிதியமானது யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர், யாழ் மாநகர சபை மேயர், வட மாகாண நிர்வாக அமைச்சர் (அல்லது நியமனதாரர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்…
-
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கு – தீர்ப்பு இன்று
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ளது. நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கில் அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள்…
-
யாழ் சிறைச்சாலைக்குள் கடும் சித்தரவதை ; பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்
யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் கடுமையான சித்தரவதை காரணமாக விளக்கமறியல் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபரான இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 சிறு பெண் பிள்ளைகளின் தந்தையான 39 வயதான நபர் தனது மனைவியை தகாத முறையில் ஏசி தாக்க முயன்ற தனது தங்கையின் கணவனை தாக்கிய காரணத்தால் கைது செய்யப்பட்டு 24.08.2026 அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாட்களில் சிறைச்சாலையில் கடுமையான முறையில்…
-
ஜனாதிபதியை சந்தித்த அனோஜனின் குடும்பத்தினர்
அனோஜனின் சகோதரர் அடங்கிய குழுவினர் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். ஜனாதிபதியை சந்தித்து தனது அண்ணனின் விடுதலை குறித்து கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றப்போவதாகவும் அனோஜனின் தம்பி தெரிவித்தார். மேலும், ஜனாதிபதியை சந்திக்கக் கிடைத்ததற்கும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் ஜனாதிபதிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
-
இனி திருமணம், DJ நிகழ்ச்சிகள், பேருந்துகள், வர்த்தக நிலையங்களில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயம்!
இலங்கையில் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் புலமைச் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், திருமணம், களியாட்டங்கள், நிறுவன நிகழ்வுகள், DJ நிகழ்ச்சிகள், அத்துடன் வங்கிகள் மற்றும் வர்த்தக மையங்களில் இசை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் பெறுவதைக் கட்டாயமாக்கி புதிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இந்த விதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 20,000…
-
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் புதிய திருப்புமுனை – 10 எம்.பிக்கள் மீது விசாரணை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பிருப்பதாக பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது அவர்களின் தன்னார்வ சம்மதம் மற்றும்…
-
அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி!
அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான…
-
விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றிய போது தான் ஒரு விடுதலைப் புலி என பகிரங்கமாகக் குறிப்பிட்டமை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ரணிலின் கவனத்திற்கு கொண்டுவந்த…