Category: இலங்கை செய்திகள்

  • யாழில் பணம், கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது

    யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த குழுவொன்றை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று (27) மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது, காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் 9 இலட்சம் ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 9 பேரும் கைது செய்யப்பட்டதுடன், குறித்த…

  • திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் அகற்றம்

    நல்லூரடியில் இருந்த திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவிதமான முன்னறிவித்தலும் வழங்காமல் 15க்கும் மேற்பட்ட பொலிஸார் வாகனங்களில் வந்து, சப்பாத்து கால்களுடன் உள்ளே சென்று பலவந்தமாக அந்த சிலையை அகற்றிச் சென்றுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  • பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் உயிரிழப்பு

    பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்றில் வந்த நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர்.

  • அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பாடசாலை தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

    அச்சுவேலி பகுதியில் இயங்கும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தாக்குதல் காட்சிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சீர்திருத்தப் பாடசாலையில் தங்கியுள்ள மாணவர்கள் சிலரை, மற்றுமொரு மாணவர் குழுவினர் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த சீர்திருத்தப் பாடசாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்…

  • லண்டன் வீதி விபத்தில் 16 வயது இலங்கை மாணவி உயிரிழப்பு

    பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற  வீதி விபத்தில் 16 வயதுடைய இலங்கை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெலீஷா பிரேமரத்ன என்ற அம்மாணவி, தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த வியாழக்கிழமை (24) காலை 8.15 மணியளவில் அவர் வழக்கம்போல் பாடசாலைக்கு நடந்துகொண்டிருந்த வேளையிலேயே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில், பலத்த காயமடைந்த மெலீஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து தொடர்பில் கைது…

  • யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனிற்கு அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள் கூட்டம்!

    யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றது. அதன் போது ஈகை சுடரினை மாவீரர்களான அன்புக்குமாரன் மற்றும் தம்பமணி ஆகிய இரு மாவீரர்களின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம்…

  • இலங்கை பாராளுமன்றத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு

    நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினர் செப்டெம்பர் 24ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன்போது , சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான பேராசிரியர் ஸ்வென் சிமொன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரால்ஃப் சீக்காட்ஸ், ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) குழுவின் வெளிவிவகாரம்…

  • வெடுக்குநாறி ஆலயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்

    ​வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.​ இன்று(26) புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ​இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர், ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை…

  • சிறுநீரக ​வைத்தியசாலையில் சிலிண்டர் வெடிப்பு – 7 பேர் காயம்

    பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • சிலாபம் முதல் பொத்துவில் வரை கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

    சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் உயரமான அலைகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அமைந்துள்ள குறித்த கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருவளை முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கடற்பகுதிகளில் செயற்படும் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும்…