Author: Six Side Media
-
ஈழமுரசின் இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 30, 2026 ஞாயிறு
பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி துவிதியை காலை 10.09 வரை பிறகு திரிதியை நட்சத்திரம் உத்திரட்டாதி யோகம் அமிர்தயோகம் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் பகல் 12.00 முதல் 1.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / பகல் 3.15 முதல் 4.15 வரை சந்திராஷ்டமம் மகம் சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் மேஷராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம்…
-
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ராட்சத கணவாய் இனப்பெருக்க நிகழ்வு இந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது
ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் மிகப்பெரிய ராட்சத கணவாய் (Giant Cuttlefish) இனப்பெருக்க நிகழ்வு இந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக லட்சக்கணக்கான கணவாய்கள் கூடும் இந்தப் பகுதியில், இந்த ஆண்டு வெறும் 1,811 கணவாய்கள் மட்டுமே வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் (63,000) 97% குறைவு ஆகும். பொதுவாக மில்லியன் கணக்கில் இடப்படும் முட்டைகள், இந்த முறை வெறும் 440…
-
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: 675 உடலங்கள் மீட்பு; 2,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இதுவரை 675 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 2,400-க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஒன்ராறியோ மாகாணத்தின் முதல்வர் “Lake Ontario. Now and Always” என்ற வாசகம் அடங்கிய பலகையை ஹாமில்டன் பகுதியில் நிறுவியுள்ளார்.
அமெரிக்காவுடன் நிலவி வரும் வர்த்தக மற்றும் பெயரிடும் மோதலுக்கு பதிலடியாக, ஒன்ராறியோ மாகாணத்தின் முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford), “Lake Ontario. Now and Always” (ஒன்ராறியோ ஏரி. இப்போதும் எப்போதும்) என்ற வாசகம் அடங்கிய பெரிய பலகையை ஹாமில்டன் பகுதியில் உள்ள கடற்கரையில் நிறுவியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஒன்ராறியோ ஏரியின் பெயரை ஒருதலைபட்சமாக “Lake America” (அமெரிக்கா ஏரி) என்று மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் இது தொடர்பான கிண்டலான…
-
கிவ் நகருக்கு அருகில் உள்ள மைலா கிராமத்தில் உள்ள ஆயுதக் கிடங்கு மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர்
கிவ் நகருக்கு அருகில் உள்ள மைலா (Myla) கிராமத்தில் உள்ள ஆயுதக் கிடங்கு மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்தத் தாக்குதலால், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள், கண்ணிவெடிகள் மற்றும் ஆளில்லா விமானப் (drone) பாகங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தால் அப்பகுதியில் உள்ள சுமார் 130 வீடுகளும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான…
-
நோர்வே மன்னர் மறைவு: தனது திருமணத்தையே ஒத்திவைத்த ஒஸ்லோ முதல்வர்!
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (King Harald V) காலமானதைத் தொடர்ந்து, ஒஸ்லோ மாநகர முதல்வர் ஆன் லிண்ட்போ (Anne Lindboe) தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒஸ்லோ நகர முதல்வர் ஆன் லிண்ட்போவுக்கும், பால் சான்ட்விக் (Pål Sandvid) என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணம், நடைபெறவிருந்ததுள்ளது. எனினும் மன்னர் ஹரால்ட் காலமானதைத் தொடர்ந்து அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகள் நோர்வேயை ஆட்சி செய்த மன்னர் ஐந்தாம் ஹரால்ட்( 89) ஒஸ்லோவில்…
-
டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை: உயிருக்கு ஆபத்து என நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக வடிவிலான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநல நிறுவனமான ‘டிரிம்போஸ் இன்ஸ்டிடியூட்’ இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள போதைப்பொருள் பரிசோதனை மையங்களில் ஆகஸ்ட் மாதத்தில் ஒப்படைக்கப்பட்ட சில மாத்திரைகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் ‘பி.எம்.எம்.ஏ’ (PMMA – para-methoxymethamfetamine) என்ற அபாயகரமான வேதிப்பொருள் மிக அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளின் ஒரு புறத்தில்…
-
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அபிராமி இலங்கை வந்துள்ளார். ‘வானவில்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ‘மிடில் கிளாஸ் மாதவன் ‘தோஸ்த் ‘சார்லி சாப்ளின்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் இவர் நடித்த ‘விருமாண்டி’ திரைப்படத்தின் ‘அன்னலட்சுமி’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ‘மகாராஜா’ ‘வேட்டையன்’ மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ மற்றும் அண்மையில் வெளியான ‘பிளாஸ்ட்’ ஆகிய திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டடப் பொறியாளரான அசோக் சரவணன் தனது எதிர்கால மனைவி ராதிகா வர்ஷிணிக்குத் திருமணப் பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள தனது திருமணத்தை மறக்க முடியாததாக மாற்ற நினைத்த அசோக் சரவணன் தனது சகோதரியின் உதவியுடன் நிலவில் 1 ஏக்கர் நிலத்தை இணையம் மூலம் வாங்கி அதனை மனைவிக்கும் பரிசளிக்க முடிவு செய்துள்ளார். நிலவில் நிலம் விற்பனை செய்வதாகக் கூறி…
-
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அவருக்கு ‘Z+’ பிரிவின் கீழ் 58 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்தப் பாதுகாப்பானது ‘Z’ பிரிவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையும் 33 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.