Author: Six Side Media
-
ஹோர்முஸ் நீரிணை குறித்த டிரம்பின் அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்சமயம் “மிகவும் நல்ல நிலையில்” உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன் தினமும் சராசரியாக 30 கப்பல்கள் அந்தப் பகுதி வழியாகப் பாதுகாப்பாகப் பயணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், ஈரானின் பொருளாதாரம், இராணுவம் மற்றும் அதன் தலைமைத்துவம் ஆகியவை பெருமளவில் சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், அதன் காரணமாக ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா தவிர்க்கப்போவதில்லை என்றும்,…
-
கிரீஸ் – இஸ்ரேல் இடையே 3.5 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம்
கிரீஸ் நாடு இஸ்ரேலுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன்படிஇ 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான பன்முகப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பை (air defence system) ஏதென்ஸிற்கு வழங்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. டெல் அவிவ் நகரில் நேற்று திங்கட்கிழமை கையெழுத்தான இந்த ஒப்பந்தம்இ கிரீஸ் தனது ராணுவத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ‘அகில்லெஸ் ஷீல்ட்’ (Achilles Shield) என்று அழைக்கப்படும் இந்த வான் பாதுகாப்புத் திட்டத்திற்காக கிரீஸ் 2036…
-
2026இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூட்டப்பட்ட மகுடம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். மேலும்,’KGF’ திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த…
-
கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக கையில் பச்சை குத்திய தாய்!
கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். இதன் மூலம் தனது மகன் எந்த சூழ்நிலையிலும் அவன் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியும் என கூறினார். கனாடாவில் வசித்து வரும் ஜெசிகா என்பவர், மூளை வளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகனான ஹண்டர் உடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு உணவருந்த சென்றார். அப்போது ஹண்டர் தனது வார்த்தைகளையும், எண்ணங்களையும்…
-
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் பரிதாப பலி!
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஆபர்ன் பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சனிக்கிழமை காலை 11 மணியளவில் நெடுஞ்சாலை 101 இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிழக்கில் சென்ற செவ்ரோலெட் இம்பாலா காரும், மேற்கில் வந்த ஃபோர்டு எஸ்கேப் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. ஃபோர்டு எஸ்கேப் காரை ஓட்டி வந்த புரோஸ்பெக்ட் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செவ்ரோலெட்…
-
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மரணம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில்…
-
இளம் பெண் ஓட்டிய காரினால் 9 மாத குழந்தை பரிதாப மரணம்
அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பார்க்கிங் பகுதியில் பெண்ணொருவர், கார் மூலம் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்தது. நியூ ஜெர்சியின் ஜாக்சன் டவுன்ஷிப்பில் உள்ள ‘NPGS’ என்ற Kosher மாளிகைக்கடை உள்ளது. இதன் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது 9 மாத ஆண் குழந்தையையும், 5 வயது மகளையும் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதாகக்…
-
கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர்
அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார். இரு கைகளாலும் வெற்றி…
-
ஒட்டாவா டைட்டன்ஸ் (Ottawa Titans) அணி கியூபெக் கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது
பிரன்டியர் லீக் (Frontier League) பேஸ்பால் தொடரில் கியூபெக் கேபிடல்ஸ் (Québec Capitales) அணிக்கு எதிரான போட்டியில் 5–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஒட்டாவா டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கான தனது இடத்தை உறுதி செய்துள்ளது. ஏ.ஜே. ரைட் (AJ Wright) மற்றும் ஹண்டர் ஸ்டோக்லி (Hunter Stokely) ஆகியோரின் ஆரம்ப ஹோம் ரன்கள் மூலம் ஒட்டாவா டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து,…
-
தோனி குறித்து வெளியான பரபரப்பு செய்தி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை தோனி கோரியதாகப் பரவி வரும் வதந்திகளை அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், அணியின் பங்குகளைப் பெறுவதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் சில செய்திகள் பரவின. தோனி…