Author: Six Side Media

  • பாகிஸ்தானில் சத்தமின்றி ராணுவ ஆட்சி? மக்களாட்சி காலி

    பாகிஸ்தானில் கடந்த காலத்தில் பல முறை ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது. இந்த முறை நேரடியாக மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் கூட ராணுவ தளபதியாக இருக்கும் அசிம் முனீரிடம் மெல்ல அதிகாரம் குவிந்து வருகிறது. இதனால் அங்கு மறைமுகமாக ஒரு ராணுவ ஆட்சி உருவாகியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள், அந்நாட்டின் ராணுவ அதிகாரத்தை மேலும் ஒரே மையத்தில் குவித்துள்ளன. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்கும் ஃபீல்டு மார்ஷல்…

  • மர்மத்தை மூடி மறைக்கும் சீனா? திபெத்தில் இயற்கையின் கோரம்!

    இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறை உருகி நோபளத்தின் கோஷி ஆற்றில் பாய்ந்ததால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை டிரோன் கேமராக்களை கொண்டும், மீட்பு படையினர் மூலமாகவும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படியான சூழலில், இந்த விபத்து குறித்து மிகப்பெரிய…

  • இனி NRI மாப்பிள்ளையே கிடையாது! இந்திய வரதட்சணை மார்க்கெட்டையே அடித்து காலி செய்த டிரம்ப்!

    அமெரிக்காவில் பணியாற்றும் ஹெச்-1பி விசா தாரர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கான ஹெச்-4 பணி அனுமதியை ரத்து செய்ய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்த இந்த நடைமுறையை மாற்றியமைக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களை மட்டுமல்லாமல், இந்தியாவின் திருமண சந்தையையும், குறிப்பாக அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கான வரதட்சணை மார்க்கெட்டையும் தலைகீழாக மாற்றத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, H-4…

  • தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை!

    தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், கோயிலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்வதற்கு இன்று (1) முதல் முழுமையான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கைபேசிகள் மூலம் நிழற்படம், காணொளி மற்றும் செல்ஃபி எடுப்பதுடன், சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக நுழைவு வாயில்கள் மற்றும் பாதணி பாதுகாப்பு…

  • இந்தோனேசியா காட்டுத்தீ.. சூப்பர்மேன் உடையில் 17 வயது சிறுவன்

    தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறண்ட காலநிலை மற்றும் குறைந்த மழையளவு காரணமாக காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ளது. விவசாய நிலங்களை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட தீயே இத்தகைய பேரழிவுக்கு காரணமாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான வழக்குகளில் 72பேரை கைது செய்திருக்கிறது அந்நாட்டு காவல்துறை. இதற்கிடையில், கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் ஏற்பட்ட பல்வேறு காட்டுத்தீ சம்பவங்களில் ஏறக்குறைய 3 லட்சம் ஹெக்டர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.…

  • முடிவுக்கு வந்த ’மெஸ்ஸி’ சாகப்தம்.. 21 ஆண்டு கால்பந்து பயணத்துக்கு விடைகொடுத்தார் ‘MESSI’.!

    மெஸ்ஸி என்னும் மாயாஜால கால்பந்தாட்டக்காரனின் பயணம் ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் இல்லை ஒவ்வொரு சக மனிதனுக்கும் உத்வேகம் கொடுக்கக்கூடிய பயணமாகும்.. உலகப் புகழ்பெற்ற புரட்சியாளர் சேகுவாரா மற்றும் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா பிறந்த அர்ஜென்டினா நாட்டு அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். அந்த அணியில் மாரடோனாவின் பத்தாம் எண் ஜெர்சியை அணிந்து, அவரது வாரிசாகவே கால்பந்து உலகில் களம்கண்ட மெஸ்ஸிக்கு சர்வதேச பயணம் அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை.. ஒரு மிகப்பெரிய லெகஸியை சுமக்க வேண்டிய பாரம்…

  • நேபாள வெள்ளத்தில் சிட்னி யாழ்ப்பாணத் தமிழ் குடும்பம் மாயம்

    நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர், சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ABC News Australia⁠ உள்ளிட்ட ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தக் குடும்பம் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளன. அவர்கள் Himalayan Glacier Adventures ஏற்பாடு செய்திருந்த கைலாஷ் யாத்திரைக் குழுவில் பயணித்ததாக ABC…

  • ஈழமுரசின் இன்றைய ராசிப்பலன் (01.09.2026) செவ்வாய்

    பஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி சதுர்த்தி காலை 7.56 வரை பிறகு பஞ்சமி நட்சத்திரம் அசுவினி யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் உத்திரம் சூலம் வடக்கு பரிகாரம் பால் மேஷம் ராசி பலன்  மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று பல போராட்டங்களுக்குப் பிறகு, உங்கள்…

  • வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்த சோபியா

    நியூயொர்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் சோபியா கெனின் 6-2, 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னதாக, நோவக் ஜோகோவிச் – மரியானோ நவோன் இடையேயான போட்டி நீண்ட நேரம் நீடித்த காரணத்தால் இந்தப்போட்டி நேற்று நள்ளிரவைத் தாண்டியே ஆரம்பமானது. மகளிர் டென்னிஸ் வரலாற்றில் இவ்வளவு தாமதமாக ஆரம்பமான முதல் போட்டி இதுவாகும். இதன்போது 46…

  • சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு: இருதரப்பு உறவுகளைபலப்படுத்த உறுதி

    கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வரும் சூழலில், இரண்டு நாடுகளுக்குடையேயான மூலோபாயக் கூட்டணி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதத்திற்குப் பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். சர்வதேச ஒழுங்கில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்திருந்தாலும், பீய்ஜிங் மற்றும் மொஸ்கோ இடையேயான…