Author: Six Side Media

  • நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!

    காஸாவில் நிதிப் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு காரணமாக சமூக சமையலறைகளின் இயக்கம் பெருமளவில் சரிவடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள் போதிய உணவின்றித் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஒரு உணவை 7 பேர் பங்கிட்டுக்கொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓச்சா அமைப்பின் தரவுகளின்படி கடந்த மார்ச் பாதியில் 165 சமையலறைகள் மூலம் தினமும் வழங்கப்பட்டு வந்த 15 லட்சம் உணவுகள் ஜூலை மாதத்தில் 102…

  • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள்

    சட்டப்பூர்வ வதிவிட உரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றும் வகையிலான ஒப்பந்தங்களை முன்னெடுக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளது. டென்மார்க்கில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் சமீபத்திய முயற்சியாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத ஒரு நாட்டுடன் மக்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஐவர் குழு…

  • அமெரிக்காவில் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி

    அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸின் AA618 விமானம் கடந்த வியாழக்கிழமை டெக்சாஸின் டல்லாஸிலிருந்து நியூவர்க்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பயணியின் கைகள் ஜிப் டைகளால் கட்டப்பட்டதுடன், அவர் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணைய காவல்துறை தெரிவித்துள்ளது. அரிசோனாவைச் சேர்ந்த 67…

  • செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு மக்களுக்கு அவர் கூறவிருந்த சக்திவாய்ந்த செய்தியை சபையில் பகிரங்கமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் பழிவாங்கல். 12ஆம்…

  • கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விசித்திர விருந்தினர்

    கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்தது. அண்டை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு ஆண்டர்சன் உடனடியாகத் தனது கேமரா மற்றும் கைப்பேசியுடன் தோட்டத்திற்கு விரைந்தார். அங்கு காட்டுப்பூனைகள் மிகவும் அமைதியாகத் தோட்டத்திலும், வீட்டின் முன்பக்கப் புல்வெளியிலும் அமர்ந்து ஓய்வெடுத்தன. தாய் காட்டுப்பூனை புல்வெளியில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டது. சில நிமிடங்களிலேயே அவை…

  • கனடாவைச் சேர்ந்த ஓவியரும் காட்சி கலைஞருமான மைக்கேல் ஹாரிங்டன் அமெரிக்காவில் நடத்தவிருந்த தனது கலைக் கண்காட்சியை ரத்து செய்துள்ளார்.

    கனடாவைச் சேர்ந்த ஓவியரும் காட்சி கலைஞருமான மைக்கேல் ஹாரிங்டன் அமெரிக்காவில் நடத்தவிருந்த தனது கலைக் கண்காட்சியை ரத்து செய்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு கலைக் கூடத்தில் நவம்பர் மாதம் இவரின் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படும் கலைப் பொருட்களுக்கு 50 சதவீத வரி  விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய வரியைச் செலுத்தி தனது கலைப் படைப்புகளை அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்வது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்பதால், அவர் கண்காட்சியை…

  • அமெரிக்காவைவிட ஆப்பிரிக்கா பெரிதாக இருக்கும் புதிய உலக வரைபடத்துக்கு ஐ.நா. சபை ஒப்புதல்

    பு​திய உலக வரைபடம் தொடர்​பான தீர்​மானம் ஐ.நா. சபை​யில் நேற்று பெரும்​பான்மை ஆதர​வுடன் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி ஆப்​பிரிக்க கண்​டம் பெரி​தாக​வும் வடஅமெரிக்​கா, ஐரோப்​பிய கண்​டம் சிறிய​தாக​வும் மாற்​றப்​பட்டு உள்​ளன. கடந்த 1569-ம் ஆண்​டில் நெதர்​லாந்​தைச் சேர்ந்த புவி​யியல் ஆராய்ச்​சி​யாளர் கெரார்​டஸ் மெர்​கேட்​டர் உலக வரைபடத்தை உரு​வாக்​கி​னார். இதில் பூமத்​திய ரேகைக்கு அரு​கில் உள்ள பகு​தி​கள் சிறிய​தாக​வும் துரு​வப் பகு​தி​கள் பெரிய​தாக​வும் காட்​டப்​பட்​டன. உதா​ரண​மாக மெர்​கேட்​டரின் உலக வரைபடத்​தில் கிரீன்​லாந்து தீவும் ஆப்​பிரிக்க கண்​ட​மும் ஒரே அளவாக காட்​சி​யளித்​தன.…

  • நேபாளத்தில் 10 நாட்களுக்குப் பின்னர் மேலும் 2 பேர் உயிருடன் மீட்பு

    நே​பாளத்​தில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்டு பெரும் பாதிப்பை ஏற்​படுத்​திய நிலை​யில் 10 நாட்​களுக்​குப் பின்​னர் 2 பேர் நேற்று உயிருடன் மீட்​கப்​பட்​டுள்​ளனர். நேபாளத்​தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்​பட்ட பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி​யில் பேரிடர் மீட்​புப் படை​யினரும், ராணுவத்​தினரும் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்டு 9 நாட்​களுக்​குப் பின்​னர் நேற்று முன்​தினம் 2 தொழிலா​ளர்​கள் உயிருடன் மீட்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் மேலும் 2 பேரை நேற்று நேபாள ராணுவத்​தினர் உயிருடன் மீட்​டனர். இதுகுறித்து நேபாள ராணுவ…

  • அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம்: ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரித்த வெள்ளை மாளிகை அதிகாரி

    அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்​.11-ம் தேதி, அல்​காய்தா தீவிர​வா​தி​கள் 2 பயணி​கள் விமானத்தை கடத்​திச் சென்று அங்​கிருந்த இரட்டை கோபுர கட்​டிடங்​கள் மீது மோதினர். இதில் அந்​தக் கட்​டிடங்​கள் தீப்​பிடித்து எரிந்து இடிந்து தரைமட்​ட​மானது. இந்த சம்​பவத்​தில், அந்​தக் கட்​டிடத்​தில் இருந்​தவர்​கள் மட்​டுமல்​லாது, 19 தீவிர​வா​தி​கள், 300 தீயணைப்பு வீரர்​கள் உட்பட மொத்​தம் 2,996 பேர் உயி​ரிழந்​தனர். இச்​சம்​பவத்​துக்​கு,ஒசாமா பின் லேடனின் அல் காய்தா தீவிர​வாத அமைப்பு பொறுப்​பேற்​றது. இதையடுத்து பாகிஸ்​தானில் பதுங்கி…

  • தோஷம் கழிப்பதாக கூறி நிர்வாண பூஜை நடத்தி கனடா பெண்ணிடம் பணம் பறித்த கிளி ஜோசியர் கைது

    பாட்​டுப்​போட்​டி​யில் பங்​கேற்க சென்னை வந்த கனடா நாட்டு பெண்​ணிடம் தோஷம் கழிப்​ப​தாக கூறி, நிர்​வாண பூஜை நடத்தி பணம் பறித்​ததுடன், மிரட்​டல் விடுத்த கிளி ஜோசி​யரை போலீ​ஸார் கைது செய்​தனர். இலங்​கையை பூர்வி​க​மாகக் கொண்ட 37 வயது பெண் ஒரு​வர் கனடா நாட்​டின் குடி​யுரிமை பெற்று அங்கு வசித்து வரு​கிறார். இவர், சென்​னை​யில் உள்ள ஒரு பிரபல தனி​யார் தொலைக்​காட்​சி​யில் நடை​பெற்ற பாட்​டுப்​போட்​டி​யில் கலந்து கொள்ள சில மாதங்​களுக்கு முன்பு சென்னை வந்​தார். அப்​போது அவர், பெசன்ட்…