Author: Six Side Media
-
மகனை பார்வையிட ஷிராந்தி வெலிக்கடைக்கு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் இவ்வாறு அங்கு சென்றுள்ளார். அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் சற்றுமுன்னர் சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வழக்கின் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த வௌ்ளிக்கிழமை…
-
சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (செப்டர்ம்பர் 3) நடைபெற்ற சட்டப்பேரவையின் போது பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு திங்கள் கிழமை பதிலளிக்கப்போவதாகவும், யாரும் எழுந்து வெளியில் போகக்கூடாது எனவும் பேசியிருந்தார். முதல்வரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான், இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்துப்…
-
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான…
-
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார். அத்துடன், அவரைச் சந்திப்பதற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கன்…
-
நேபாளப் பேரழிவுக்குப் பிறகும் சீனா பிடிவாதம்.. இந்தியாவுக்கு ஆபத்து!!
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி உடைப்புப் பேரழிவுக்குப் பிறகும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட நீர்மின் திட்டத்தை அமைப்பதில் சீனா உறுதியுடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது எதிர்கால மின்தேவையைப் பூர்த்தி செய்ய சீனா முன்னெடுத்துள்ள திட்டம் இந்தியாவுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருக்கிறது. திபெத் பகுதியில் அருணாச்சல பிரதேச எல்லைக்கு 200 கிலோமீட்டருக்கு முன்பாக 5 பிரம்மாண்ட அணைகளைக் கட்டி 60 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. நேபாளப் பேரழிவைத் தொடர்ந்து இந்த திட்டத்தைச்…
-
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது
காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள…
-
ஈழமுரசின் இன்றைய ராசிபலன்- செப்டம்பர் 7, 2026 திங்கள்
பஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி துவாதசி பகல் 2.28 வரை பிறகு திரயோதசி நட்சத்திரம் பூசம் மாலை 5.11 வரை பிறகு ஆயில்யம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் மூலம் மாலை 5.11 வரை பிறகு பூராடம் சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் மேஷம்…
-
கொப்பளித்து வெடிக்கும் எரிமலை.. 2018-ம் ஆண்டு சுனாமி மீண்டுமா? பீதியில் இந்தோனேசியா!
இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா எரிமலை வெடித்து வெளியான சாம்பல், ஜாவா தீவு பகுதியில் சுமார் 20,000 அடி உயரம் வரையும், சுமத்ரா தீவு பகுதியில் எரிமலைப் புகை மற்றும் சாம்பல் கலந்த மேகம் சுமார் 50,000 அடி உயரம் வரையும் மேலெழுந்ததாக இந்தோனேசிய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஜகார்த்தாவின் முக்கிய விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சர்வதேச விமானங்கள் உட்பட 209 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம்…
-
போரில் அமெரிக்கா தோற்றுவிட்டது : அதிரவைத்த CIA இயக்குநர்
கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது.…
-
பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி
தனக்கு எதிரான பலத்த விமர்சனங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கிடையில் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடப் போவதாக உலக கால்பந்தாட்ட சங்கமான பிஃபா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 2027-இல் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என இன்ஃபான்டினோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கிண்ண ஆரம்ப விழாவின் போது இது குறித்த கேள்விகளை இன்ஃபான்டினோ தவிர்க்க முற்பட்டபோதிலும் பிஃபா…