Author: Six Side Media

  • ”Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு” – நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

    நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர், நிதின் கட்கரி. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு…

  • காட்டுத்தீயால் பேராபத்து.. ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!!

    தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகளால் பெருமளவில் காற்று மாசுபாடு ஏற்படுவதாக ஐநாவின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், காற்று மாசுபாடும் காலநிலை மாற்றமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை என்றும், எதிர்காலத்தில் கடுமையான காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உலக சுகாதார அமைப்பின் காற்றுத் தர இலக்குகளை எட்டுவது கடினமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொழில் துறை மற்றும் போக்குவரத்து உமிழ்வுகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், ஸ்பெயின், பிரான்ஸ்,…

  • முதல்வர் விஜயின் சட்டப்பேரவை உரை.. கங்கனா ரனாவத் கேட்ட கேள்வி?

    பெண்களின் குணநலனை விமர்சிப்பது அவர்களை கீழே இறக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பெண்களை எப்படி நடத்துகிறோம் என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். முன்னதாக, நேற்று சட்டப்பேரவையில் பேசிய விஜய், பெண்களை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறியிருந்தார். இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால், உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார். இந்தச்சூழலில் தான்,…

  • இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!

    சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மனிதவடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர், இந்த ரோபோக்களை இராணுவப் பயிற்சி தளங்களிலும், போர்க்களங்களிலும் பயன்படுத்தும் ஆய்வுகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ‘PLA டெய்லி’, ஆய்வகங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை இராணுவ பயன்பாட்டுக்கு விரைந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. உலகளவில் உற்பத்தியாகும் மனிதவடிவ ரோபோக்களில் சுமார் 95 சதவீதத்தை சீன நிறுவனங்களே தயாரிக்கின்றன. இந்த வணிக ஆதிக்கத்தை இராணுவப் பயன்பாட்டிற்கும்…

  • மஹிந்த தலைமையில் அனுராதபுர பேரணி: ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து!

    அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக…

  • தமிழக முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையில், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை இலக்காகக் கொண்டு குற்றச்சாட்டுகள்…

  • சமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்

    இலங்கையின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். எயார்பஸ் வானூர்தி கொள்முதல் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 8, 2026 செவ்வாய்

    பஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி துவாதசி பகல் 2.28 வரை பிறகு திரயோதசி நட்சத்திரம் பூசம் மாலை 5.11 வரை பிறகு ஆயில்யம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் மூலம் மாலை 5.11 வரை பிறகு பூராடம் சூலம் வடக்கு பரிகாரம் பால் மேஷராசி…

  • ஜெர்மனிய துாதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ரஷ்யா!

    செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் (St Petersburg) அமைந்துள்ள ஜெர்மன் துணைத் தூதரகத்தை மூடுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. அத்துடன், செப்டம்பர் 18-க்குள் தூதரகம் தன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்தல் விடுத்துள்ளது. ஜெர்மனி கடந்த வாரம் தனது நாட்டில் இருந்த இரண்டு ரஷ்ய தூதரகங்களை மூடியதற்கு பதிலடியாகவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. லீப்ஜிக் வானுார்தி நிலையத்தின் (Leipzig Airport) மீது நடத்தப்பட்ட தோல்வியுற்ற ஆளில்லா வானுார்தி தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம்…

  • அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட இஸ்லாமிய நாடுகளை அழைக்கும் ஈரான்!

    அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் புதிய பொதுச் செயலாளரான இஸ்மாயில் உல்ட் ஷெய்க் அகமதுடன் (Ismail Ould Cheikh Ahmed) தொலைபேசியில் உரையாடியபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், ஈரானின் இறையாண்மைக்கு…