Author: Six Side Media

  • மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை

    இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள்…

  • சவூதியின் முக்கிய தளங்களை நோக்கி ஏவப்பட்ட பாரிய ஏவுகணைகள்..

    சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய தளங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதியின் கமிஸ் முஷைத் பகுதியிலுள்ள விமானப்படை தளம், அப்ஹா, நஜ்ரான் மற்றும் ஜஸான் பகுதியிலுள்ள சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல்களில் எண்ணெய் ஆலைகள்…

  • இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

    இலங்கையில் இணையம் வழியாக தனிநபர்களின் ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு எண்களை பயன்படுத்தி நடந்த பல நிதி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் மோசடி விசாரணைப்பிரிவும் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வாடகை அடிப்படையில் பணம் செலுத்தி வாங்கப்பட்ட வெளிநாட்டு வங்கிக்கணக்குகளிலிருந்து, மோசடிக்காரர்கள் பல மில்லியன் ரூபாய் பணத்தை மாற்றியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், தனிநபர்களை இலாபகரமான வணிகங்களுடன் இணைப்பதாகவும், அவற்றிலிருந்து பெறப்படும் பணம் அந்த கணக்குகளில் வரவு வைக்கப்படும்…

  • வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்!

    கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை இன்று (08) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர் அன்புடன் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர். நீண்டகால…

  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கை – கடன் சுமை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கவலை!

    சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (07) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை தொடர்பான மானித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 16 பக்கங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விரைவாக ரத்து செய்தல், அச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு-கிழக்கு நிலங்களை விடுவித்தல், நீதிபதிகளின் பதவிக் காலம் மற்றும் நீதித்துறை அமைப்பை அரசியல் செல்வாக்கின்றிப் பேணுதல் போன்றவை இந்த…

  • 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார். மதியம் 1.25 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு…

  • நேபாள பெருவெள்ளம் – தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

    நேபாள பெருவெள்ளத்தின் 13ஆவது நாளான நேற்று (07) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,356 ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர். இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் 20,000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  • 2வது அதிநவீன போர்க்கப்பலை சேவையில் இணைத்த வட கொரியா!

    வட கொரியா தனது 2வது அதிநவீன போர்க்கப்பலை சேவையில் இணைத்துள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து முத்தரப்பு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வுன் தனது மகளுடன் வான்சன் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறித்த ‘காங் கான்’ போர்க்கப்பலை, நாட்டுக்கு அா்ப்பணித்தாா். இந்த ‘காங் கான்’ போர்க்கப்பல், அணு ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை ஏந்திச் சென்று தாக்கும் திறன் கொண்ட 5,000…

  • அராலியில் கிணறுகள் பெருக்கெடுப்பால் பரபரப்பு!

    அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன. குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது. அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து…

  • உயிரிழந்த ராணுவ வீரர்! மனைவிக்கு இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்கா!

    மத்தியக் கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய மோதல் 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இப்போரில், ஆயிரக்கணக்கான ஈரானிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கைகளின் போது, 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், போரில் உயிரிழந்த அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவரின் மனைவிக்கு, “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக போரை அறிவிக்கவில்லை” என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் இழப்பீட்டுச்…