Author: Six Side Media

  • கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!

    அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த ‘போம்பார்டியர்’ (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு ‘பிக்பேங்க்’ (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்று சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு…

  • “பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !

    பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ள இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கெல் ஆகியோர், அரச குடும்பத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும் “செயலில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்கள் அல்ல என்று அரண்மனை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸ் சார்பில் லோர்ட் சேம்பர்லைன் அனுப்பியுள்ள இந்த கடிதம், ஹரி மற்றும் மேகனின் தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஹரி மற்றும் மேகன் தொடர்ந்து “தனியார் குடிமக்களாகவே” கருதப்படுவார்கள் என்றும், “ஹிஸ் அண்ட் ஹர் ரோயல் ஹைனஸ்” (His…

  • ஆல்பர்ட்டா மாகாணம் தனி நாடாகும் விவகாரம்

    ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள். ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள். இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது. விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள்…

  • செம்மணி புதைகுழி விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

    செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண்டனில் உள்ள Primrose Hillல் ஒன்றுதிரண்டனர். தமிழர் தாயகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் ஒன்றான செம்மணி புதைகுழியில் தோண்டி எடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை அடையாளப்படுத்தும் விதமாக, நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடிப் படுத்து இறந்த உடல்கள் போல் காட்சி அளித்தனர். செம்மணியில் புதைக்கப்பட்டிருந்த உடல்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிகோலிய 18 வயது…

  • கனடாவில் பெற்றோரைக் கத்தியால் குத்திய மகன் கைது

    கனடாவின் மொண்ட்ரியால் நகரிலுள்ள செயிண்ட்-லியோனார்ட் பகுதியில், 60 வயதைக் கடந்த பெற்றோரைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவர்களுடைய 26 வயது மகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வியோ பூலேவார்டு மற்றும் ஜீன்-ரிவார்ட் தெரு அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 68 வயதுடைய ஆண் மற்றும் 66 வயதுடைய பெண் ஆகிய இருவரின் உடலின் மேல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் பலத்த கத்திக் குத்து காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட…

  • கனடாவில் கோர விபத்து: இளைஞர் பரிதாப பலி!

    கனடாவின் நியூ பிரன்சுவிக் மாநிலத்தில் உள்ள கெட்ஜ்விக் ஆற்றுக்கு அருகில் உள்ள பால்ஸ் புரூக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எதிரே வந்த வாகனத்துடன் மோதாமல் தவிர்க்க முயன்றபோது, ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேரிட்டுள்ளதாகப் பொலிஸார் நம்புகின்றனர். வாகனத்தில் பயணித்த ஒரேயொரு பயணியான 26 வயதுடைய இளைஞர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செயிண்ட்-குவென்டின் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஓட்டுநருக்கு…

  • மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!

    மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார். ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்​தை​யும் பிடித்​தனர். வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள்…

  • போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் புதிய சங்க நிர்வாகிகள் சந்திப்பு

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினராக இணைய நடிகர் ரஜினிகாந்த் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் சேரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சங்க நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக…

  • கொலை மிரட்டல் வழக்கில் பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதிக்கு பிணை

    பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், துணை ஜனாதிபதி சாரா டுடர்தேவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் பேசிய சாரா டுடர்தே, தான் கொலை செய்யப்பட்டால் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மார்ட்டின் ருமுல்டெஸ் ஆகியோரை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில்…

  • நேபாள பெருவெள்ளம் – 5,000 பேர் மாயம்

    நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களில் சுமார் 600 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 275 பேர் இந்தியர்களாவார். நேபாள…