Author: Six Side Media
-
சர்வதேச நாணய நிதியக் குழு இன்று நாட்டுக்கு
நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இன்று (10)இலங்கை வரவுள்ளது. அந்த குழுவானது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இந்த மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய…
-
இன்றைய ராசிபலன்- செப்டம்பர் 10, 2026 வியாழன்
பஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி சதுர்த்தசி காலை 10.56 வரை பிறகு அமாவாசை நட்சத்திரம் மகம் பகல் 3.14 வரை பிறகு பூரம் யோகம் அமிர்தயோகம் பகல் 3.14 வரை பிறகு சித்தயோகம் ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை நல்லநேரம் பகல் 10.15 முதல் 11.15 வரை சந்திராஷ்டமம் உத்திராடம் பகல் 3.14 வரை பிறகு திருவோணம் சூலம் மேற்கு பரிகாரம் தைலம் மேஷம் ராசி…
-
களுபோவில பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு தாக்குதல்
களுபோவில – விமலசிறி மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-
பயணப் பைக்குள் ராட்சத முதலைத் தலை – இத்தாலி விமான நிலையத்தில் அதிர்ச்சி
இத்தாலியின் டுரின் நகரிலுள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் பயணப் பையில் இருந்து காய்ந்த நிலையில் இருந்த ராட்சத முதலைத் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமியில் இருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்த பயணியின் உடைமைகளை இத்தாலிய நிதி பொலிஸாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, துணிகளுக்கு நடுவே பரிசுப் பொதியைப் போன்று சுற்றப்பட்ட நிலையில் முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்பு விதிகளின்படி, உரிய சர்வதேச அனுமதி மற்றும் சான்றிதழ்கள் இன்றி முதலை…
-
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்!
தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஹரூஃப் – ஸெப்தீன் (Zebdine) நகரங்களை இணைக்கும் வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இலக்குவைத்து இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர். அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட…
-
ரஷ்யா – வடகொரியாவை இணைக்கும் புதிய பாலம்
ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய பாலம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் ராணுவக் கூட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் திறப்பு விழா, காணொளி கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில் ரஷிய பிரதமர் மிக்ஹைல் மிஷுஸ்டின் மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் கலந்துகொண்டனர். துமேன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள…
-
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் கொரான் கடற்பரப்பில் ‘எம்.வி. ஜூன் அஸ்டர்’ என்ற பயணிகள் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகே, கரையிலிருந்து சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கப்பலில் மொத்தம் 134 பேர் பயணித்துள்ளனர்.இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 87 பயணிகளின் நிலை குறித்து தகவல் இல்லாததால், அவர்களைத் தேடும் பணிகளை பிலிப்பைன்ஸ் கடலோரக்…
-
எண்ணெய் கப்பல்கள் மீது தீவிர தாக்குதல்
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்தானில் உள்ள ‘அல் அஸ்ராக்’ (Al Azraq) இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. முன்னதாக, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து…
-
கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை
கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார். செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது. மேலும்,…
-
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்
கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகி வருகிறது. 27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது. விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…