Author: Six Side Media

  • ஹமாஸின் தாக்குதல் எச்சரிக்கை.. நெதன்யாகுவுக்கு வந்த தகவல்.. மறுத்த அரசு.. சர்ச்சையில் இஸ்ரேல்!

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்குதலுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு, ஹமாஸ் பெரிய அளவிலான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்ததாக இஸ்ரேல் நாளிதழான ஹாரெட்ஸ் (Haaretz) வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் யாஹ்யா சின்வார், மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் தயாராகி வருவதாக பாலஸ்தீன முன்னாள்…

  • நேபாளத்துக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. மீண்டும் உலுக்கிய இயற்கை!

    இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகியதால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று நேபாளத்தின் கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொன்ட பனிப்பாறை உருகி, 300 கி.மீ வேகத்தில் மினி சுனாமி போல் வந்த இந்த வெள்ளத்தில் சிக்கி, 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியிலும், இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பீகார், உத்தரப்பிரதேசம்,…

  • முற்பகையால் யாழில் இடம்பெற்ற கொடூர கொலை

    பருத்தித்துறை – துன்னாலையில் நேற்று (09) இரவு கொடூர கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ஒரு இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்று இரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர், ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர் மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.…

  • மன்னார் கடலில் எரிபொருள் ஆய்வு – கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை

    எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு தகவல் கிடைத்துள்ளது. மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதகமான இந்தச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கான நேர்மறையான முன்னெடுப்புகளாக இருப்பினும்,…

  • அமெரிக்காவை சுட்டெரிக்கும் வரலாறு காணாத கோடை – உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் தவிப்பு!

    அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration – NOAA) தகவலின்படி, நாட்டின் தொடர்ச்சியான 48 மாநிலங்களில் சராசரி வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும், கடந்த…

  • “இன்றைக்கும் தழும்புகள் இருக்கு…” : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!

    மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைவாசத்தின்போது தாக்கப்பட்டதில் தனது தாடை என்பு உடைந்ததாகவும், அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தழும்புகள் இன்றளவும் தனது உடலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் சைகை செய்ததாக சர்ச்சை எழுந்திருந்தது. இந்தச்…

  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு வலுவிழப்பு!

    நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை வலுவிழக்கச் செய்து உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ததன் பின்னர் உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு,…

  • சினிமாவை மிஞ்சிய நிஜ வாழ்க்கை நாடகம் : ரவி மோகனை விளாசிய ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு!

    நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, தாங்கள் பிரிவதாக ரவி மோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனையடுத்து, இருவரையும் மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்…

  • அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் – ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்

    ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எந்த அருகதையும் இல்லை என்று ஈரானின் முதல் துணை ஜனாதிபதி மொஹமட் ரெசா அரேப் (Mohammad Reza Aref ) தெரிவித்துள்ளார். சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) ஆளுநர்கள் குழு ஈரானுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் இரட்டை வேடத்தையே காட்டுவதாகவும், சமாதான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் ஈரான் உறுதியாகப் பின்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். அணு ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், ஹிரோஷிமா தாக்குதலை நடத்தியவர்களும், அணுசக்தி…

  • நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நெருங்கிய வெள்ளை மாளிகை உதவியாளர்களுக்குப் பெருமளவில் பணப்பரிசுகளை வழங்கியுள்ள விவகாரம் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் தலைமைச் செயலக உதவியாளர் நாடலி ஹார்ப் (Natalie Harp) மற்றும் முக்கிய உதவியாளர்கள் சிலருக்கு கடந்த ஆண்டு விடுமுறை காலப் பரிசாக தலா 45,000 அமெரிக்க டொலர்களை பணப்பரிசாக வழங்கியுள்ளதாக நிதி வெளிப்படைத்தன்மை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின்படி, நாடலி ஹார்ப் (Natalie Harp),…