Author: Six Side Media
-
டெல்லியில் ஒன்றுகூடும் உலக தலைவர்கள் – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (12) ஆரம்பமாகி, நாளை (13) நிறைவடையவுள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று டெல்லி வந்தடைந்துள்ளதுடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று இந்தியா வரவுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின்…
-
வலி. வடக்கு காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
வலி. வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களாவுக்கு முன்பாக நேற்று (11) 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் குறித்த பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பேணப்பட்டு…
-
உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் வான் பாதுகாப்பு உதவி – கனடா அறிவிப்பு
உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உதவியை கனடா அறிவித்துள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்கு பிறகு, உக்ரைனுக்கு 350 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உபகரண உதவி தொகுப்பு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தார். உக்ரைன் தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Patriot Interceptors குறைவாக உள்ள நிலையில், ரஷ்யா தனது தாக்குதல்களை அதிகரித்து வரும் சூழலில் இந்த உதவி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.…
-
கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் தாக்குதல் நடத்திய விடயத்தில் அந்த நபர் மீது பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள். ஆகத்து மாதம் 21ஆம் திகதி, அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார். அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர்…
-
உலக எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயார் – BRICS மாநாட்டில் புடின் பேச்சு
உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மேலும், BRICS நாடுகளுடன் வணிகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். BRICS வணிக மாநாட்டில் உரையாற்றிய புடின், “உலகம் ஆழமான மாற்றங்களை எதிர்கொள்கிறது. இந்த சூழலில், நாங்கள் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு பங்களிக்கவும், ஆர்க்டிக் போக்குவரத்து வழி மற்றும் வடக்கு-தெற்கு போக்குவரத்து வழி போன்ற நம்பகமான லாஜிஸ்டிக் பாதைகளை…
-
இளவரசி டயானாவின் ‘Revenge Dress’ ஏலம்!
பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது. 1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய திருமணத்திற்கு வெளியான உறவை ஒப்புக்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பான அதே இரவில், டயானா இந்த கருப்பு நிற “Christina Stambolian” ஆடையை அணிந்து பொது நிகழ்வில் கலந்துகொண்டார். இதன் காரணமாக இந்த ஆடை பின்னர் ‘Revenge Dress’…
-
இரு சிறுவர்களின் பலியெடுத்த குண்டு வீச்சு ; இலக்கு தவறியதால் வந்த வினை
தெஹிவளையில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுக்க – பஹல போபே பகுதியில் இந்த முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல், தவறான இலக்கில் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார். விசாரணைகளில், காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. மேலும், திட்டமிடப்பட்ட…
-
உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்கா.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ஈரான் படைகள்!
தங்களுடைய கடற்படைத் தளத்தை ஈரான் அழித்திருப்பதாக அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஈரானுக்கு அதிக அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஈரான் தாக்குதலில் பஹ்ரைன் கடற்படைத் தளம் சேதமடைந்திருப்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடர்ந்தன. இடையில் சில நாட்கள் நிறுத்தப்பட்ட நிலையில், அது, மீண்டும் இன்றுவரை தொடர்கிறது. இந்த நிலையில், ஈரான் தாக்குதலில் பஹ்ரைன் கடற்படைத் தளம் சேதமடைந்திருப்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.…
-
வேற்றுக்கிரகவாசிகள் உயிருடன் இருக்கின்றனவா? Secret-ஐ உடைத்த விஞ்ஞானிகள்!
வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதா என்ற கேள்வி சமீபகாலமாக அதிகமாக எழுப்பப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு, பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான மிக வலுவான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, K2-18b என்ற வேற்றுக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்ற தகவல் கவனம் பெற்றது. அதேபோல், செவ்வாய்க் கிரகத்தில் NASA-வின் Perseverance ரோவர் ஆய்வு செய்த ‘Cheyava Falls‘ என்ற பாறையிலும், உயிரினங்களின் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய சில அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக NASA தெரிவித்தது. ஆனால், பெரும்பாலான விஞ்ஞானிகள்…
-
மிகக் கடுமையான வெப்ப ஆண்டாக 2027 இருக்கும்- ஐரோப்பிய கால நிலை மையம் எச்சரிக்கை
ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெப்பம் நிலவிய மாதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. மேலும், வலுவடைந்து வரும் எல் நினோ காரணியால் வரவிருக்கும் நாட்களில் நிலவரம் இன்னும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் கடல் பரப்பில் உலகளாவிய வெப்பம் நிலவியதன் உச்சக்கட்டமாக, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கடுமையான வெப்ப அலைகளும் காட்டு தீயும் ஏற்பட்டன. கோப்பர் நிகஸ் காலநிலை மாற்ற சேவை…