Author: Six Side Media
-
2026 இறுதிக்குள் 3 கடுமையான புயல்கள் உருவாக வாய்ப்பு: இஸ்ரோ அதிர்ச்சி எச்சரிக்கை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடற்பகுதிகளில் தீவிர வானிலை மாற்றம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மூன்று தீவிர புயல் சூறாவளிகள் உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை…
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை அண்மித்த கடற்பகுதியில் இன்று (12) அதிகாலை 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகள் பகுதிக்கு வடகிழக்கே 69 கிலோமீட்டர் தொலைவில், ஜாவா கடலில் 368 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை (BMKG) தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் 5.9 ரிச்டர் அளவாக பதிவான நிலநடுக்கத்தின் அளவு, மேலதிக ஆய்வுகளுக்குப்…
-
ட்ரோன் தாக்குதல் – முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி
ஈரான் – அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கியமான 1,200 கிலோமீட்டர் நீளமுடைய ‘கிழக்கு – மேற்கு’ எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மாற்று வழித்தடமாக விளங்கும் இந்தக் குழாய் வழித்தடம், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் குழாய்…
-
9/11 நினைவு நாளில் ஹம்சா பின் லேடன் காணொளி வெளியீடு
அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அல்-கய்தா அமைப்பு ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது. அல்-கய்தாவின் உத்தியோகபூர்வ ஊடகமான ‘அஸ்-சாஹேப்’ ஊடாக வெளியிடப்பட்டுள்ள சுமார் 50 விநாடிகள் கொண்ட காணொளியில், ஹம்சா பின் லேடன் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘செப்டெம்பர் 11 தாக்குதல்களின் கால் நூற்றாண்டு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் காணொளியில், அல்-கய்தாவின் முன்னாள் தலைவர்…
-
மிசோரம் மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு
இந்தியாவின் மிசோரம் மாநிலம் கோலாசிப் மாவட்டத்தில் இன்று (12) அதிகாலை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். மிசோரம்–அஸ்ஸாம் எல்லைக்கு அருகிலுள்ள வைரேங்டே நகரில் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்சரிவில் சிக்கிய சோடிங்லியானா என்ற 14 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரது உடல் பொலிஸார் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டுள்ளது. காயமடைந்த…
-
டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’
டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார் செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடியும் புதினும் டெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, இதே Aurus Senat காரில் ஒன்றாகப் பயணம் செய்தனர். பாரத் மண்டபம் வளாகத்திலேயே நடந்த இந்தப் பயணம், இரு நாடுகளின் நெருக்கத்தைக் காட்டும் காட்சியாகவும் பேசப்பட்டது. பொதுவாக ஒரு…
-
BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு ‘திருக்குறள்’ புத்தகம் Gift
டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்று இந்தியப் பிரதமர் மோடி – புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “பிஷ்கேக்கில் நாங்கள் இருவரும் சந்தித்திருந்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளே டெல்லியில் அதிபர் புதினை மீண்டும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. இன்றைய சந்திப்பின் போது நாங்கள் கலந்தாலோசித்த முக்கியமான விஷயங்கள்: > ‘பொருளாதாரக் கூட்டுறவுத் திட்டம் 2030’-ஐ செயல்படுத்துவது உட்பட,…
-
BRICS 2026: “கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்” – வெளிப்படையாக சொல்லும் சீனா!
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா இணைந்து செயல்படும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் (Xu Feihong) தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் 18-வது BRICS உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். இதனையொட்டி, பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.…
-
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 12, 2026 சனி
பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி பிரதமை காலை 8.51 வரை பிறகு துவிதியை நட்சத்திரம் உத்திரம் பகல் 2.48 வரை பிறகு அஸ்தம் யோகம் மரணயோகம் ராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை எமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் அவிட்டம் பகல் 2.48 வரை பிறகு சதயம் சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் மேஷராசி…
-
டெல்லியில் ஒன்றுகூடும் உலக தலைவர்கள் – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (12) ஆரம்பமாகி, நாளை (13) நிறைவடையவுள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று டெல்லி வந்தடைந்துள்ளதுடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று இந்தியா வரவுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின்…