Author: Six Side Media

  • காண்டாமிருகங்களைக் கொல்ல குறிவைத்த வேட்டைக்காரர்கள்

    காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென யானைகள் அவர்களை தாக்கிய ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் வனவிலங்குகள் பூங்கா ஒன்றில் நுழைந்த சட்டவிரோத வேட்டைக்காரர்கள் இருவர், காண்டாமிருகங்களை அவற்றின் கொம்புகளுக்காக கொல்ல திட்டமிட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவிலுள்ள Kruger வனவிலங்குகள் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக குட்டை ஒன்றில் காண்டாமிருகங்கள் திரண்டிருக்க, வேட்டைக்காரர்கள் அந்த காண்டாமிருகங்களை தங்கள் துப்பாக்கியால் குறிவைத்துள்ளார்கள். விடயம் என்னவென்றால், தங்களுக்குப் பின்னால் யானைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே மறைந்திருப்பதைக்…

  • ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி

    பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். கொள்ளைச் சம்பவத்தில்…

  • ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு

    கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற ‘State of the Union’ உரையில் வெளியிட்டார். கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு…

  • ரூபாய் 5000 கோடி சொத்து இருந்தாலும் தெருவில் பிச்சை எடுத்த எம்.எல்.ஏ

    மும்பையில் 5000 கோடி  மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலத்தின் மிக முக்கிய கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா இவர் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். தொழிலதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. இவ்வளவு ஆடம்பர வசதிகள் இருந்தாலும் அவர் ஏன்…

  • சர்வதேச எல்லையில் இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல்

    சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தூதர்…

  • ‘நாட்டில் இருந்து வெளியே போங்க..’ ஜெர்மனியில் வெடித்த புதிய சர்ச்சை

    2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்களுக்கு ஜெர்மனி தற்காலிக பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உக்ரைனுக்கான ஜெர்மனியின் ஆதரவு குறித்து அந்நாட்டில் அரசியல் விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஜெர்மனியின் வலதுசாரி கட்சியான AfD-இன் இணைத் தலைவர் Alice Weidel, ’ஜெர்மனியில் வசிக்கும் உக்ரைனியர்கள், குறிப்பாக ராணுவ வயதில்…

  • விண்வெளியிலும் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா

    விண்வெளியை மையமாகக் கொண்டு அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே போட்டி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை செயலாளர் ட்ராய் மெய்ன்க் (Air Force Secretary Troy Meink) தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேரிலாந்தில் நடைபெற்ற Air, Space and Cyber Conference மாநாட்டில் பேசிய ட்ராய் மெய்ன்க், அமெரிக்கா தற்போது விண்வெளியில் இருந்து செயல்படும் ஆயுதத் திறன்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவின்…

  • சவுதி மண்ணுக்குள் புதைந்திருந்த பிரம்மாண்ட புதையல்.. உலகமே உற்றுநோக்கும் பின்னணி!

    எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் இருந்து பல்வேறு துறைகளில் விரிவடைய சவுதி அரேபியா முயற்சித்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் யுரேனியம் தாது இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சுமார் 11 கோடி டன் யுரேனியம் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார். வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) 70-வது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சவுதி அரேபியா தொடர்ந்து…

  • HOLLYWOODல் REMAKE ஆகும் ‘மகாராஜா’

    விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து, திரையரங்கிலும் OTT-யிலும் பெரும் வரவேற்பு பெற்றது. சீனாவில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, ஹாலிவுட் ஏஜென்சி ஒன்று ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்க, இது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்ப்படமாகும். விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான…

  • சீ.வீ.கே.சிவஞானம், சுமந்திரன் உட்பட 5 தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

    இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் விதிகளை மீறி நீக்கியமைக்கு எதிராக, தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர்…