Author: Six Side Media
-
நாமல் ராஜபக்ஷவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையிலேயே அவருக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானமும் அன்றைய தினமே அறிவிக்கப்படும்…
-
குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு
குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண் படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக நேற்று (15) தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னமே கடந்த பங்குனி 30 ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவித தடயங்களும்…
-
மகன், மகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட சூர்யா – ஜோதிகா!
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள் சூர்யா- ஜோதிகா தம்பதி. இவர்கள் 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் முன்மாதிரி தம்பதியாக திகழ்கின்றனர். நட்சத்திர தம்பதியர்களான சூர்யா- ஜோதிகா ஜோடி திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நடிகை ஜோதிகா தெரிவிக்கையில், தங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து…
-
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார். இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியை நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்த NBC செய்தி நிறுவனத்தின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். லொஸ் ஏஞ்சலிஸ் நகரின் பரபரப்பான பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான காட்சிகளை NBC செய்தி நிறுவனம் உலங்கு வானூர்தி மூலம் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. இதன்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த உலங்கு வானூர்தி வீதியில் விழுந்து நொறுங்கியதுடன், தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை மூன்று உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.…
-
தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை
தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பாடசாலை நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருச்சி…
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், பாதுகாப்புச் சபையின் 2140 மற்றும் 2216 ஆகிய தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஹூதி அமைப்பிற்கு ஆயுதங்கள், நிதி மற்றும் தொழில் நுட்ப உதவி செல்பவை…
-
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!
ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் தற்போது 107,677 முதியவர்கள் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும். இதில் 88% பேர் பெண்கள் ஆவர். கியோட்டோ (Kyoto) நகரத்தைச் சேர்ந்த 114 வயதான கிஷிமோட்டோ ஃபுயோ (Kishimoto Fuyo) மிகவும் வயதான பெண்ணாகவும், குமாமோட்டோவைச் (Kumamoto) சேர்ந்த 112 வயதான காடோ…
-
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்தி ஒன்றை, வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது. மெக்காவுக்கு தெற்கே வைத்து, தடைசெய்யப்பட்ட வான்பரப்பிற்குள் நுழைவதற்கு முன்னரே குறித்த ஆளில்லா வானூர்தி வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக கூட்டுப் படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார். மெக்கா மற்றும் மதினா ஆகிய புனித நகரங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தங்களுக்குச் சிவப்புக்…
-
தென் கொரியாவில் இலங்கையர்கள் குழுவொன்று கைது!
தென் கொரியாவில், இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் குழுவினர், கஞ்சா பயன்படுத்தி ஹாஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.