Author: Six Side Media
-
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்
3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார். மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள்…
-
மாத்திரைகள் தேவையில்லை? : மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய சாதனம்!
மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதற்கான புதிய ‘Brain Stimulation Headset’ சாதனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த ‘Flow Neuroscience’ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் சாதனம், நெற்றியில் அணிந்து சுமார் 30 நிமிடங்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனத்தின் மூலம் 10 வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான கட்டணம் 2,200 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 174 பேரை உள்ளடக்கிய ஆய்வில், இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி 10 வார சிகிச்சையை மேற்கொண்டவர்களில் 45 சதவீதம் பேருக்கு மனச்சோர்வு அறிகுறிகளில்…
-
ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் பாராளுமன்றத் தேர்தல் இறுதி நாளான இன்று (20), உக்ரைன், மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை நோக்கி மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் கூற்றுப்படி, தலைநகரை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் மாஸ்கோ பிராந்தியத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது மாஸ்கோவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் சேதமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன்…
-
அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி!
அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான…
-
கனடாவில் சிறுவனிடம் மோசமாக நடந்த இலங்கையர் கைது
கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக…
-
ஈரானின் “CODE 100” எச்சரிக்கை? அமெரிக்கா, இஸ்ரேலுக்கு திடீர் அலர்ட்! என்ன நடந்தது?
ட்ரம்பின் பயணம் திடீரென குறைக்கப்பட்டதும், தடை செய்யப்பட்ட வான்வெளியில் நுழைந்த பொதுவிமானத்தை NORAD F-16 இடைமறித்ததும் அமெரிக்க பாதுகாப்பு கவலைகளை தூண்டியுள்ளன. இதே நேரத்தில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதனுடன், ஈரான் ராணுவம் Code 100 என்ற உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன. மத்திய கிழக்கில் ஏற்கெனவே நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் Camp David பயணம் முன்கூட்டியே…
-
விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றிய போது தான் ஒரு விடுதலைப் புலி என பகிரங்கமாகக் குறிப்பிட்டமை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ரணிலின் கவனத்திற்கு கொண்டுவந்த…
-
விண்வெளியிலும் குப்பை பிரச்சினை: பூமியின் சுற்றுப்பாதையை சுத்தம் செய்யும் முயற்சியில் உலக நாடுகள்!
பூமிக்கு மேலே நம்மால் பார்க்க முடியாத ஒரு மிகப்பெரிய பிரச்சினை உருவாகிக் கொண்டிருக்கிறது! அது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குப்பைகள் என எச்சரிக்கப்படுகிறது. செயலிழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள், சிறிய உலோகத் துண்டுகள், பெயிண்ட் துகள்கள் என பூமியைச் சுற்றி ஏராளமான பொருட்கள் வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்களுக்கே மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்தக் குப்பைகளை எப்படி சுத்தம் செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. Low Earth Orbit…
-
பாகிஸ்தானுக்கு ஹவுதி பகிரங்க எச்சரிக்கை.. ஆபத்தில் மெக்கா ஒப்பந்தம்?
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலால் வளைகுடா பகுதியில் தொடங்கிய போர், சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இடையேயான தீவிர மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தச்சூழலில் தான், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இது ’மெக்கா ஒப்பந்தம்’ (Mecca Pact) எனப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல்…
-
சவுதி தாக்குதலுக்குப் பின் சொந்த மக்களுக்கு US எச்சரிக்கை!
ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டு ஹவுதிக்கள் – சவுதி அரேபியா இடையே நடந்துவரும் தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சவுதியின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு அருகில் கூட அண்மையில் ஹவுதி படை தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது.…