Author: Six Side Media

  • வெள்ளை மாளிகைக்குள் செய்தி நிறுவனங்கள் தடை: “இரும்புத் திரை” – அமெரிக்காவைச் சாடும் ஈரான்

    CNN, MS NOW, Politico ஆகிய மூன்று அமெரிக்கச் செய்தி நிறுவனங்களையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் சென்று செய்தி சேகரிக்கத் தடை விதித்துள்ளார். ட்ரம்பின் இந்த நகர்வை எதிர்த்து இந்த மூன்று செய்தி நிறுவனங்களும் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றன. மேலும், அமெரிக்காவின் முக்கியச் செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகை கவரேஜைத் தவிர்த்து வெள்ளை மாளிகைக்கு நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “ஒரு நிர்வாகம் தன் கதவுகளை…

  • ட்ரம்ப் போட்ட தடை; வெள்ளை மாளிகை கவரேஜைப் புறக்கணித்த US செய்தி நிறுவனங்கள்

    அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை அதிகம் விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களில் முக்கியமானவை – CNN, MS NOW மற்றும் Politico. இதை ட்ரம்ப் விரும்பவில்லை. இதனால், இந்த மூன்று செய்தி நிறுவனங்களையும் ‘போலிச் செய்திகளைப் பரப்புகின்றன’ என்று வெள்ளை மாளிகைக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை செய்தார் ட்ரம்ப். இந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியானது. போலிச் செய்திகளைப் பரப்பினால் (அதாவது ட்ரம்ப்பை விமர்சிக்கும் செய்திகளை வெளியிட்டால்) இன்னும் பல செய்தி நிறுவனங்கள்…

  • காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

    இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதுவரை காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இன்று தொடங்கி வைத்துள்ள இந்தத் திட்டத்தின் மூலம் காலை உணவை 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது…

  • `Views அதிகமாகணும்!’ – 9 வயது சிறுவன் செய்த Click… அப்பாவின் ₹1.13 கோடி காலி!

    YouTube-ல் வீடியோ போட்டால் views வரணும், subscribers அதிகமாகணும் என்பதுதான் பல Content Creators-ன் ஆசை. ஆனால், அதற்காக ஒரு 9 வயது சிறுவன் செய்த காரியம் தற்போது இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது! அமெரிக்காவைச் சேர்ந்த Mike என்ற சிறுவன் ‘Mighty Mike Plays’ என்ற YouTube சேனலில் Minecraft மற்றும் Roblox கேமிங் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். வீடியோக்களுக்கு போதிய views வராததால் அவர் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது தந்தை Dave முதலில் ஒரு…

  • பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்

    மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் இந்த விநாயகரைத் தரிசிக்க பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். லால்பாக் ராஜாவைத் தரிசிக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கெளரி, மகள் சுஹானா, பெண் மேலாளர் பூஜா ஆகியோருடன் வந்திருந்தார்.…

  • “டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்” – உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

    உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது அமெரிக்கா. இந்தப் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை, தடைகள், சட்டங்கள் எனக் கடுமையாக முயன்று வருகிறார். இந்தச் சமயத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவின் தற்போதைய நிலை என்று தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… “உக்ரைன் உடனான போரின் காரணமாக, துரதிர்ஷ்டவசமாக ரஷ்யா தனது டீசல் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ரஷ்யாவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான டீசல் சுத்திகரிப்பு…

  • அனோஜனின் நிலை தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்!

    ​”சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம் வாழ வேண்டிய நிலை தொடருகின்றது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ​கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர், ​சைவ சமயத்தின்…

  • அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு விடுதலையையும், மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியிலே நேற்று (21) மாலை மெழுகுதிரி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது. தன்னார்வ இளைஞர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 22, 2026 செவ்வாய்

    பஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி ஏகாதசி இரவு 9.18 வரை பிறகு துவாதசி நட்சத்திரம் உத்திராடம் காலை 7.38 வரை பிறகு திருவோணம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 7.38 வரை பிறகு திருவாதிரை சூலம் வடக்கு பரிகாரம் பால் மேஷம்…

  • அட்லி இயக்கும் “ராக்கா” படத்திற்கு கின்னஸ் சாதனை

    அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை ‘ராக்கா’ படம் படைத்திருக்கிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘ராக்கா’. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன் இணைந்துள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா,…