Author: Six Side Media
-
விமானத்தில் 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி – பிரதமர் மோடி பாராட்டு
டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 180 பேருடன் புறப்பட்ட ‘ஃபிளை டுபாய்’ விமானத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் துணிச்சலுடன் சமாளித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பில் உரையாடினார். செப்டம்பர் 30ஆம் திகதி காலை புறப்பட்ட அந்த விமானத்தில் 174 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேர் இருந்தனர். இந்திய விமானி ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கிய நிலையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த…
-
ஃபிளைதுபாய் விமான சம்பவம் | விசாரணையில் வெளியான துணை விமானியின் பகீர் தகவல்கள்!
துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும்…
-
வரலாற்றில் இல்லாத பேரிடர் : ஐரோப்பாவை உலுக்கிய இயற்கை
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐரோப்பிய கோடை காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலைகள் வீசின. இந்த கோடைகால வெப்பத்தின் தீவிரத்தின் காரணமாக 34,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் வெப்பம் சார்ந்த நோய்கள் காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஐரோப்பிய வரலாற்றில் வெப்பத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரிடராக இது பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேரிடரின் விரிவான அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை’ (Copernicus Climate…
-
உலகையே அச்சுறுத்திய 16 வயது சிறுவன் – KillSec ஊடுறுவல் குழுவின் முக்கிய புள்ளியை தூக்கிய Europol
ஐரோப்பா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நடவடிக்கையின்போது, KillSec எனப்படும் ஊடுறுவல் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராக சந்தேகிக்கப்படும் 16 வயதான ருமேனிய இளைஞர் ஒருவர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயினின் அலிகான்டே நகரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், KillSec குழுவின் நிர்வாகி மற்றும் முக்கிய செயற்பாட்டாளர் என அவர் சந்தேகிக்கப்படுவதாகவும் Europol தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது மேலும் இருவர் பிரித்தானியா மற்றும் ருமேனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன், ஸ்பெயின், க்ரீஸ், ருமேனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் எட்டு…
-
இமயமலையில் பனிச்சரிவு.. சுமைதூக்கும் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழப்பு
நேபாளத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மானாங் மாவட்டத்தில், 7 ஆயிரத்து 126 மீட்டர் உயரம் கொண்ட ஹிம்லுங் ஹிமால் மலையின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தொழிலாளர்கள் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் வருவதற்கு முன்பாக, முகாமில் கூடாரங்கள் அமைத்தல் மற்றும் பாதைகளுக்கான கயிறுகளைக் கட்டுதல் போன்ற ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. நேபாள தேசிய மலை வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் துல்…
-
இலட்சங்களை அள்ளிக் கொடுத்து ‘காதல்’ அனுபவம் – இந்த புது ட்ரெண்ட் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
சீனாவில் இளம் பெண்கள் மத்தியில் ஆண் அழகர்களை கட்டணம் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி, காதலர்களைப் போன்ற நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்துக்கொள்ளும் புதிய சேவை பிரபலமடைந்து வருகிறது. இந்தச் சேவையை வழங்கும் பிரத்தியேக ஸ்டுடியோக்கள் மற்றும் உணவகங்களில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஆண் அழகர்களின் தோற்றம், உயரம் மற்றும் பிரபலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு Catalogue மூலமாகத் தெரிவு செய்ய முடியும். கை கோர்த்து நடப்பது, அன்பைப் பரிமாறிக் கொள்வது போன்ற பல்வேறு கருப்பொருள்களில் இவர்கள் நிழற்படங்களை…
-
“இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” சர்ச்சையைக் கிளப்பிய எலான் மஸ்க்!! மெட்டாவுக்கு எதிரான போட்டி?
உலகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக செயலிகளில் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் முக்கியமானது. 300 கோடிக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களைக் கொண்ட இந்தச் செயலில், ஏறத்தாழ ஆண்களும் பெண்களும் சமமாக இருப்பதாகவே தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில் தான், நேற்றைய தினம் ”இன்ஸ்டாகிராம் கணக்கை தான் நீக்கிவிட்டதாகவும், அந்தத் தளம் அடிப்படையிலேயே பெண்களை மையப்படுத்திய செயலி” என்றும் எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” என மீண்டும் ஒரு தெரிவித்திருக்கிறார். அவரது…
-
2 முறை மரண ஊசி : பெண் உயிர் தப்பியது எப்படி ? ரத்தாகுமா மரண தண்டனை?
அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாகாணத்தின் நாக்ஸ்வில் நகரில், 1995-ஆம் ஆண்டு 19 வயதான கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்ற இளம்பெண்ணை, கிறிஸ்டா பைக் (Christa Pike) என்ற 18 வயது இளம்பெண் தனது காதலரோடு சேர்ந்து சித்தரவதை செய்து கொலை செய்தார். இந்த வழக்கில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் 1996-இல் கிறிஸ்டா பைக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. எனினும் அவரது வழக்கறிஞர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான வழக்கு…
-
சர்வதேச சந்தையில் டீசல் தட்டுப்பாடு – அமெரிக்காவின் அதிரடி முடிவால் உச்சமடையும் எரிபொருள் விலை!
சர்வதேச சந்தையில் நிலவும் கடுமையான டீசல் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளப்படும் டீசல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் கையிருப்பில் உள்ள அவசரகால டீசல் இருப்புகளை சந்தைக்கு விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க விவசாயிகள், சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக…
-
மாநில நெடுஞ்சாலை பலகையில் இந்தி! இரவோடு இரவாக மறைக்கப்பட்ட எழுத்துகள்!அதிகாரிகள் பணிநீக்கம்!
தமிழ்நாட்டில்.. குறிப்பாக அரசு அமைக்கும் வழிகாட்டிப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் இடம்பெறுவது வழக்கம்.. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழியும் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் SH-93 சாலைப் பகுதியில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் வழிகள் மற்றும் தொலைவு விவரங்கள் இடம்பெற்றிருந்தன. வழக்கமாக…